Sat04202024

Last updateSun, 19 Apr 2020 8am

எமது நிலம் எமக்கு வேண்டும்! இராணுவமே வெளியேறு!

altஎமது நிலம் எமக்கு வேண்டும் இராணுவமே வெளியேறு என்ற உரிமை முழக்கத்துடன் யாழ்.மாவட்ட செயலகத்திற்கு முன்னால் நில சுவிகரிப்புக்கு எதிர்ப்பு தெரிவித்து மக்கள் போராட்டம் நடைபெற்றுள்ளது.

தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் ஏற்பாட்டில் நடைபெற்ற இந்த போராட்டத்தில் தென்னிலங்கை முற்போக்கு கட்சிகளும் கலந்து கொண்டதாக அறியக்கிடைக்கின்றது.

இந்தப் போராட்டத்தில் கலந்து கொண்ட மக்கள் எங்கள் நிலங்களை விட்டு இராணுவம் வெளியேவேண்டும் எமது மண்ணில் நாங்கள் ஆளும் உரிமை எமக்கு வேண்டும் என்ற கோசங்களை எழுப்பியிருந்தனர்.

முற்று முழுதாக பொலிஸாரின் பாதுகாப்புடன் நடைபெற்ற இந்த ஆர்பாட்டத்தில் அரச புலனாய்வுப் பிரிவினர் ஆர்பாட்டத்தில் கலந்து கொண்ட மக்களையும் அரசியல் தலைவர்களையும் புகைப்படம் எடுப்பதில் குறியாக இருந்தனர்.

தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் ஏற்பாட்டில் நடைபெற்ற இந்த போராட்டத்தில் பல நூற்றுக்கணக்கான மக்கள் கலந்துகொண்டு தங்கள் எதிர்பபை வெளிப்படுத்தினர்.

அரசு மற்றும் இராணுவத்தினருக்கு எதிராக பல்வேறு கோசங்களை எழுப்பியும் தாங்கிய வாறும் மக்கள் இந்தப் போராட்டத்தில் கலந்துகொண்டிருந்தனர்.

அந்த ஆர்ப்பாட்டத்தை கட்டுப்படுத்தும் நோக்கில் 200க்கும்மேற்பட்ட பொலிஸாரும் புலனாய்வாய்ளர்களும் குவிக்கப்பட்டிருந்தனர்.

நில ஆக்கிரமிப்புக்கு எதிராக நடைபெற்ற இந்த ஆர்பாட்டத்தில் தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் தலைவர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் அக் கட்சியின்பொதுச் செயலாளர் கஜேந்திரன், தமிழ் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் சிறிதரன், நவசமாயக் கட்சியின் தலைவர் விக்கிரமபாகு கருணாரட்ன, மாற்றுக் கொள்கைகளுக்கான நிலையத்தின் தலைவர் பாக்கிய முத்து சரவனன், மூத்த ஊடகவியலாளர் வித்தியாதரன், கொழும்பு மாநாகரசபை உறுப்பினர் பாஸ்கரா மற்றும் யாழ்.மாநகர சபை உறுப்பினர்கள், பிரதேச சபை உறுப்பினர்கள் எனப் பலர் கலந்து கொண்டதாக அறியக்கிடைக்கின்றது.