Fri03292024

Last updateSun, 19 Apr 2020 8am

ஆளும் வர்க்க அடிவருடி பார்ப்பான் சோவின் கண்டுபிடிப்பு

உரிமை மறுக்கப்பட்டால் அதற்கு எதிராக  போராடுவது, தீவிரவாதம் என்பது சோவின் பார்ப்பன கண்டுபிடிப்பு. காஸ்மீர் மக்கள் மீதான இந்திய அரசின் படுகொலைகளை நியாயப்படுத்த, இலங்கை அரசு மனிதஉரிமை மீறல்களை செய்யவில்லை எனவும் இலங்கையில் நடந்தது தீவிரவாதத்திற்கெதிரான அரசதர்மம் எனவும் இன அழிப்பு மனிதப்படுகொலைக்கு வியாய்க்கியானம் வேறு சொல்லுகிறான்.

 

-உரிமை மறுக்கப்படுகிற மக்கள் தீவிரவாதத்தை மேற் கொள்வதில் எந்தத் தவறும் கிடையாது என்று நாம் சொல்வோமானால், காஷ்மீரிலும் அதே வாதத்திற்கு இடமளித்து விடுவோம். காஷ்மீருக்கு ஒரு அளவுகோல், இலங்கைக்கு ஒரு அளவுகோல் என்று நாம் செயல்படக் கூடாது. காஷ்மீரில் மனித உரிமை மீறல்கள் நடக்கின்றன. இது பற்றி விசாரிக்க வேண்டும் என்று அமெரிக்கா ஒரு தீர்மானத்தை ஐ. நா.வின் மனித உரிமைக் கெளன்ஸில் முன்பு கொண்டு வந்தால், ‘ஆஹா... இதுதான் நியாயம்’ என்று நாம் அதை வரவேற்போமா? அல்லது ஐ. நா. சபைக்கு இது பற்றி பேச அருகதை இல்லை’ என்று கூறுவோமா?-

என தனது ஆளும் வர்க்க விசுவாசத்தை காட்டி வக்காலத்து வாங்கும் மக்கள் விரோதி தான்  சோ.

---முரளி 06/04/2012