Thu03282024

Last updateSun, 19 Apr 2020 8am

யாழ் பல்கலைக்கழக மாணவர்களுக்கு ஆதரவாக போராட்டங்கள் தொடர்கின்றன!

யாழ்.பல்கலைக்கழக மாணவர்களின் விடுதலையை வலியுறுத்தியும், வடக்கு கிழக்கில் அரசால் நடத்தப்படும் திட்டமிட்ட ஆக்கிரமிப்பு நடவடிக்கைகளைக் கண்டித்தும் வவுனியா நகரில் இன்று முற்பகல் ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டுள்ளது!.

ஆர்ப்பாட்டத்தில் தமிழ்தேசியக் கூட்மைப்பின் சார்பில் சுரேஸ் பிரேமச்சந்திரன், மாவை சேனாதிராசா, சிறீதரன், செல்வம் அடைக்கலநாதன், சிவசக்கி ஆனந்தன் ஆகியோரும், தமிழ்தேசிய மக்கள் முன்னணி சார்பாக கஜேந்திரகுமார் கஜேந்திரனும், புளொட் சார்பாக அதன் தலைவர் சித்தார்த்தனும், தமிழர் விடுதலைக் கூட்டணியின் தலைவர் ஆனந்தசங்கரியும், ஜனநாயக மக்கள் முன்னணியின் சார்பாக பாஸ்கரா, புதிய ஜனநாயக மாக்ஸிச லெனினிய கட்சியின் சார்பில் செந்திவேல் உள்ளிட்ட அரசியல் தலைவர்கள் கலந்து கொண்டு தமது கண்டனங்களைத் தெரிவித்தனர்.

ஆர்ப்பாட்டத்தில் “கைதான மாணவர்களை உடனே விடுதலை செய்”, “நிலத்தை ஆக்கிரமிக்காதே”, “மத முரண்பாட்டை தோற்றுவிக்காதே” என்று அரசுக்கு எதிராக கோசங்கள் எழுப்பப்பட்டன. இவ்வார்பாட்டத்தில் பெரும் திரளான மக்களும் கலந்து கொண்டனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.

இவ்வார்பாட்டத்தில்

1.கைது செய்யப்பட்டுள்ள யாழ். பல்கலைக்கழக மாணவர்களை உடனே விடுதலை செய்ய வேண்டும்.

2.வடக்கில் முன்னெடுக்கப்பட்டுள்ள இனவாத நடவடிக்கைகளை உடன் நிறுத்த வேண்டும்.

3.பல்கலைக்கழகங்களுக்குள் நிலவும் கலாசார மற்றும் கல்வி சீரழிப்புக்களை உடனடியாக நிறுத்த வேண்டும்.

4.காரணமற்ற கைதுகளை உடன் நிறுத்த வேண்டும்.

5.அரசியல் கைதிகளின் விடுதலை மற்றும் காணாமல் போனோரைக் கண்டறிதல்

6.மாணவர்களை சிறையிலடைப்பதை நிறுத்தல்.

7.காணி அபகரிப்புக்களை நிறுத்துதல்

8. மீள்குடியேறிய மக்களை சுதந்திரமாக செயற்பட விடு

ஆகிய எட்டு கோரிக்ககைள் இந்த ஆர்ப்பாட்டத்தில் முன்வைக்கப்பட்டன