Fri04192024

Last updateSun, 19 Apr 2020 8am

மலையக மக்களின் 150 வருட துயர் நீங்குமா?

•மலையக மக்களிற்கு சொந்தமாக வீடு, காணி கிடைக்குமா?

• மலையக மக்களுக்காக வடக்கு கிழக்கு தமிழர்கள் குரல் கொடுப்பார்களா?

இலங்கையில் மலையகத் தோட்டப்புறங்களில் உள்ள காணிகளை ரகசியமாக வெளியாருக்கு விற்கும் நடவடிக்கையை அரசாங்கம் நிறுத்த வேண்டும் என்று கண்டி மாவட்டத்தில் தெல்தோட்டை நகரில் இன்று சனிக்கிழமை ஆர்ப்பாட்டமொன்று நடத்தப்பட்டுள்ளது.அரசாங்கம் இரண்டு ஏக்கர் காணியை தோட்டத் தொழிலாளர்களுக்காக வழங்க வேண்டும் என்று ஆர்ப்பாட்டக்காரர்கள் கோரிக்கை விடுத்தனர்.

பெருந்தோட்ட மக்களின் நில உரிமைக்கான அமைப்பினால் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த இந்த ஆர்ப்பாட்டத்தில் பல்வேறு தொழிற்சங்கங்களைச் சேர்ந்தவர்களும் கலந்துகொண்டிருந்தனர்.

வரவு செலவுத் திட்ட உரையின்போது, ஜனாதிபதி வழங்கிய உறுதிமொழியின்படி மலையகத்திலுள்ள தோட்டக் காணிகள் பங்கிடப்படும்போது, தோட்டத் தொழிலாளர்களுக்கே முன்னிரிமை அளிக்கப்பட வேண்டும் என்று ஆர்ப்பாட்டக்காரர்கள் கோரிக்கை விடுத்தனர்.

மலையகத்தில் தோட்டத் தொழிலாளர்களின் குடியிருப்புகள் ஒன்றரை நூற்றாண்டுகள் கடந்தும் அவர்களுக்கு சொந்தமாக்கப்படவில்லை .

மலையக மக்களை பிரதிநிதித்துவப்படுத்துகின்ற பிரதான அரசியல்கட்சிகள் அரசாங்கக் கூட்டணியில் பங்கெடுக்கின்றமை குறிப்பிடத்தக்கது.

அதுமட்டுமல்ல அந்த மலையக மக்களுக்காக இரகசியமாக தொழிற்சங்கம் கட்டிய அசீஸ் அவர்களை காட்டிக்கொடுத்து சிறையில் அடைத்து வைத்த தோட்ட சொந்தக்காரரின் பெயர் எஸ்.ஜே.வி. செல்வநாயகம். ஆம் தந்தை செல்வாவே அந்த காட்டிக்கொடுத்த தோட்ட முதலாளி.

-தோழர் பாலன்