Fri04192024

Last updateSun, 19 Apr 2020 8am

காணமல் போன விவகாரத்தை உளவியல் பிரச்னையாக்கும் ஆணைக்குழு

உளவியல் சிகிச்சை மூலம் காணமல் போன விவாகரத்துக்கு தீர்வு காண வழிகாட்டுகின்றார், காணமல் போனவர் தொடர்பாக ஆராயம் ஆணைக்குழுவின் செயலர் குணதாச. இலங்கையில் எவரும் காணமல் போகவில்லை என்பதே அரசின் நிலைப்பாடு. அதை நிறுவவே ஆணைக் குழு. 

இறப்புச் சான்றிதழ்களை பெற்றுக்கொள்ள விருப்பம் இல்லாதவர்களுக்கு மனநல ஆலேசனை என்கின்றார் ஆணைக்குழுவின் செயலர். காணமல் போனவர்கள் இறந்து விட்டதாக கூறுகின்றதன் மூலம், காணமல் போனதாக கூறுவதை மனநோயாக காட்ட முற்படுகின்றது அரசு.  

எங்கே எப்போது காணாமல் போனார்கள் என்பது பற்றிய தகவல்கள் கிடையாது என்பதன் மூலம், காணமல் போனவர் என்று கூறவதே பொய் என்கின்றனர். அதை வெறும் மனநோயாக்கி, உளவியல் சிகிச்சையை வழங்க முனைகின்றது மகிந்தாவின் ஆணைக் குழு.

காணமல் போனவர்களுக்கு என்ன நடந்தது என்ற சுயதீனமான விசாரணையைச் செய்வதன் மூலம் தான், உண்மையை மட்டுமல்ல, அதற்கான தீர்வையும் கூட பெற்றுக் கொடுக்க முடியும்.