Thu04182024

Last updateSun, 19 Apr 2020 8am

இன்றைய அமைச்சரவைக் கூட்டம் 13-ற்கு சமாதி கட்டிவிட்டதா?

நேற்று முன்தினம் சிறிலங்கா அதிபர் மகிந்த ராபக்ச தலைமையில் நடத்தப்பட்ட ஆளும் கூட்டணிக் கட்சிகளின் தலைவர்களின் கூட்டத்தில் 13-வது திருத்தத்திற்கு சமாதி கட்டும் பல யோசனைகள் முன்வைக்கப்பட்டதாம்…

 இதன் பிரகாரம் 13வது திருத்தத்தின் கீழ் மாகாணசபைகளுக்கு உள்ள அதிகாரங்களைப் பறிப்பது தொடர்பாக இன்றைய அமைச்சரவைக் கூட்டத்தில் முக்கிய முடிவு எடுக்கப்படவுள்ளதாக கொழும்புத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

இதன்படி 13வது திருத்தச் சட்டத்தில் உள்ள மாகாணசபைகள் தாமாக இணைந்து கொள்வதற்கு வழிசெய்யும் பிரிவை நீக்குவதற்கு ஒப்புதல்கள் வழங்கப்பட்டுள்ளன. எதிர்காலத்தில் வடக்கு-கிழக்கு மாகாணங்களின் இணைவை நடைமுறைச் சாத்தியமற்றதாக்கும் நோக்குடனேயே இம்முடிவு கொண்டு வரப்பட்டுள்ளது.

புதிய யோசனைகளினபடி மாகாணசபைகளின் அதிகாரங்கள் தொடர்பான சட்டங்களைக் கொண்டு வரும்போது, எல்லா மாகாணசபைகளினதும் அனுமதி பெறப்பட வேண்டும்.  பெரும்பான்மை மாகாணசபைகளின் ஆதரவுடன்தான் நாடாளுமன்றத்தில் மாகாணசபைகள் தொடர்பான எத்தகைய சட்டங்களையும் மாற்றியமைக்க முடியும்

வடக்கு மாகாணசபைத் தேர்தலுக்கு முன்னதாக மாகாணங்களின் அதிகாரங்களை பறிப்பதில் சிறிலங்கா அரசு தீவிரம் காட்டி வருகிறது.  

மேலும் 13-வது திருத்தம் குற்றுயுயிருடன் உள்ளது என்ற இந்தியாவினதும் தமிழ்க்கட்சிகளினதும் எதிர்ப்புகளைப் பொருட்படுத்தாமல் சிறிலங்கா அரசாங்கம் 13வது திருத்தத்தை நீர்த்துப் போகச் செய்யும் முயற்சியில் இறங்கியுள்ளதாக இந்தியாவின் பிரிஐ செய்தி நிறுவனம் குறிப்பிட்டுள்ளது;

இம்முடிவானது விமல் வீரவன்ச போன்ற சிங்களப் பேரினவாத இனவெறியர்களுக்கு அளவில்லாப் பெரும் பேரானந்தமதான்! இதேவேளை இன்னொரு இனவெறியருக்கு திருத்தம் போதாதாம்!

"திருத்தம் போதாது!" பொலிஸ் மற்றும் காணி அதிகாரங்களையும் ஒழிக்க வேண்டும்: சம்பிக்க!

அரசாங்கம் 13 ஆவது திருத்தச் சட்டத்தில் குறிப்பிட்ட சில பாரதூரமான அதிகாரங்களில் திருத்தத்தை மேற்கொள்ள தீர்மானித்துள்ளமையானது வரவேற்கத்தக்கது. என்றாலும் காணி மற்றும் பொலிஸ் அதிகாரங்கள் இரத்துச் செய்யப்பட வேண்டும் என ஜாதிக ஹெல உறுமயவின்  சம்பிக்க ரணவக்க தெரிவித்தார்.!

அடுத்து டக்ளஸ் தேவானந்தாவிற்கு மொழிபெயர்ப்பு விளங்கவில்லையாம் கொஞ்சம் பொறுங்கள் என்கின்றார்! சென்றகிழமை சொன்னார். அரசையும் என்னையும் வரும் வடமாகாண சபைத்தேர்தலில், வடபகுதி மக்கள் வெல்ல வைத்தால், பறிக்கப்பட்ட ராணுவப்பிரதேசத்தில் மக்களுக்கு மீள்குடியேற்றமாம்!

அப்போ தமிழ்மக்கள் அரசின் பக்கம் இல்லாததால்தான், இவரை எடுபிடியாக ஏற்காததால்தான், வடபகுதிக்கு இந்த "ராணுவ-சர்வாதிகார வசந்தமோ"!

--அகிலன்