Thu03282024

Last updateSun, 19 Apr 2020 8am

இலங்கை இஸ்லாமியப் பயங்கரவாதத்தின் இலக்கு எது என்பது குறித்து..!

இலங்கை இஸ்லாமிய பயங்கரவாதமானது, தமிழ் மக்களை இலக்கு வைத்தது என்பது தற்செயலானதல்;ல. சிங்கள – பௌத்த சமூகத்தை குறிவைப்பதை, இஸ்லாமியப் பயங்கரவாதம் தவிர்த்திருக்கின்றது. 1980 க்குப் பிந்தைய இஸ்லாமிய அரசியல் வரலாறு என்பது, பௌத்த பேரினவாதத்துடன் கூட்டு அமைத்துக் கொண்டு தமிழ் மக்களை ஒடுக்கியது தான். மிக திட்டமிட்ட நீண்ட அரசியல் நகர்வின், மற்றொரு பரிணாமமாகவே இஸ்லாமிய பயங்கரவாத தாக்குதலை புரிந்து கொள்ள முடிகின்றது.

இது வரலாற்று ரீதியானதும் கூட. இலங்கையில் இஸ்லாமிய அடிப்படைவாதம் முதல் அரசியல் வரை, தமிழ் மக்களை எதிரியாக முன்னிறுத்தியே அரசியலை நடத்தி வந்திருக்கின்றது, நடத்தி வருகின்றது. ஆளும் பௌத்த பேரினவாதத்துடன் கூட்டு அமைத்துக் கொண்ட முஸ்லிம் மத அடிப்படைவாத அரசியல் என்பது, தமிழ் மக்களை ஒடுக்குவது தான். முலையகக் கட்சிகள் போல் பிழைப்புவாதக் கட்சியாகவும், தமிழ் மக்களை எதிரியாக காட்டும் மதவாதக் கட்சியாகவுமே தன்னை நிலைநிறுத்தி வந்திருக்கின்றது.

தமிழ்மொழி பேசும் மக்கள் என்ற பொது அடையாளத்தையோ, அல்லது முஸ்லிம் சிறுபான்மை இனம் என்ற வரையறையைக் கொண்டு, பேரினவாதத்துக்கு எதிராக தன்னை அமைப்பாக்கிக் கொண்டது கிடையாது. அதாவது தமிழ்மொழி பேசும் மக்களுக்கு எதிரான இனவொடுக்குமுறையை எதிர்த்து கட்சியைக் கட்டியது கிடையாது. மாறாக இஸ்லாமிய மதவாத கட்சியாக, தமிழ் மக்களுக்கு எதிராக, ஆளும் தரப்புகளுடன் கூட்டுச் சேர்ந்த நடவடிக்கைகள் தான் வரலாறாக நீண்டு கிடக்கின்றது.

புலிகள் மேற்கொண்ட முஸ்லிம் மக்கள் மீதான தாக்குதலுக்கு முன்னமே உருவான முஸ்லிம் கட்சிகளின், இஸ்லாமிய அரசியல் உள்ளடக்கம் இதுதான். புலிகளின் பயங்கரவாதமானது முஸ்லிம் மக்களை தாக்கிய போது, அரச பயங்கரவாதத்துடன் இணைந்து "ஜிகாத்" போன்ற இஸ்லாமிய பயங்கரவாத கூலிக் குழுக்களையே கிழக்கில் உருவாக்கியதுடன், தமிழ் மக்களுக்கு எதிராக வெறியாட்டத்தை போட்டது. இப்படி அரச பயங்கரவாதத்துடன் கூடிக் கும்மாளம் போட்ட போது, தமிழ் மக்கள் தான் எதிரி. தேர்தல் அரசியல் கட்சிகளாக இருந்த, இஸ்;லாமிய கட்சிகள் அனுசரணையாகவே இருந்தனர்.

2009 புலிகளின் அழிவின் பின் முஸ்லிம் தலைமைத்துவங்கள் தமிழ்மக்களை குறிவைத்து ஒடுக்குவதில், பேரினவாதத்தை மிஞ்சி நின்றனர், நிற்கின்றனர். கிழக்கு, மன்னார், வவுனியா .. எங்கும் அரச ஆதரவு பெற்ற இஸ்லாமிய தலைவர்கள், தமிழ் மக்களை ஒடுக்கும் இஸ்லாம் என்ற அடிப்படைவாதத்தை முன்னிறுத்தியே வருகின்றனர்.

இலங்கை இஸ்லாமிய கட்சிகள், இனத்தை பிரதிநிதித்துவப்படுத்துவதில்லை. மதத்தையே பிரதிநிதித்துவம் செய்கின்றனர்.

இப்படி 1980 முதல் பௌத்த பேரினவாத ஆளும் தரப்பின் கூட்டாளியாக இருக்கக் கூடிய கட்சிகள், தமிழ்மக்களை தவிர வேறு யாரையும் எதிரியாக முன்னிறுத்த, அதனிடம் எதுவும் இருக்கவில்லை.

இப்படி உருவானது தான் இலங்கை இஸ்லாமிய அடிப்படைவாதம். அது தமிழ்மக்களை எதிரியாக காட்டி கட்டமைக்கப்பட்டது. சர்வதேச எதிரியாக மேற்கும் (வெள்ளையினமும்), உள்நாட்டு எதிரியாக தமிழினமும் என்பது தான், இலங்கையின் இஸ்லாமிய சர்வதேசிய பயங்கரவாதமாகும். இதுதான் தமிழ் மக்களையும், வெள்ளையின மக்களையும் குறிவைத்த பொதுப் பின்னணியாகும்.