Thu03282024

Last updateSun, 19 Apr 2020 8am

புலம்பெயர் தமிழர்களுடன் தொடர்பு, ஏகாதிபத்திய சூழ்ச்சி உள்ளது என்று சொல்வதெல்லாம் அரசுக்கு ஏற்பட்டுள்ள நோய்! புபுது ஜாகொட

 

altபிரச்சினைகளுக்கு பதில் வழங்குவதற்கு பதிலாக பூச்சாண்டி காட்டும் அரசியலை அரசாங்கம் மேற்கொண்டு வருகிறது என்று முன்னிலை சோஷலிசக் கட்சியின் பிரசார செயலாளர் புபுது ஜாகொட தெரிவித்துள்ளார். கொழும்பில் நேற்று (03) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் அவர் இவ்வாறு கூறியுள்ளார்.

 

கடந்த 24ஆம் திகதி முதல் 28ஆம் திகதி வரை விரிவுரையாளர்கள், மாணவர்கள் மேற்கொண்ட இரண்டு பேரணிகள் நடைபெற்றன. அந்த பேரணிகள் இரண்டும் முடிந்த மறுதினமான 29ஆம் திகதி அரசாங்கத்தின் ஊடக செய்திகள் மற்றும் அரசியல் நிகழ்ச்சிகளில் முன்னிலை சோஷலிசக் கட்சி மீது குற்றம் சுமத்தும் படலம் ஆரம்பிக்கப்பட்டது.

விரிவுரையாளர்கள் மற்றும் மாணவர்களின் பேரணி, ஏகாதிபத்தியவாதிகள் மற்றும் புலம்பெயர் தமிழர்களின் திட்டத்தின் கீழ் நடைபெறுவதாக அவர்கள் கூறுகிறனர். இது அரசாங்கத்தை கவிழ்க்கும் சூழ்ச்சி எனவும் அவர்கள் தெரிவிக்கின்றனர். அத்துடன் எமது கட்சியின் அரசியல் சபை உறுப்பினர் குமார் குணரட்னம் இதனுடன் சம்பந்தப்பட்டுள்ளதாக கூறுகின்றனர். அவர் புலம்பெயர் தமிழர்களின் தலைமையாளர் எனவும் விடுதலைப்புலிகளுடன் நெருங்கிய தொடர்புகளை கொண்டிருப்பதாகவும் அரசாங்க ஊடகங்களில் செய்திகள் வெளியிடப்படுகின்றன.

29ஆம் திகதி அரச ஊடகங்களில், வெளியிடப்பட்ட செய்தியொன்றில், மாணவர்களை கொலை செய்து அதன் மூலம் அரசாங்கத்தை அசௌரியத்திற்கு உள்ளாக்கும் திட்டம் இருப்பதாகவும்,  அதன் ஊடாக போராட்டத்தில் ஈடுபடும் விரிவுரையாளர்களுக்கு அவுஸ்த்ரேலியாவில் குடியுரிமையை பெற்றுக்கொடுக்க எமது கட்சி வாக்குறுதியளித்துள்ளதாகவும் அரசாங்க ஊடகங்கள் குற்றம் சுமத்தின.  அத்துடன் சில விரிவுரையாளர்கள் வெளிநாடு சென்றால், அவர்கள் புலம்பெயர் தமிழர்களுடன் பேச்சுவார்த்தை நடத்துவதற்காகவே செல்கின்றனர் எனக் கூறுகின்றனர்.

தற்போது பூனை பொதியில் இருந்து குதித்துள்ளது. அரசாங்கம் கொலை சூழ்ச்சி குறித்து கூறுகிறது. விபத்தில் கொல்லப்பட்ட மாணவர்களின் கொலை திட்டமிட்டு மேற்கொள்ளப்பட்டது என அரசாங்கத்தின் ஊடகங்கள் கூறுகின்றன.

எஸ்.பி. திஸாநாயக்க இப்படி கூறியிருந்தார். மாணவர்கள் அமைப்பினர் இந்த கொலை திட்டமிட்டு செய்யப்பட்டதாக சந்தேகம் ஏற்பட்டுள்ளதாக கூறுகின்றனர்.  அரசாங்கமும் அதே நிலைப்பாட்டில்தான் உள்ளது என அவர் குறிப்பிட்டிருந்தார். இதனார் விசாரணை நடத்தி,  இந்த கொலையுடன் சம்பந்தப்பட்டவர்கள் குறித்த தகவல்களை வெளியிடுமாறு நாம் சவால் விடுக்கின்றோம்.என்று குறிப்பிட்டார்