Thu03282024

Last updateSun, 19 Apr 2020 8am

காசாவில் தொடரும் தாக்குதலை கண்டித்து உலகமெங்கும் வீதிகளில் போராட்டம்!!

இஸ்ரேலிய சியோனிச அரசால் அமெரிக்காவின் ஆசீர்வாதத்துடன் காசாவில் வாழும் பலஸ்தீன மக்கள் மீது நிகழ்த்தப்பட்டுக் கொண்டிருக்கும்  கண்மூடித்தனமான தாக்குதலை கண்டித்து, உலக நாடுகள் எங்கும் மக்கள் வீதிகளில் இறங்கி போராடுகின்றார்கள். குறிப்பாக இஸ்ரேலின் வீதிகளில் இறங்கி யூத இன மக்கள் தாக்குதலைக் கண்டித்து தமது அரசுக்கு எதிராக போராடுகின்றனர்.


இதனை விடவும் படுமோசமான தாக்குதலை இலங்கை அரசு வல்லரசுக்களின் ஆசீர்வாதத்துடன் மேற்க்கொண்டு இந்த நூற்றாண்டின் மிகப்பெரும் இனப்படுகொலையினை நடத்தியது. அந்த வேளையில் புலம்பெயர்ந்த தமிழ் மக்களை தவிர வேறு எந்த நாட்டு மக்களும் பெரிதாக வீதிகளில் இறங்கிப் போராட முன்வரவில்லை.

இதற்க்கான காரணம் என்ன? ஏன் உலக மக்கள் தமிழ் மக்களின் மீதான இனப்படுகொலையினை கண்டிக்க முன்வராது மௌனம் காத்தனர்?


எமது அரசியல் அன்றும் இன்றும் எப்படி இருக்கின்றது? உலக மக்களின் பொது எதிரிகளான ஆளும் வல்லரசுகளின் காலடியில் நக்கிக் கொண்டிருக்கின்றோம். எமது பிரச்சனையினை நாம் என்றுமே உலக மக்களிடமோ அவர்களிற்க்காக போராடும் அமைப்புகளிடமோ எடுத்துச் சென்றது கிடையாது. தமிழ்  மக்களை படுகொலை செய்ய அனைத்து உதவிகளையும் புரிந்த இந்திய ஆளும் வர்க்கத்தினை பிரதிநிதிப்படுத்தும் சோனியா அம்மையாரின் திருமுகத்தில் கருணையைக் கண்டவர்கள் அல்லவா எமது அரசியல் வழிகாட்டிகள்.


நாம் உலக மக்களுடனும் அவர்களின் சுபீட்சத்திற்குமாக போராடும் அமைப்புக்களுடன்  ஒன்றிணைய வேண்டிய அரசியலை உயர்த்திப் பிடித்து போராடும் மாற்று அரசியலை முன்னெடுக்க வேண்டியது காலத்தின் கட்டாயம்.

 

-ஜெகதீசன்