Thu03282024

Last updateSun, 19 Apr 2020 8am

நீதியை நிலைநாட்டுவதும்! பாதுகாப்பதும்! - பாகம் 02

மனித உரிமைககள் பற்றி

நீதியை நிலைநாட்டுவது பற்றி உலகின் பாகங்களிலும் உள்ளவர்கள் எல்லோராலும் பேசப்படுகின்றது. மனித உரிமைகள் முழுச்சமூகத்தின் உறுப்பினர்கள் என்ற நிலையில் இருந்து நோக்காது, தனிமனிதனில் இருந்து சமூகத்தைப் பார்க்கின்ற நோக்கில் அமைந்திருக்கின்றது. மனித உரிமைகள் பற்றி 1975 இல் கெல்சிங்கியில் (பின்லாந்து) சுற்றில் அமெரிக்காவினால் கொண்டுவரப்பட்ட திட்டத்தின் அடிப்படையில், இது குறிப்பாக சோசலிச சமூக அமைப்பிற்கு நேர்மாறான கருத்தை வலியுறுதிக் கொண்ட இந்த நிலைப்பாடானது. அன்றைய காலத்தில் பிரஸ்சிநேவ் தலைமையில் இருந்த சோவியத் ஒன்றியம் இதற்கு எதிர்ப்புத் தெரிவித்திருந்தது. ஆனால் இந்த எதிர்ப்பின் இடையே தொடர்ச்சியாக அமெரிக்க மனித உரிமை பற்றி இன்று வரைக்கும் வலியுறுத்தி வருகின்றது. மேற்கு தேசங்களின் மனிதவுரிமைக் கோரிக்கையானது கட்டுப்பாடற்ற உழைப்பாளிகளை கோரியதான நிலைப்பாடுகளில் இருந்து அமைந்திருக்கின்றது.

அமெரிக்கா வலியுறுத்திக் கொள்கின்ற மனித உரிமையை இங்கே பார்ப்போம். “மக்கள் தமது சொந்தக் கருத்துக்களை வெளியிட முடியாதவாறு தடுத்தல், தனக்கு விருப்பமான தலைவரை அல்லது அரசாங்கத்தை தெரிவு செய்ய முடியாதவாறு மக்களின் அபிலாசைகளை அடக்கி விடுதல் இதை விட மேலாக சிறைச்சாலைகளில் சித்திரைவதைகள், அரசியல் எதிரிகளை கைது செய்தல் அவர்களை சித்திரைவதை செய்தல்.

போர் அல்லது உள்நாட்டு யுத்தம் இடம்பெறும் நாடுகளில் இராணுவத்தின் கொடுபிடி, சட்டவிரோதக் கொலைகள் இவைகள் தான் மனித உரிமைப் பிரச்சினைகளாக சித்தரிக்கப்பட்டுள்ளன. சாவேஸ் இறந்த பின்னர் அமெரிக்க செனற்சபை உறுப்பினரிடம் பேட்டி கண்ட மேற்கண்டவறான கருத்தை வெளிக்கொணர்ந்தார். வெனிசுவேலா என்ற நாட்டில் குறைந்த பட்சமாக முதலாளித்துவ ஜனநாயக உரிமைகளையும், சமூக ஜனநாயகச் சீர்திருத்தங்களை அனுமதிப்பதற்கு அண்டைய ஏகாதிபத்தியமான அமெரிக்கா தயாராக இல்லை.

ஆனால் மனித உரிமைப் பிரச்சனை, அரசியல் உரிமைகள், கருத்து வெளியிடும் சுதந்திரம், ஆர்ப்பாட்டங்கள், ஊர்வலங்கள் என்பனவற்றுக்கு அனுமதி. இவைகள் ஓரளவுக்கு தாராளமாக வழங்கப்பட்டுவிட்டால் அங்கு மனித உரிமைகள் மதிக்கப்படுவதாக அர்த்தம் ஆகிவிடாது. அரசாங்கம் தனது மக்களுக்குத் தேவையான கல்வி வசதிகள், வீட்டு வசதிகள், வாழ்க்கைத் தரவ வசதிகள், பொருளாதார வசதிகள் இப்படி அனைத்து வசதிகளையும் ஓரளவுக்காவது திருப்திகரமாக நிறைவேற்ற வேண்டும். ஒரு மனிதன் இந்த உலகில் வாழ்வதற்கு இவை மிகவும் அத்தியாசியமான தேவையாகும். இறையாண்மையுள்ள தன்மானங்கொண்ட தேசிய அரசுகளையும் நவதாராளவாதம் அனுமதிப்பதில்லை. நவதாராளவாதக் கொள்கையானது கபடங்கொண்டு தனது வர்த்தக நலனை கவனத்தில் கொள்கின்றது.

மேற்குறிப்பிட்ட நிலையில் இருந்த பார்க்கின்ற போது அடிப்படை வசதியில்லாமல் அமெரிக்க ஐக்கிய இராச்சியத்தில் பல மில்லியன் மக்கள் வாழ்கின்றனர். இன்றைய உலகில் அமெரிக்காவில், மேற்குலகில் தேனும் பாலும் ஓடுதவாக கனவு காண்கின்ற மக்களைப் பொறுத்த வரையில் அமெரிக்காவைப் பற்றி எழுதுவது நம்பத்தகாதாகத் தான் இருக்கும். எனினும் அமெரிக்காவின் கூட்டாளி நாடுகள் அமெரிக்கா வரையறுத்துக் கொள்கின்ற மனித உரிமை வரையறைக்கு உட்பட்டு செயற்படுகின்றனவா என்பதை ஊடக, தொலைத்தொடர்புச் சாதனங்கள் இவைபற்றி அக்கறை கொள்வதில்லை.

1988 ஆம் ஆண்டு இருக்கும் என நினைக்கிறேன். ஸ்ரிபன் (Little Stevan) என்ற பாடகர் தனது பேட்டியில் பேச்சு சுதந்திரம் அமெரிக்காவில் இருக்கின்றதா? எனக் கேட்டபோது இல்லை என்றே கூறினார். அண்மையில் நடத்தப்பட்ட ஆராய்வு கருத்துக்கணிப்பின் அடிப்படையில் அமெரிக்க மத்திய அரசு தமது அடிப்படை உரிமைகளை மீறுவதாக 53 வீதமான மக்கள் கருதுவதாத் தெரியவந்துள்ளது. அமெரிக்க அரசு தமது சொந்தத தனிப்பட்ட உரிமைகளுக்கும் சுதந்திரத்திற்கும் அச்சுறுத்தலாக இருப்பதாக 53 வீதமான அமெரிக்கர்கள் கருதுவதாக அறிவிக்கும் இக் கருத்துக்கணிப்பு அமெரிக்கா உள்நாட்டிலும் தனது ஜனநாயக விரோத நடவடிக்கைகளை அதிகரித்து வருவதை காட்டுகின்றது.

உரிமைகள் எனப்படுவதும், உரிமைகள் மீறப்படுதல் என்பது ஒரு வர்க்கம் சார்ந்ததாகத் தான் இருக்க முடியும். ஒரு வர்க்கம் இன்னொரு வர்க்கத்தை அழித்துக் கொண்டிருக்கின்ற போது அங்கு மனித உரிமைகளைப் பேசுவது வேடிக்கையானதாகத் தான் இருக்க முடியும். உலகில் இருக்கின்ற கொடிய அரசுகளுக்கு ஆயுதமும், ஆலோசனைகளும் வழங்கி வரும் நாடு அமெரிக்காவும், அவர்களின் கூட்டாளி நாடுகளுமே முதன்மை வகிக்கின்றன. இவர்களுடன் உலகை பங்கிட்டுக் கொள்ள சீனமும், ரஸ்யாவும் ஓரணியில் இருந்து மூலவளத்தை தமதாக்குவதில் போட்டி போட்டு இரத்தக் களரியை ஏற்படுத்துகின்றார்கள்.

ஐ.நா நீதி மன்றம்

1919 இல் கூடப்பட்ட வர்சாய் (பிரான்ஸ்) மாநாட்டில் அரசியல் விடயங்கள் தனியாக ’’மக்கள் சபையிலும்” (முன்னர் ஐ.நா சபை உருவாக்கப்பட்டதற்கு முன்னர் இருந்த உலக ஒன்றியம்) சட்ட ரீதியானவைகள் தனியான அமைப்பிலும் கையாளப்பட வேண்டும் என முடிவுவெடுக்கப்ட்டது. இருந்தாலும் அரசியல் எது சட்ட ரீதியான பிரச்சனை எது பிரித்துப் பார்ப்பதில் சிக்கல் இருந்து கொண்டே இருந்தது. இருந்தும் பல சட்டம் சம்பந்தப்பட்ட பிரச்சனைகள் முன்கொண்டு வரப்பட்டன. முன்வைக்கப்பட்ட விடயங்களில் முக்கியத்துவம் பெறவில்லை. இதில் குறிப்பாக கடல்பரப்பு எல்லை, மீன்பிடிப்பு எல்லை உட்பட் விடயங்கள் முன்வைக்கப்பட்டன.

ஆனால் குறிப்பாக 1970 களில் ஐ.நா நீதிமன்றம் முக்கியத்துவம் பெற்றது. இந்த நீதிமன்றம் நெதர்லாந்து நாட்டில் காக் (Hauge) என்ற நகரில் அமைந்திருக்கின்றது. இந்த நீதிமன்றத்தில் குறிப்பாக 1970 களில் தென் ஆபீரிக்கா நமீபியா மீது கொண்டுள்ள கட்டுப்பாடு பற்றி உரிமை பற்றி வழக்கு தாக்கல் செய்யப்பட்டது. அதன் தீர்ப்பானது தென் ஆபீரிக்கா கொண்டுள்ள கட்டுப்பாடு செல்லுபடியாகாது என தீர்ப்பளிக்கப்பட்டது. இதனைத் தொடர்ந்து 1984 இல் நிக்கரகுவா என்ற லத்தீன் அமெரிக்க நாடானது காக் நீதி மன்றத்தில் அமெரிக்காவிற்கு எதிராக வழக்குத் தாக்கல் செய்தது. அமெரிக்காவானது நிக்கரகுவா நாட்டின் உள்நாட்டு விடயத்தில் தலையிடுவதும், குழப்ப சக்திகளுக்கும் உதவுவதாக குற்றம் சாட்டப்பட்டது. இதனை ஏற்று காக் நீதிமன்றம் விசாரணையின் பின்னர் நிக்கரகுவாவிற்கு நட்டஈடு வழங்கும் படியும், குழப்பச் சக்திகளுக்கு உதவுவதை நிறுத்தும்படியும் காக் விதித்திருந்தது. ஆனால் வழமைபோல அமெரிக்கா தட்டிக் கழித்தது.

குவைத்- ஈராக் எல்லைப் பிரச்சினை சர்தேச நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட வேண்டியதாகும். ஐ.நாவின் 36 சரத்தின் படி காக் நீதிமன்றத்தில் குற்றப்பத்திரிகை சமர்ப்பிக்கப்பட்டிருக்க வேண்டும். ஆனால் அவ்வாறு நடைபெறாமல் பாதுகாப்புச் சபையில் பிரச்சனை கைளாயப்பட்டது. இதற்கு மாறாக பணம் படைத்த நாடுகள் பாதுகாப்பச் சபையில் பிரச்சனையை கையாண்டு ஈராக்கின் மீதான தாக்குதலுக்கு வழிவகுத்தது.

இதேபோல் 1988 இல் என்ற Lockerbie விமானம் 270 பயணிகளுடன் ஆகாயத்தில் வைத்து விமானம் குண்டு வெடிப்புக்கு உள்ளாகியது. இதில் லிபியா நாட்டவர் இருவர் குற்றவாளிகளாகவும், லிபியா இதற்கு துணை நின்றதாக குற்றம் சாட்டப்பட்டது. இந்த இரண்டு சந்தேக நபர்களை ஒப்படைக்கும் படி கோரியது அமெரிக்காவும், பிரித்தானியாவும். இரண்டு பணம் படைத்த நாடுகளும் லிபியா மீது வர்த்தகத் தடையை விதித்திருந்தன. இரண்டு பெரிய நாடுகள் இரண்டும் காக் நீதிமன்றத்தில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்தனர். இதற்கு எதிராக 1987 (Montreal) மொன்றியல் சாசனத்தின் படி லிபியாவே நீதி விசாரணை நடத்த முடியும் என்று எதிர்மனு சமர்ப்பித்தனர். இதனை 11 க்கு 5 என்ற பெரும்பான்மையில் லிபியாவின் மனு நிகராகரிக்கப்பட்டது. இன்று இரண்டு சந்தேக நபர்களும் காக்கில் ஒப்படைக்கப்பட்டுள்ளனர். இதன் பின்னரே பலவருடங்களுக்கு முன்னர் பொருளாதாரத் தடை விலக்கப்பட்டுள்ளது.

Human Rights Watch என்ற அமைப்பு சர்வதேச நீதிமன்றத்தில் நிறுத்த வேண்டும் எனக் கோருகின்ற உகண்டா சர்வாதிகாரி இடி அமீன் (சவுதி அரேபியாவில் தஞ்சம்), எத்தியோப்பிய அதிபர் (Mengistu Haile Mirian) மென்கிஸ்து (சிம்பாவேயில் தஞ்சம்), கெயிற்ரி - (Jean-Clude Duvalier) ஜான் கிளவ்ட் (பிரான்ஸில் தஞ்சம்), பொலீஸ் அதிபர்(Raul CedrasuTs (பனமாவில் தஞ்சம்), சாட் - (Hissein Hepe) கிஸ்சான் (செனகலில் தஞ்சம்), பரகுவாய்- (Alfredo Stroessner) அல்பிரடோ (பிரசீலில் தஞ்சம்) .

ஆகியவர்களை இன்றைக்கு ஜனநாயகத்தை உலகிற்கு கற்றுத் தருகின்ற மேற்குல, அமெரிக்க பணக்கார நாடுகள் இந்தோநேசியா சுகர்னோ, சிலி பினோச்சே, பிலிப்பைன்ஸ் மார்க்கோஸ், ஸ்பெயின் பிராங்கோ, கொங்கோ, தென் ஆபீரிக்கா, ஈராக், பாக்கிஸ்தான், பங்களாதேஸ், மற்றும் பல தென் அமெரிக்க, லத்தீன் அமெரிக்க நாடுகளின் சர்வாதிகாரிகளை ஆதரித்து வந்துள்ளது. இவை மாத்திரம் அல்ல இனவெடுக்கல் நடைபெறுகின்ற நாடுகளில் உதவி புரிந்து வந்துள்ளன. குறிப்பாக இலங்கை, இஸ்ரேல் பல நாடுகள் மீது நல்லுறவைக் கொண்டுள்ளதுடன் தொடர்ந்தும் உதவிகளை கொடுத்துக் கொண்டு வருகின்றன. வரலாற்றில் அமெரிக்க நேரடியாக ஆக்கிரமிப்புச் செய்த நாடுகள் பல இருக்கின்றன. கொலனித்துவ முடிவின் பின்னால் நாடுகளைப் பிடிக்கும் ஏகாதிபத்தியக் கொள்கைகளை விஸ்தரித்துக் கொண்டது. இதன் பின்னர் அமெரிக்கா பல நாடுகளை ஆக்கிரமித்துள்ளது. வியட்னாம், வாவோஸ, கம்ப+ச்சியா, கிரனடா, பனமா, ஆகிய நாடுகளை பிரான்ஸ், அமெரிக்க நாடுகள் ஆக்கிரமித்திருக்கின்றன.

இதைவிட கடந்த பத்து ஆண்டுகளில் லிபியாவில் குண்டு போட்டது. இதில் கடாபியின் மகள் 3வயது கொல்லப்பட்டதுடன், கடாபியின் வாசல்ஸ்தலம் விமானத் தாக்குதலுக்கு உள்ளாகியது. குறிப்பாக அன்னிய நாட்டின் வாசல்ஸ்தலங்களுக்கு குண்டு போட்டது ஒரு தலைவரை கொலைசெய்யப்படும் முயற்சிக்கு ஒப்பாகும். வெள்ளை மாளிகைக்கு ரொக்கட் தாக்குதலுக்கு உள்ளாகியது. இதனை ஒரு தனிநபர் மேற்கொண்டாதாக கூறப்பட்டது. ஆனால் இந்தத் தனிநபர் தனது வெறுப்பைக் காட்ட மேற்கொள்ளப்பட்ட அடையாளத் தாக்குதல் எனக் கொள்ளப்போவதில்லை. ஆனால் ஒரு தனிநபர் மேற்கொள்ளப்பட்ட தாக்குதலை அடையாளத் தாக்குதலாக எடுத்துக் கொள்ள முடியாத நிலையில் ஒரு நாட்டு அரசு, ஒரு இராணுவக் கூட்டணி ஒரு நாட்டின் தலைவரின் இருப்பிடத்தின் மீது குண்டு போடுவது ஒரு நாட்டின் தலைவரை கொலை செய்ய மேற்கொண்ட முயற்சியாகவே கருத வேண்டியிருக்கின்றது. யூக்கோஸ்லாவியா மீது தொடுக்கப்பட்ட குண்டுத் தாக்குதலில் மிலோசவின் இருப்பிடத்தின் மீதும் குண்டுத் தாக்குதல் நடத்தப்பட்டது. ஈராக்கில் சதாம் குசைனின் மகள் வீட்டிற்கும் விமானத் தாக்குதல்கள் நடைபெற்றது குறிப்பிடத்தக்கதாகும்.

தற்பொழுது யூக்கோவின் அரசாங்கத்தில் இடம்பெறும் Mirco Marjanovic, சேர்பிய பிரதமர் Mmomir Bulatovic, யூக்கோஸ்லாவிய பிரதமர் Dragyan Tomic, நாடாளுமன்ற சபாநாயகர் Milan Militinovic, சேர்பிய பிரதமர் ஆகியோர் மீதும் மிலோசவிச் மீதும் ஐ.நா நீதிமன்றத்தில் வழக்குத் தாக்கல் செய்து, இவர்களுக்கு தண்டனையும் வழங்கப்பட்டது.

மேற்கின் தாக்குதலால் மிலோசவிச்சினை பலவீனப்படுத்த வேண்டும் என்றால் அவரைச் சுற்றியுள்ள நபர்களின் வருவாக்கு உறுதுணையாக இருக்கும் நிலைகளை அழித்தனர். மிலேசவிச்சை பணிய வைக்க முடியும் என நேட்டோவினால் நம்பப்பட்டது. இதனால் பல முக்கிய நிலைகள் தாக்குதலுக்கு உள்ளாகியது. இதே போல கருத்தை முன்வைத்து ஈராக் மீதும் தாக்குதல் நடத்தினர். ஈராக்கின் மீது தாக்குதல் நடைபெற்றதற்கு காரணமாக அயல்நாடுகளுக்கு அச்சுறுத்தல் எனவும், ஈராக்கிடம் இருக்கின்ற இரசாயன, பௌதீக ஆயுதங்கள் மனிதகுலத்திற் ஆபத்தானது எனவும் பிரச்சாரங்களை மேற்கொண்டனர், ஐ. நாவின் தீர்மானத்திற்கு பணிந்து நடக்கவில்லை, பரிசோதகர்களுடன் ஒத்துழைக்க வில்லை என குற்றம் சுமத்துகின்றனர். இந்தத் தாக்குதலில் மூலம் ஈராக்கின் இராணுவ நிலைகளையும், ஆயுத உற்பத்தியையும் தாம் நீண்ட பின்னடைவிற்கு உள்ளாக்கியதாகவும் பென்ரகன் தெரிவித்தது.

 

யூக்கோஸ்லாவியா, ஈராக் தாக்குதல் சர்வாதிகாரிகளை அடக்குவதற்காக நடத்தப்பட்ட தாக்குதல் என பிரச்சாரப்படுத்தப்பட்டாலும், பொருளாதார நலன்பால் கொண்ட ஏகாதிபத்திய விஸ்தரிப்பு எண்ணம் இருந்ததை திட்டமிட்டு மறைக்கின்றனர். இதற்கு சந்தர்ப்ப சூழ்நிலைகளில் வெளிவரப்படும் தரவுகளை மிகச் சிறப்பாக, கச்சிதமாக பாவிக்கின்றனர். இவற்றை இங்கு கவனிப்போம் மிலோசவிச் ஒரு கொடுமையான மனிதர், பார்ப்பதற்கு சாதுவாக தென்பட்டாலும், உள்ளத்தில் கொரூரம் நிறைந்த மனிதர், தனது பதவியைக் காப்பாற்றிக் கொள்ள பல தந்திரோபாயங்களைப் மேற்கொள்கின்றார். தன்னை ஊழல் பேர்வழி எனக் காட்டிக் கொள்வதில்லை, இதில் கவனமாக உள்ளார். இவர் சிலாவிய பெருமையை உயர்த்திப் பிடித்து தேசிய வெறியைப் பரப்புகின்றார் என நேட்டோவினால் பிரச்சாரம் செய்யப்பட்டது.

 

இதேபோல் ஐரோப்பிய நாடுகளில் உள்ள நாசிச சக்திகளின் ஆதரவு, அத்துடன் ஐ.நா நீதிமன்றத்தில் குற்றம் பத்திரிகை சமர்ப்பிக்கப்பட்ட (Arkan)) அர்க்கான் என்ற ஆயுதக் கும்பலின் தலைவர் ஆகியோரின் கொசவோ மக்கள் மீதான வெறிநடவடிக்கைகள் பிரச்சாரத்திற்காக பாவிக்கப்பட்டது. இத்துடன் அகதிகளின் வெளியேற்றம் நேட்டோ நாடுகளுக்கு அரிய வாய்ப்பாகவும் இருந்தது. ஏற்கனவே பாதகமான செயலைச் செய்தவர்கள் என்ற கருத்தோட்டம் நிலவியதை சாதகமாக பயன்படுத்திக் கொண்டனர். நேட்டோவின் பொருளாதார சந்தையின் விஸ்தரிப்பை மறைத்துக் கொள்வதற்கு மேற்கொள்ளப்பட்ட இந்த யுத்தம் மிலோசவிச்சின் உதவியுடன் பிரச்சனைகள் இன்றி மறைக்கப்பட்டதுடன். நீண்ட காலத்தில் சந்தையைப் பெற்றுக் கொள்ளக் கூடிய நிலையை அடைந்து விட்டது.

நீதியை நிலைநாட்டுவதும்! பாதுகாப்பதும்! - பாகம் 01