Thu04182024

Last updateSun, 19 Apr 2020 8am

கூடங்குளம் அணு உலையிலிருந்து இலங்கைக்கு 500 கி.மீ

altதமிழ் நாட்டின் கூடங்குளம் அணு உலைக்கு எதிராகப் போராடும் மக்களோடு தொடர்புகளை ஏற்படுத்திக் கொள்ளப் போவதாக கூடங்குளம் அணுவுலைக்கு எதிரான மக்கள் இயக்கம் கூறுகிறது. மேற்படி இயக்கத்தின் அறிமுக நிகழ்வு நிகழ்வுக்காக நேற்று (20) நடத்தப்பட்ட ஊடக சந்திப்பின்போது இந்த விடயம் தெரிய வந்தது.

கூடங்குளம் அணுவுலைக்கு எதிரான மக்கள் இயக்கத்தின் நடவடிக்கைக் குழு உறுப்பினர்களான, முன்னிலை சோஷலிஸக் கட்சியன் சார்ப்பில் அதன் அரசியல் சபை உறுப்பினர் துமிந்த நாகமுவ, இயறகை வள ஆய்வுக் கேந்திர நிலையத்தின் சார்ப்பில் ரவீந்ர காரியவசம், புவியின் நண்பர்கள் சூழல் அபிவிருத்தித் தளத்தின் சார்ப்பில் கருணாதாச மூனகம, மாவோவாத கம்யூனிஸ்ட் கட்சியைச் சார்ந்த பூமித்தாயின் குழந்தைகள்  அமைப்பின் சார்ப்பில் சுரேந்திர அஜித் ரூபசிங்க, அதன் மத்திய நிலையம் சார்ப்பில் வங்கீச சுமனசேகர ஆகியோர் கலந்துக் கொண்டிருந்தனர்.

இதன்போது கருத்து தெரிவித்த நடவடிக்கைக் குழு உறுப்பினர் துமிந்த நாகமுவ, ' இந்தியாவின் கூடங்குளம் அமைந்துள்ள இடத்திலிருந்து முழு இலங்கைக்கும் 500 கிலோ மீட்டர் தூரமே இருக்கின்றது. அனுராதபுரம், குருநாகல், கொழும்பு, கம்பஹ, களுத்தறை உள்ளிட்ட பிரதான நகரங்கள் 300 கி.மீ. தூரத்துலேயே அமைந்திருக்கின்றன. அணு உலை இலங்கைக்கு மிக அருகாமையிலேயே அமைக்கப்படுவது தெரிகிறது. ஒரு வருடத்துக்கு முன்னர் ஜப்பானின் புகுஷிமா அணு உலை விபத்தின் பின்னர், அந்த அணு உலை அமைக்கப்பட்ட இடத்திலிருந்து 750 கி.மீ. தூரத்தில் இருக்கும் பயிர்ச் செய்கைகள் கூட கதிர் வீச்சால் தாக்கப்பட்டிருப்பதாக கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. ஆகவே அவைகள் உணவுக்கு தகுந்தவையல்ல என்று கூறப்பட்டது. முழு இலங்கையும் கூடங்குளம் அணு உலையிலிருந்து 500 கி.மீ. க்கு உள்ளால் அமைந்திருப்பதால் இதன் ஆபத்து எப்படிப்பட்டதென்று உங்களுக்குத் தெரியும்.

அணு உலையொன்றினால் ஏற்படக் கூடிய நான்கு விதமான ஆபத்துக்கள் இருக்கின்றன. முதலாவதாக அதுவெடிக்கக் கூடியது. இது வரையில் உலகத்தில் எங்குமே அணு உலைகள் வெடித்ததாக இல்லை. இரண்டாவது ஆபத்து, உலையில் ஏற்படும் தொடர் விளைவுகளை நிறுத்த முடியாத சந்தர்ப்பங்கள், புகுஷிமா அணு உலையைப் போன்று ரஸியாவின் சர்னோபில் அணு உலையிலும் இப்படியான ஆபத்துக்களே நிகழ்ந்தன. அடுத்ததாக கதிரியக்க கசிவு. பொதுவாக தமது நாட்டின் அணு உலையிலிருந்த கதிரியக்க கசிவு நடந்ததாக இதுவரையில் எந்த நாடும் ஏற்றுக் கொண்டதாக இல்லை. ஏனென்றால், அப்படியான ஒரு நிலைமை ஏற்பட்டால், அந்த நாட்டிலிருந்து ஏற்றுமதி செய்யப்படும் எந்தப் பொருளையும் வாங்குவதை ஏனைய நாடுகள் தடைசெய்து விடும். இதற்கு முன்னர் அவுஸ்திரேலியாவிலிருந்து இறக்குமதி செய்யப்பட்ட ஒரு வகை பால்மா கதிரியக்கம் அதிகமாகக்  காணப்பட்டமையால் தடை செய்யப்பட்டது. பின்னர் தெரிய வந்த உணமைதான், அதற்கு சமீபமாக உள்ள நாடொன்றின் அணு உலையிலிருந்து பல வருடங்களாக கதிரியக்க கசிவு நடந்துள்ளமை.

அடுத்த பிரச்சினை தான், அணுக் கழிவுகள் பிரச்சினை. இது மிகப் பாரதூரமான பிரச்சினை. கூடங்குளம் அணுக் கழிவுளை கடலில் கொட்டுவதாக இப்போது கூறுகிறார்கள். அது மிக ஆபத்தாகும். இப்படியான பிரச்சினை காரணமாக ஜர்மனியில் 2020 ஆகும்போது அனைத்து உலைகளையும் மூடிவிட நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. பிரான்ஸும் அந்த முடிவுக்கு வந்துள்ளது.

ஆபத்து எப்படி ஏற்படக் கூடும்? முதலில் ரஸியாவின் முன்னேற்றமடையாத பழைய தொழில் நுட்பம். அணு நுட்பத்தை முன்னேற்றிய நாடு ஜப்பான் என்பது உங்களுக்குத் தெரியும். அவர்களாலும் ஆபத்தை தடுக்க முடியவில்லை. அடுத்த விடயம், அணு உலை அமைக்கப்படும் பிரதேசம். நில நடுக்கம் மற்றும் சூறாவளிகள் அதிகமாகக் காணப்படும் பிரதேசமாகும்" என்ற வகையில் கருத்து தெரிவித்தார்.

நிறைவேற்றுக் குழு உறுப்பினர் ரவீந்திர காரியவசம் கூறுகையில், ' இந்த அணு உலைக்குப் பயன்படுத்தப்படுவது, பரிசோதனைகள் முடிவுறாத நிலையில் உள்ளதும், அதனால் எந்தளவு பாதிப்புக்கள் ஏற்படக்கூடும் என்று கணக்கிடப்படாத்துமான கதிரியக்க மூலப் பொருள். வருடமொன்றுக்கு இந்தியாவிலிருந்து லட்சக்கணக்கான பறவைகள் இலஙகைக்கு வருகின்றன. வருகின்றன. அவை நாட்டின் அனைத்துப் பிரதேசங்களிலும் பறந்து திரிகின்றன. அந்தப் பறவைகளின் எச்சங்களினால் நாடு பூராவும் கதிரியக்கத் தாக்கம் ஏற்படக் கூடிய ஆபத்து இருக்கின்றது. அதேபோன்று கதிரியக்க கசிவு ஏற்பட்டால், காற்று மாசடையும். அந்தக் காற்றை சுவாசிப்பதனால் புற்று நோய் ஏற்படும். எமது தாய்மார்களுக்கு நீல நிறக் குழந்தைகள், மரித்துவிட்ட குழந்தைகள், அங்கவீணர்களான குழந்தைகள் பிறக்கக் கூடும்.

நடவடிக்கைக் குழு உறுப்பினர் கருனாதாச மூனகம,' நாங்கள் தொழில் நுட்பத்திற்கு எதிரானவர்கள் அல்ல. மில்லியன் கணக்கான மக்களை இடம் பெயர வைத்து, அவர்களது எதிர்ப்பு ஆர்ப்பாட்டத்தை கொடூரமான முறையில் அடக்கி இந்தியா இந்த அணுவுலையை அமைத்து வருகிறது. அணுவுலை அமைக்கப்படும் எல்லைக்குள் வரக் கூடாதென்று ஆர்ப்பாட்டக்கார்ரகளுக்கு அந்நாட்டு நீதிமன்றம் உத்தரவிட்டிருக்கிறது. இந்த அணுவுலையிலிருந்து அதிக வெப்பத்துடன் கூடிய நீர் கடலில் கொட்டப்படுகிறது. இதனால் கடல் வாழ் உயிரினங்களுக்கு என்ன நடக்கும்? உலகில் அனைத்து அணுவுலைகளிலும் கதிரியக்கக் கசிவுகள் இருக்கின்றன. அவற்றை இன்று வரை தடுக்க முடியவில்லை. இந்தியாவிலிருந்து இலங்கைக்கு வரும் பறவைகள் ஒரு நாளில் ஒர மில்லி கிராம் எச்சத்தை போட்டால் ஏற்படும் பாதிப்பு கடுமையானதாக இருக்கும்".

நடவடிக்கைக் குழு உறுப்பினர் சுரேந்திர அஜித்,' இந்த அணுவுலைக்கு எதிராக ஆர்ப்பாட்டம் செய்த1800 பேர் இந்திய போலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்கள். 17 பாதுகாப்பு நிபந்தனைகளை நிறைவேற்றுவதாக உயர் நீதிமன்றத்திடம் இந்தியா உறுதியளித்த்து. ஆனால் இதுவரை 6 நிபந்தனைகளே நிறைவேற்றப்பட்டுள்ளன. மற்ற 11 நிபந்தனைகளும் கிடப்பில் போடப்பட்டுள்ளன.  ஆபத்து நேர்ந்தால் முதலில் பாதிக்கப்படுவது விவசாயிகள், மீனவர்கள், மற்றும் ஒடுக்கப்பட்ட மக்கள்தான். மனித உயிர்ளை காவு கொடுக்கும் அபிவிருத்தி எதற்காக?  அதுதான் முதலாளித்துவ அபிவிருத்தி, நவ தாராளமய அபிவிருத்தி. இந்த அணுவுலையால் இந்தியாவிலும் இலஙகையிலும் வாழும் ஒடுக்கப்பட்டமக்களுக்கு ஒன்றுமே கிடைக்கப் போவதில்லை. நாங்கள் கூடிய விரைவில் இந்த அணுவுலைக்கு எதிரான இந்திய எதிர்ப்பு இயக்கத்தோடு தொடர்ப்பு கொள்வோம்." என்றார்.

-http://lankaviews.com/ta/