Thu03282024

Last updateSun, 19 Apr 2020 8am

யாழ் பல்கலைக்கழக மாணவர்கள் தாக்கப்பட்டமை! அ.ப.மா.ஒ கண்டனம்!!

யாழ்ப்பாண பல்கலைக் கழக மாணவர்கள் பாதுகாப்புப் படையினரால் தாக்கப்பட்டமையை வன்மையாக்க் கண்டிக்கும் அனைத்து பல்லைகழக மாணவர் ஒன்றியம், வடக்கில் மட்டுமல்ல அனைத்து மக்களினதும் ஜனநாயக உரிமைகளுக்காகவும் போராடத் தயார் எனக் கூறுகிறது.

 

கடந்த 27ம் திகதி யாழ் பல்லைகழகத்தில் நடைபெற்ற ஒளியேற்றல் நிகழ்வின்  போது பலவந்தமாக நுழைந்த அரச பாதுகாப்புப் பிரிவினர் சோதனை என்ற பெயரில் மாணவ, மாணவிகள் தங்கியிருந்த விடுதிக்குள் நுழைந்து சேதம் விளைவித்திருப்பதோடு,  துப்பாக்கிகளைக் காட்டி மாணவிகளை அச்சுறுத்தியிருப்பதாகவும்  அனைத்து பல்கலைக் கழக மாணவர் ஒன்றியத்தின் ஒருங்கிணைப்பாளர் சஞ்சீவ பண்டார கூறினார்.

'' இந்த அத்துமீறலுக்கு எதிராக 28ம் திகதி நடந்த கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டிருந்தவர்களையும் பாதுகாப்புப் பிரிவினர் தாக்கியுள்ளார்கள். இதனால் படுகாயமடைந்த  மூன்று மாணவர்கள் யாழ் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். அதுமாத்திரமல்ல, மேலும் நான்கு மாணவர்களை கைது செய்து பொலிஸ் நிலையத்துக்கு அழைத்துச் சென்று கடுமையாகத் தாக்கியுள்ளனர். இந்த சம்பவங்களைப் பார்க்கும்போது, வடக்கு சம்பந்தமான அரசாங்கத்தின் கொள்கை என்னவென்பது நன்றாகத் தெரிகிறது", எனவும் சஞ்சீவ பண்டார கூறினார்.

ஜனநயாகத்தை மதிக்காது, மனித உரிமைகளை மீறி பயங்கரவாதிகளைப் போன்று தமிழ் மக்களை கருதிச் செயல்படும் அரசாங்கத்தின் தேவை, இன்னொரு மனித அழிவுக்கு இட்டுச் செல்லும் என்பதையும், இச்சமயத்தில் அதனை அனுமதிக்கும் யாராவது இருந்தால், அது எதிர்காலத்தில் மேலுமொரு மனித அழிவுக்கு ஒத்தழைப்பு வழங்குவதாக இருக்குமெனவும் அவர் சுட்டிக்காட்டினார்.