Fri04192024

Last updateSun, 19 Apr 2020 8am

சுத்த-சுவாதீனமற்ற நிலையில் கோட்டபாய!

மகிந்தரின் தம்பி கோட்டபாயர் நூறு வீதம் சுத்த-சுவாதீனமற்ற நிலையில் உள்ளார். அந்தளவிற்கு அவர் சொல்லும் கூற்றுக்கள் மெய்ப்பிக்கின்றன.

"காணாமல் போனவர்கள் என்று யாருமில்லை" என்கின்றார்.

"இறுதி யுத்தம் நடைபெற்ற காலத்தில் வன்னியின் ஜனத்தொகை 70-000 மாத்திரமே என்றும் ஆனால் யுத்தம் முடிவுக்கு வந்த போது இவர்களது இடம்பெயர் முகாம்களுக்கே 300000 லட்சம் மக்கள் வந்து சேர்ந்தார்கள்." என இப்படியொரு கதை!

"போர் இடம்பெறும் நாடொன்றில் காணாமற்போதல், உயிரிழத்தல், காயமடைதல் என்பவை சாதாரணமானவை. ;  போர் இடம்பெற்ற இறுதி இரண்டரை வருட காலப்பகுதியில் இராணுவத்தைச் சேர்ந்த 6 ஆயிரம் பேர் உயிரிழந்தனர். 20 ஆயிரம் பேர் காயமடைந்தனர். ஆயிரக்கணக்கானோர் அங்கவீனமுற்றுள்ளனர். குறிப்பிட்டதொரு பிரதேசத்தில் இரு தரப்பினர்களுக்கிடையில் போர் இடம்பெறும் போது அப்பகுதியில் சிக்குண்டுள்ளவர்கள் உயிரிழக்க வாய்ப்பு உள்ளது. அல்லது காணாமற்போக வாய்ப்புண்டு".

"வன்னியில் இடம்பெற்ற இறுதிக்கட்ட போரின் போது படையினரால் பதியப்பட்டு பொறுப்பேற்கப்பட்ட எவரும் காணாமற்போகவில்லை. இறுதிப்போரில் இராணுவக் கட்டுப்பாட்டுப் பகுதிகளுக்கு வந்தவர்கள்இ இந்திய வைத்தியசாலைகள் மற்றும் செஞ்சிலுவைச் சர்வதேசக் குழு (ஐ.சி.ஆர்.சி.) ஆகியவற்றினூடாகவே வருகை தந்தனர். எனவேஇ அவர்களிடம் போய்ச் சேர்ந்தவர்கள் தொடர்பில் இந்தியாவும் ஐ.சி.ஆர்.சி.யுமே பொறுப்புக்கூறவேண்டும்".

"இலங்கை உள்நாட்டுப் போரின் இறுதிக் கட்டத்தில் இலங்கை இராணுவம் பொதுமக்களின் இழப்பை தவிர்ப்பதற்கான அனைத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளையும் எடுத்துள்ளது என்று இராணுவ உள்ளக விசாரணை அறிக்கை ஒன்று பரிந்துரைத்துள்ளது"

கோமாளிகள்pன் செயலையிட்டு சிரிக்கலாம். சுத்த சுவாதீனமானவர்களின் செயல், அதுவும் றோட்டால் போறவனின் சேட்டைகளை கண்டு ரசிக்கலாம். ஆனால் இப்பேர்ப்பட்டவர்கள் ஆட்சியில் ஏகப்பட்டவர்களாக இருந்தால் நாட்டினதும்-மக்களினதும் நிலை?....... எங்கள் நாட்டிற்கு இப்படியொரு சோதனையோ?