Sat04202024

Last updateSun, 19 Apr 2020 8am

ரிஸானாவின் கொலைக்கு மனிதநேயம் கொண்ட உலக எதிர்ப்பு!

மூதூர் ரிஸானா நபீக்கிற்கு நேற்று நண்பகல் நேரம் சவூதி அரேபியாவில் மரண தண்டனை நிறைவேற்றப்பட்ட தகவலை கேள்வியுற்ற மனித நேயம் கொண்ட முழு உலகும் எதீர்ப்பு தெரிவித்தது. 

ரிஸானாவின் தாய் செய்வதறியாது திகைத்து நின்றாள், நம்ப மறுத்தாள். ரிஸானாவின் தந்தை மௌனித்தார். இரு தங்கைகளும் கதறி அழுதனர்.

ரிஸானாவின் தாய், தந்தை மட்டுமல்ல, இலங்கை வாழ் மக்கள் எவருமே நினைத்துப் பார்த்திருக்காத இந்தத் துயரச் சம்பவம் நேற்று இலங்கைக்கு அறியக் கிடைத்த போது நாடே சோகத்தில் மூழ்கியது.

ரிஸானாவுக்கு மரணதண்டனை நிறைவேற்றப்பட்டு விட்டதை அறிந்த மூதூர் தொகுதி மக்களும், ஏனைய பிரதேச மக்களும் ரிஸானாவின் வீட்டை நோக்கி அலையாகத் திரண்டனர்.

பள்ளிவாசல்களில் விசேட துஆப் பிரார்த்தனைகள் மேற்கொள்ளப்பட்டதுடன், ஜனாஸாத் தொழுகைகளும் நடத்தப்பட்டன. ரிஸானா விரைவில் விடுதலையாவாள் என்று போலி வாக்குறுதிகளை வழங்கி அரசியல் நடத்திய அரசியல்வாதிகளை ரிஸானாவின் இல்லத்தில் திரண்ட மக்கள் சாபம் உண்டாகட்டும் எனக் கூறி திட்டித் தீர்த்தனர்.

தவிரவும் ரிசானா நபீக்கிற்கு நிறைவேற்றப்பட்டுள்ள மரணதண்டனையானது முழுநாட்டையும் அதிர்ச்சிக்குள்ளாக்கி சோகநிலையில் நாடே இருந்த நிலையில் இதுபற்றி எதுவுமே அறியாத அமைச்சர் ஏ.எச்.எம்.பௌசர் ரிசானாவின் மரணதண்டனை நிறைவேற்றத்துக்கு காரணமான சவூதி அரேபிய நாட்டுத்தாயாருக்கு சவூதி அரசாங்கம் உரிய தண்டனையைப் பெற்றுக்கொடுக்க வேண்டுமென  நேற்று பாராளுமன்றத்தில் கோரிக்கை விடுத்துள்ளார். என்னே சமூக அக்கறை!

ஆனால் மக்களோ மழை என்றும் பாராமல் இன்று கொழும்பில் ஆர்பாட்டத்தில் இடுபட்டுள்ளனர்.