Thu04182024

Last updateSun, 19 Apr 2020 8am

உக்ரைனில் ரஷிய ராணுவம்: புகைப்பட ஆதாரத்தை வெளியிட்டது அமெரிக்கா!

உக்ரைன் கிழக்குப் பகுதியில் முகாமிட்டுள்ள ஆயுதம் ஏந்திய கிளர்ச்சியாளர்களுடன் ரஷிய ராணுவத்தினரும் அதன் உளவுத்துறை அதிகாரிகளும் உள்ளனர் என்பதற்கான புகைப்பட ஆதாரத்தை அமெரிக்க வெளியுறவுத்துறை வெளியிட்டுள்ளது.

இதன் மூலம் அந்தப் பிராந்தியத்தில் தங்கள் ராணுவம் ஊடுருவவில்லை என்று மறுத்து வரும் ரஷியாவின் கூற்றினை பொய் என்பதை நிரூபிக்கும் வகையில் அமெரிக்கா ஈடுபட்டுள்ளது.

இது குறித்து அமெரிக்க வெளியுறவுத்துறை செய்தித் தொடர்பாளர் ஜேன் சாகி கூறுகையில் ""உக்ரைன் அதிகாரிகளால் எடுக்கப்பட்ட இத்தகைய புகைப்படங்களை சர்வதேச பத்திரிகை அல்லது டுவிட்டர் இணையதளத்தில் காணலாம். இவை ரஷிய ராணுவத்துக்கும், கிளர்ச்சியாளர்களுக்கும் இடையே உள்ள தொடர்பை உறுதி செய்வதற்கான ஆதாரங்களாகும்'' என்கிறார். ஐரோப்பிய பாதுகாப்பு மற்றும் ஒத்துழைப்பு அமைப்பின் மூலம் அமெரிக்காவிடம் இந்தப் புகைப்படங்களை உக்ரைன் வழங்கியுள்ளதாகக் கூறப்படுகிறது.

கிரீமியா மற்றும் கிழக்கு உக்ரைன் பிராந்தியத்தில் க்ரமடார்ஸ்க் நகர் காவல் நிலையத்தை கிளர்ச்சியாளர்கள் கைப்பற்றியபோது எடுக்கப்பட்ட புகைப்படத்தில் 2008இல் ஜார்ஜியாவில் ரஷிய சிறப்புப் படை வீரர்கள் முகாமிட்டிருந்தபோது அவர்கள் அணிந்திருந்த சிவப்பு பட்டையைப் போன்று கிளர்ச்சியாளர்கள; அணிந்துளளதை புகைப்படங்களின் மூலம் காணமுடிகின்றது என அமெரிக்கா சொல்கின்றது.!

அமெரிக்கா சொல்வது ஒருபுறம் இருக்க, உக்ரைனின் சுதந்திரம்-சுயாதிபத்தியததிற்காகவே ரஸ்யா இப்பாடுபடுகினறது என குத்தி முறியும் இடதுக்ளும் அவைகiளின் வேடிக்கையான திரிபுவாத வக்காலத்துதுக்களும் சிறப்பு மிக்கதாகவே உள்ளது. ஏகாதிபத்தியம் என்றால் அது அமெரிக்காவிற்கே உரியதாம். ரஸ்யாவிற்கில்லையெனும் வாதம் புல்லரிக்கின்றது. இவர்கள் லெனின் அவர்களின் ஏகாதிபத்தியம் பற்றிய "மெய்யுண்மையை" எங்கிருந்துதான் கற்றார்களோ? இதை கல்லாதவன் கற்ற கவி என்றும் சொல்லலாம்தானே?