Fri03292024

Last updateSun, 19 Apr 2020 8am

கோமா நிலையிலிருக்கும் ஹக்கீம்!

எப்போதுமே கோமா நிலையிலிருக்கும் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் தலைவர் தேர்தல் வந்து விட்டால் விழித்துக்கொள்கிறார். ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரசும், ஜாதிக ஹெல உறுமயவும் அரசாங்கத்திலிருந்து வெளியேறினால் அந்த கட்சிகளுக்கு தொற்றிக் கொள்வதற்கு இடம் இல்லை என்று மத்திய மாகாண சபையின் ஐ.தே.க. உறுப்பினர் அசாத் சாலி தெரிவித்தார். அண்மையில் பொதுபலசேனாக்களுக்கு இவ்வளவு அதிகாரங்களை கொடுத்தவர்கள் யார் என கேள்வியெழுப்பினார். இவ்வாறான கேள்விகளை அமைச்சரவை அமைச்சராக இருக்கும் இவர் அமைச்சரவையில் அல்லவா கேட்க வேண்டும். அதனை விடுத்து மக்களிடத்திலா கேட்பது?

மேற்சொன்னவைகள் கோமாவெனில் பின்சொல்பவைகளை கோமாளித்தனமாக கொள்ளலாமோ?

"அரசாங்கத்துக்கு எதிராக விமர்சனங்களை முன்வைக்கின்ற போதும், நாம் அமைச்சு பதவியில் இருந்து விலகப் போவதில்லை இதேவேளை நல்லிணக்க ஆணைக்குழுவின் பரிந்துரைகளை இலங்கை அரசாங்கம் முழுமையாக நடைமுறைப்படுத்த வேண்டும் எமத கட்சி ஐ.நா மனித உரிமைகள் ஆணையாளர் நவநீதம்பிள்ளையிடம் கையளித்த அறிக்கை தொடர்பில்  ஜெனிவாவில் அரசாங்கத்துக்கு பாதிப்பு ஏற்படப் போவதில்லை."" இப்படி எத்தனைகாலம்தான் ஏமாற்றும் நோக்கமோ? ஏமாற்றிற்கும் ஓர் இயங்கியல் உண்டு.