Tue04162024

Last updateSun, 19 Apr 2020 8am

யாழ் பல்கலைக்கழக ஆசிரியர்கள் போராட்டம்

யாழ் பல்கலைக் கழக வளாகத்துக்குள் படையினர் உட் புகுந்து தாக்குதல் நடத்தியதைக் கண்டித்து பல்கலைக் கழக ஆசிரியர்கள் போராட்டம் நடத்தியுள்ளனர்.

கடந்த 27 ஆம் தேதி விடுதலைப் புலிகளின் மாவீரர் நாளையொட்டி பல்கலைக் கழகத்தில் நினைவு தீபம் ஏற்றப்பட்டதை அடுத்து படையினர் பல்கலைக் கழகத்துக்குள் நுழைந்து சோதனைகளை மேற்கொண்டனர். இதைக் கண்டித்து போராட்டம் நடத்திய மாணவர்கள் மீது தடியடி நடத்தப்பட்டது.

 

இராசகுமாரன் செவ்வி

பல்கலைக் கழக மாணவர்கள் மீது தடியடி நடத்தப்பட்டதை கண்டித்தும், நிர்வாகத்தின் அனுமதியின்றி பெண்கள் விடுதி உள்ளிட்ட பகுதிகளுக்கு படையினர் சென்று சோதனை நடத்தியதற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் முகமாகவே போராட்டம் நடத்தப்பட்டதாக யாழ் பல்கலைக் கழக ஆசிரியர் சங்கத் தலைவர் இராசகுமாரன் தமிழோசையிடம் தெரிவித்தார்.

போரில் இறந்துபோனவர்களை நினைவு கொள்வதை தடுப்பது மனிதாபிமானமற்ற செயல் என்றும் அவர் தெரிவித்தார். வரும் ஆண்டுகளில் போரில் இறந்தவர்களை நினைவு கூரும் நிகழ்வுகள் ஆசிரியர்கள், ஆசிரியர் அல்லாத பணியாளர்கள் மற்றும் மாணவர்கள் என அனைத்துப் பிரிவினரின் பங்கேற்புடனும் நடத்தப்படும் என்றும் இராசகுமாரன் மேலும் கூறினார்.

யாழில் பல்கலைக் கழக வளாகத்தின் அருகே படையினரின் பிரசன்னம் தொடர்ந்து நீடிக்கிறது. அங்கே நிலமை சற்றே பதற்றமாக இருப்பதாக அங்கிருந்து வரும் செய்திகள் தெரிவிக்கின்றன.