Thu04182024

Last updateSun, 19 Apr 2020 8am

மாலியில் பிரான்ஸ் ஏகாதிபத்தியத்தின் தலையீடு!

ஆபிரிக்க நாடான மாலி கிளர்ச்சியாளர்களின் ஆதிக்கம் பெருகிக் கொண்டு வருவதாக செய்திகள் வருகின்றன. ஏப்பிரல் மாதம் அல்கொய்தாவின் ஆதரவு பெற்ற கிளர்ச்சிப் படை மாலியின் வடபகுதியை தங்கள் கட்டுப்பாட்டில் வைத்துக் கொண்டனர். தென்பகுதியில் உள்ள கோன்னா நகரை கைப்பற்றியுள்ளனர்.

மாலி நாட்டில் அல்-காய்தா ஆதரவு தீவிரவாத அமைப்பினரை தாக்குவதற்காக பிரான்ஸ் விமானப்படை, தமது குண்டு வீச்சு தாக்குதல்களை தொடங்கிவிட்டது. தீவிரவாத அமைப்பினர், மாலி நாட்டு ராணுவத்தை தாக்கியபடி தலைநகரை கைப்பற்ற வந்து கொண்டிருக்கும் நேரத்தில், அவர்களது வருகையை தடுக்கும் நோக்கில் பிரான்ஸ் ராணுவடன் மாலியின் அண்டை நாட்டுப் படைகளும் அங்கே போய் இறங்கியுள்ளது.

தீவிரவாதிகளின் கட்டுப்பாட்டில் இருந்த பகுதிகள் சில மீட்கப்பட்டதாக செய்திகள் வருகின்றன. பிரான்சின் தலையீடு ஒரு ஏகாதிபத்தியத்தின் நிகழ்ச்சி நிரலுக்கு உட்பட்டதே. வறிய நாடுகளை சுரண்டிக் கொள்ள ஏகாதிபத்தியங்கள் தங்களிடையே சுமூகமான பங்கீட்டு நடவடிக்கை ஏற்படுத்திக் கொண்டு செயற்படுகின்றார்கள். பிரான்ஸ் முதன்மையாளனாக இன்று மாலியில் செயற்படுகின்றது. இதன் பின்னால் மற்றைய ஏகாதிபத்தியங்களின் ஒத்துழைப்பும் இருக்கின்றது என்ற அடிப்படையில் பிரான்ஸ் செயற்படுகின்றது.

மத அடிப்படைவாத குழு எவ்வளவு ஆபத்தானதோ அதேபோல தான் ஏகாதிபத்திய தலையீடுகளுமாகும்.