Thu04182024

Last updateSun, 19 Apr 2020 8am

ஜனாதிபதியும் பிரதமரும் கூறிய வாக்குறுதியை உறுதிசெய்ய வலியுறுத்தல்

கடந்த இரு தேர்தல்களின் போது இன்றைய ஜனாதிபதியும், பிரதமரும் ஜனநாயகத்தை உறுதிப்படுத்துவது குறித்து பல வாக்குறுதிகளை மக்களிற்கு வழங்கியிருந்தனர். அதில் ஒன்று கடந்த மகிந்த ஆட்சியில் அரசியல் காரணங்களால் உயிருக்கு ஆபத்து இருந்தமையால் புலம்பெயர்ந்த அனைவரையும் மீள வந்து அரசியலில் ஈடுபடும் சுதந்திரம் குறித்து மேடை மேடையாக வாக்குறுதிகளை வழங்கியிருந்தனர். வழங்கிய வாக்குறுதியினை ஜனாதிபதியும் பிரதமரும் உறுதிப்படுத்த தவறி விட்டனர் என அரசியல் கட்சிகள், தொழிற்சங்கவாதிகள், கலைஞர்கள் மற்றும் சிவில் சமூக ஆர்வலர்கள் கூறுகிறார்கள்.

அரசியல் காரணங்களால் புலம் பெயர்ந்த குமார் குணரத்தினம் உட்பட சகலரதும் அரசியல் மற்றும் குடியியல் உரிமைகளை கொடுத்த வாக்குறுதிகளுக்கு அமைய வழங்குமாறு கோரி உறுதிப்படுத்த ஜனாதிபதி மற்றும் பிரதமருடன் சந்திப்பொன்றினை நிகழ்த்த அனுமதி கோரி கடிதம் ஒன்றினை அரசியல் கட்சிகள், தொழிற்சங்கவாதிகள், கலைஞர்கள் மற்றும் சிவில் சமூக ஆர்வலர்கள் கையொப்பமிட்டு அனுப்பி வைத்துள்ளனர்.

"ஜனாதிபதிக்கான தேர்தலின் போது  இலங்கையர்களின் ஜனநாயகம் மற்றும் அரசியல் உரிமைகள் உறுதி செய்யப்படும் என தெரிவித்து ஆட்சியை கைப்பற்றிய பின்னர் பாராளுமன்ற தேர்தலின் போது தமது பாதுகாப்புக்காக நாடு தப்பி ஓடி அனைத்து இலங்கையர்களுக்கும் நாட்டிற்கு திரும்ப ஒரு திறந்த அழைப்பு விடுக்கப்பட்டது. அரசாங்கத்தின் வாக்குறுதியினை நம்பி நாட்டிற்கு திரும்பியவர்களை சிறையில் அடைத்து தொந்தரவு செய்வதனை பார்க்கும் போது இவர்கள் கொடுத்த வாக்குறுதிகளில் எமக்கு சந்தேகம் ஏற்ப்பட்டுள்ளது.

எனவே அரசியல் காரணங்களால் அச்சுறுத்தலுக்கு உள்ளாகி நாட்டை விட்டு வெளியேறிய குமார் குணரத்தினம் உள்ளிட்ட அனைவரினதும் அரசியல் உரிமைகள் குறித்து அரசாங்கத்தின் நிலைப்பாட்டை அறிந்து கொள்வதற்க்காக ஜனாதிபதி மற்றும் பிரதமருடன் ஒரு சந்திப்புக்கு அனுமதி கேட்கப்பட்டுள்ளது" என குறித்த கடிதத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த கடிதத்தில் அரசியல் கட்சிகள், தொழிற்சங்கவாதிகள், கலைஞர்கள் மற்றும் சிவில் சமூக ஆர்வலர்கள் என பலர் கையெழுத்து இட்டு அனுப்பி வைத்துள்ளனர்.

Mahinda Devage (Socialist Party),

Sirithunga Jayasuriya (United Socialist Party),

Widarshana Kannangara ( Praxis Collective),

MGK Athula (Joint Federation of Trade Unions),

PD Saranapala (State United Management Services Union),

Dhammika Munsinghe (Combined Association of Unemployed Graduates),

Sarath Kahagalla (Ceylon Independent Teachers’ Union),

JB Gurusinghe (Information and Telecommunications Workers Union),

Sylvester Jayakody (Ceylon Mercantile Industrial and General Workers Union -CMU), 

Susantha Thillekaratne (Printing Technicians’ Union),

Mayura Senanayake (Lanka Pragathi Teachers’ Union),

Sarath Preethilal (Sri Lanka Janaraja Health Services Union),

Gayan Ganakadhara (Musician),

Lal Hegoda (Artist),

Indrachapa Liyanage (Musician)

Kaushalya Kurukulasuriya (Writer),

Kingsley Lose (Actor),

Charith Lorensuhewa (Musician),

Madhawa Sudantha (Musician),

Dharmasena Pathiraja (Film Director),

Prasanna Withanage (Film Director),

Priya Ranasinghe (Actress)

Asela Rangadeva (Lecturer),

Samanali Fonseka (Actress),

Saumya Liyanage ( Actor),

Shakya Weerasinghe (Musician) 

Wiraj Liyanarachchi (Firm Director).