Thu03282024

Last updateSun, 19 Apr 2020 8am

சமூக நீதிக்கான அமைப்பினர் முஸ்லீம் மக்கள் மீதான தாக்குதல்களை கண்டித்து வவுனியாவில் ஆர்ப்பாட்டம்.

அளுத்கம முஸ்லீம் மக்கள் மீதான தாக்குதலைக் கண்டித்து வவுனியா நகரின் பிரதான பள்ளிவாசல் அருகில் கண்டன ஆர்பாட்டம் ஒன்று ஏற்பாடு செய்யப்பட்டு இருந்தது. இதனை சமூக நீதிக்கான வெகுஜன அமைப்பின் வவுனியா மாவட்டக்கிளையின் தலைவர் ந.தேவகிஸ்னன் தலைமையில் முன்னேடுத்தது. இதில் மூஸ்லீம்,  தமிழ் மக்கள் அணிதிரண்டிருந்தனர். மக்கள் மத்தில் புதிய ஜனநாகய மாக்சிச லெனினிச கட்சியின் வவுனியா மாவட்டக்கிளையினர் தோழர் ந.பிரதிபன் தலைமையில் முன்னின்றனர். அளுத்கம கொலை வெறித் தாக்குதல்களை கண்டித்தும் பொது பலசோனாவை தடைசெய்யக் கோரியும் ஆர்ப்பட்ட முழக்கம் இட்டனர்.

சிறிது நேரத்தில் 500 மேற்பட்ட பொலீசார் அவ்விடத்தை சுத்தி வளைத்து ஆர்ப்பட்டம் செய்ய வேண்டாம் என்று மறித்தனர். இதனால் மக்களுக்கு பொலீசாருக்குமிடையில் வாக்குவாதம் ஏற்றபட்டது தோழர் பிரதீபனும் ஏனைய தோழர்களும் இது எமது ஜனாயக  உரிமை என்று அநீதி எங்கு இடம் பெற்றலும அதனை தட்டி கேட்கும் உரிமை நமக்கு உண்டு என்றும் வாதாடினர். அவ்வேளை பொலீஸ் உயர் அதிகாரிகள் பலாத்காரமாக தோழர்கள் பிரதீபனையும் தேவகிருஸ்னனையும் தமது வாகன்த்தில் ஏற்ற முற்பட்டனர். ஆனால் அங்கிருந்த தமிழ், மூஸ்லீம் மக்கள் அதனைத் தடுத்து பொலீஸாரிடம் இருந்து விடுவித்துக் கொண்டனர். தன் பின் தம்மிடம் நீதிமன்ற உத்தரவு இருப்பதாக கூறி  மக்களை கலைந்து செல்லுமாறு கூறி தாக்குதலுக்கு தயார் ஆகினர் பொலீஸாரின் இந்த அராஜக நடவடிக்கையை தமிழ் மூஸ்லீம் மக்கள் வன்மையாக கண்டித்தனர்