Fri03292024

Last updateSun, 19 Apr 2020 8am

மன்னார் புதைகுழிக்கு அரசே பொறுப்பு

மன்னார், திருக்கேதீஸ்வரம் மனிதப் புதைகுழி நேற்று எட்டாவது நாளாக தோண்டப்பட்ட போது மேலும் ஒரு மண்டையோடு கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இந்த மண்டையோட்டுடன் இதுவரை 44 மனித எழும்புக்கூடுகளும், மண்டையோடுகளும் இந்தக் குழியிலிருந்து மீட்கப்பட்டுள்ளன.

கடந்த மாதம் 20 ஆம் திகதி வீதியோரத்தில் நீர் விநியோகக் குழாய் புதைப்பதற்காக குழி தோண்டப்பட்ட போது இந்த மனிதப் புதைகுழி கண்டுபிடிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கதாகும்.

இதேவேளை பெண்கள் கழுத்தில் அணியும் முத்து மாலையின் குண்டு மணிகள் சிலவும் நேற்றுக் கண்டெடுக்கப்பட்டுள்ளன. இது பலத்த சந்தேகங்களை ஏற்படுத்தியுள்ளன என்று மீட்புப் பணியில் ஈடுபட்டுள்ள விசேட நிபுணர் குழுவினர் தெரிவித்தனர்.   

இதில் என்ன பலத்த சந்தேகம்? கைப்புண்ணிற்கு கண்ணாடியா தேவை. இலங்கையில் சிறுபான்மை இனங்கள் என்ற ஒன்றே இல்லை. எல்லாம் பெரும்பாண்மையே எனும் நிலை கொண்ட செயல்களின் தொழிற்பாடுகளில் ஒன்று தான் மன்னார் புதைகுளிச் சம்பவம்.

இன்னும் இப்படி எத்தனையோ கண்டுபிடிக்கப்படா குழிகள் உள்ளன. இவற்றிற்கு எல்லாம் அரசே பொறுப்பு.