Fri03292024

Last updateSun, 19 Apr 2020 8am

பிரேமச்சந்திர அண்ணாச்சி… நீங்கள் சொல்வது எப்போ "உண்மையாச்சு"?

"தமிழீழ விடுதலைப்புலிகள் பொதுமக்களை கொலை செய்த சந்தர்ப்பங்கள் ஒருபோதும் நிகழ்ந்திருக்கவில்லை. தமிழீழ விடுதலைப்புலிகளைப் பொறுத்தவரையில் பொதுமக்களை மிரட்டிய குற்றச்சாட்டுக்களை நாம் கேள்விப்பட்டிருக்கின்றோம். அதனை நாம் மறுக்கவுமில்லை. ஆனால் ஒரு போதும் பொதுமக்களை அவர்கள் கொலை செய்தார்கள் என கேள்விப்படவில்லை. அவர்கள் அவ்வாறு செய்ததுமில்லை"

பிரேமச்சந்திரன் அண்ணாச்சி என்னமோ ஜெனீவாவிற்கு சாட்சி சொல்கின்றாரோ? ஏதோ டக்கெண்டு வந்த புலிப்பாசக் கனவில், வாயில் வந்ததையெல்லாம் உளறுவதாக வைத்துக்கொண்டாலும், இதற்கூடாக யாரை திருப்திப்படுத்துவதற்காக இப்படி ஒரு மாபெரிய "உணமையை" வலிந்து சொல்கின்றார்?

தமிழக உணர்வாளர்கள் எல்லாம் உளம் பூரித்துப் பொங்கியெழப் போகின்றார்கள். நெடுமாற-வை.கோ.-சீமான் வகையறாக்கள் எல்லாம் பிரேமச்சந்திராவின் பிரபாகர பிரேம பாசத்தை பார்தது பட்டாசு கொழுத்தி, இனிப்புகள் பரிமாறப் போகின்றார்கள். மரீனாவில் உங்களுக்கு உயிரோடு சிலை வைக்கும் சிந்தனையும் அல்லவா தூண்டி விட்டீர்கள்.

புலிகளே தாங்கள் செய்த பலவற்றிற்கு தாங்களே உரிமை கோரியதை பிரேமச்சந்திரர் எனும் பிரமசக்தி அறியமாட்டாரோ? இவருடைய இயக்கம் உட்டபட எல்லா இயக்கங்களையும் இல்லாதாக்கியதில், அமிர்தலிங்கம் உட்பட்ட கூட்டமைப்பின் தலைவர்களை எல்லாம் கூண்டோடு கைலாசம் போக்காட்டியது எல்லாவற்றையும் கண்ண பரமார்த்தாவின் மன்னனும் நானே மரம் செடி கொடியும் நானே எனும் குருசேத்திர பகவத் கீதையாக படியுங்கள் என உபதேசிக்கின்றாரோ?

இப்படிப் பார்த்தால் மகிந்தாவும், தனது அரசும் பொதுமக்களை தாம் கொல்லவில்லை என்ற உபதேசத்தையும் ஏற்றுக்கொள்ளலாம்தானே? "ஜெனீவாக்காரன்கள் எல்லாம் ஒன்றாய்ச் சேர்ந்து பொய் சொல்லி கடாபிபோல் என்னை கொல்லப்பாக்கிறாங்கள்" என மகிந்தா சொல்வதையும், மின்சார நாற்காலியில் உட்கார விடப்போறாங்கள் என்பதையும் மனம் கொள்ளலாம்தானே?

முல்லலைத்தீவு மூங்கிலாறுப் பிரதேசத்தில் மீட்கப்பட்ட மனித எலும்புக் கூடுகளுக்கும், அதற்கான கொலைகளுக்கும் புலிகளுக்கும் சம்பந்தமில்லையென சொல்லிவிடடு போறதுதுக்கு ஏன் இந்த (சிலவேளை நான் அப்படிச் சொல்லவில்லை. இப்படிதான் சொன்னேன் என்றும் சொல்லக்கூடிவர்கள் தான் சுரேஸ் போன்ற கூத்தமைப்பின் கூத்தாடிகள்) புலிப்பாதுகாப்பு பரிகாரம்.

கேட்கிறவன் கேணையனாக இருந்தால் கேப்பை மாடும் பிளேன் ஓட்டும் என சொல்கின்ற "பிரேம அரிச்சந்திரன்களின் அரசியல்" ஆனது மக்கள் மத்தியில் இவர்களின் இயலாமையைத்தான் பிரதிபலிக்கின்றது. அதை தக்கவைக்கவே இக்கூத்துக்கள்.