Thu04252024

Last updateSun, 19 Apr 2020 8am

ஏறாவூரில் முஸ்லிம்களுக்கு எதிரான துண்டுப்பிரசுர விநியோகம்!

இந்நாடகத்தை நடத்தியது அரசா? அல்லது தமிழ் இனவாதிகளா?

மட்டக்ககளப்பு மாவட்டத்தின் ஏறாவூர்ப் பிரதேச செயலாளர் பிரிவில், இந்திய அரசின் துணையுடன் அமைக்கப்பட்ட வீடமைப்பு திட்டம் நேற்று மீள் குடியேற்றத் திட்டமாக ஆரம்பித்து வைக்கப்பட்டது. மீள்குடியேற்றம் சிங்கள - தமிழ் - முஸ்லிம் கிராமங்களில் (மங்களகம, பெரியமுல்லுமலை, உறுகாமம்) நடைபெற்றது.

இவ்வைபவத்திற்கு முன்பாக, முஸ்லிம் மீள்குடியேற்றக் கிராமமான உறுகாமத்தில், இந்திய அரசின் வீட்டுத் திட்டமா? "இஸ்லாமிய குடியேற்றத்திட்டமா?" எனும் தலைப்பிலான துண்டுப்பிரசுரம் ஒன்று தமிழ் - சிங்கள மொழியில் விநியோகிக்கப்பட்டுள்ளது.

இக்குடியேற்ற நிகழ்வானது தழிழ் - சிங்கள - முஸ்லிம் கிராமங்களுக்கு ஒரே நேரத்தில் சமமாகவே நடைபெறுகின்றது. இந்நிலையில் "இஸ்லாமிய குடியேற்றத் திட்டமா"? என பிரசுரம் விடுவதென்பது, கடைந்தெடுத்த பச்சை இனவெறி நோக்கம் கொண்ட இனவாத நடவடிக்கையாகும்.

இது இனங்களுக்கிடையிலான குரோதங்களைத் திட்டமிட்டு சிதைக்கும் நோக்கம் கொண்டது!

குறுகிய இனவாதம் கொண்ட நோக்கில் தமிழ் இனவாதிகள் மட்டுமல்ல, அரசும் செயற்படுகின்றது.!

கிழக்கிலங்கையில் அதற்கான வரலாற்றுச் சம்பவங்கள் ஏராளம் உண்டு!

இதை யார் முன்னின்று செய்தாலும் வன்மையாக கண்டிக்கப்படவேண்டிய ஒன்றாகும்!

மக்கள் விழிப்புற்றால் இவர்கள் இல்லாதாகிவிடுவார்கள்!

இதற்கோர் எடுத்துக்காட்டு….

திக்கம் பிரதேச மக்கள் காணி அதிகாரிகளை விரட்டியடித்தனர்!

திக்கம் பிரதேசத்தில் படையினரின் தேவைக்காகச் சுவீகரிக்கப்படும் காணியை அளவீடு செய்வதற்காக கடந்த திங்கட்கிழமை அங்கு சென்ற நில அளவை திணைக்களத்தினர் காணி உரிமையாளர்கள் காட்டிய எதிர்ப்பினால் நில அளவைப் பணியைக் கைவிட்டுத் திரும்பினர்.

பருதித்தித்துறை பிரதேச செயலாளர் பிரிவில் ஜேஃ400 கிராம சேவையாளர் பிரிவில் திக்கம் பகுதியில் 31 பேருக்கு உரித்தான 8 ஏக்கர் காணியை இராணுவத்தின் 16ஆவது விஜயபாகு காலாட் படைமுகாம் அமைப்பதற்கு சுவீகரிப்பதற்கான அறிவித்தல்கள் கடந்த மாதம் 12 திகதி அங்கு ஒட்டப்பட்டன.

இந்த நிலையில் மேற்படி காணியை எதிர்வரும் 20 திகதி அளவீடு செய்வதற்கு நில அளவை திணைக்கள அதிகாரிகள் வருவார்கள் என்று கடந்த 9 ஆம் திகதி காணி உரிமையாளர்களுக்கு எந்தவித ஒப்பமும் இன்றி அநாமதேயமாகக் கடிதம் அனுப்பப்பட்டுள்ளது.

இந்த நிலையில் கடந்த 20 திகதி நில அளவை செய்வதற்காக நில அளவைத் திணைக்களத்தினர் அங்கு நேரடியாகச் சென்ற போது 31 காணிகளின் உரிமையாளர்களும் எதிர்ப்புத் தெரிவித்தனர். இதனையடுத்து அவர்கள் தமது பணியைக் கைவிட்டுத் திரும்பியுள்ளனர்.

31 காணி உரிமையாளர்களும் மேன் முறையீட்டு நீதிமன்றில் வழக்குத் தாக்கல் செய்ய நடவடிக்கை எடுத்து வருவதாகத் தெரிவிக்கப்படுகின்றது.

அடக்கி-ஒடுக்கலுக்கு உள்ளாகும் எந்த மக்களும், தமது அதிகாரத்தை, அதிகாரப் பிரயோகத்தை தங்கள் கைகளில் எடுத்தால், அரச எடுபிடிகளான அதிகாரிகள் அல்ல, அரசின் ராணுவமும் மிரண்டோடும்!