Fri04192024

Last updateSun, 19 Apr 2020 8am

தந்தை யாரென்று தெரியாத நூற்றுக்கணக்கான சிறுவர்கள் வடக்கில்

altதமது தந்தையர்கள் யரொனத் தெரியாத 400க்கும் அதிகமான சிறுவர்கள் யாழ்ப்பாணத்தில் இருப்பதாக மகளிர் அமைப்புகள் கூறுகின்றன.

யுத்தம் முடிடைந்த பின்னரும் கூட தந்தையர் யரென்பதைத் தெரியாமல் பிறக்கும் குழந்தைகளின் எண்ணிக்கை உயர்ந்திருப்பதாகக் கூறும் மகளிர் அமைப்புகள், யுத்த காலத்தில் இப்படியான குழந்தைகளின் எண்ணிக்கை நூறுக்கும் கறைவாகவே காணப்பட்டதாகவும் சுட்டிக்காட்டுகின்றன.

 

யுத்த காலத்தில் பெற்றோர்களை இழந்த யுவதிகள் வடக்கில் தனித்து விடப்பட்டிருப்பதும், திருமணத்தின்போது யுவதிகள் செலுத்த வேண்டிய சீதனத்திற்கு பணம் இல்லாமையினால் பெற்றோர்களின் விருப்பத்திற்கு மாறாக காதல் வலைகளில் சிக்கி சீரழிவதுமே இவ்வாறு தந்தை பெயர் தெரியாத குழந்தைகள் பிறப்பதற்கு காரணமென யாழ்ப்பாணத்திலும், மன்னாரிலும் இயங்கும் மகளிர் அமைப்புகள் சுட்டிக் காட்டுகின்றன.

சிறுவர்கள் எதிர்கொள்ளும் பிரச்சினைகள் தொடர்பில் வவுனியாவில் நடந்த கருத்தரங்கிலேயே மேற்படி விடயங்கள் சுட்டிக்காட்டப்பட்டுள்ளன.

-lankaviews