Fri03292024

Last updateSun, 19 Apr 2020 8am

கிரேக்க இடதுசாரி முன்னணியின் தேர்தல் வெற்றியும் எதிர்காலமும்: அரசியல் ஆய்வு (வீடியோ )

கிரேக்கத்தில் அண்மையில் நடைபெற்ற தேர்தலில் இடதுசாரிய கட்சிகளின் முன்னணி (SYRIZA) வெற்றி பெற்று ஆட்சியை அமைத்திருக்கின்றது. SYRIZAவின் இவ் வெற்றியானது ஐரோப்பிய அரசியலில் பல மாற்றங்களுக்கு வழிவகுக்கும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

அதேவேளை, ஆட்சி அதிகாரத்தைப் பெற்றுள்ள இக் கட்சியானது எவ்வாறு ஐரோபிய ஒன்றியம் மற்றும் சர்வதேச நாணய நிதியம் போன்றவற்றின் கிரேக்கம் மீதான பொருளாதர ஆதிக்கத்தை கையாளப் போகின்றது என்பதிலேயே அதன் வெற்றியும் எதிர்காலமும் தீர்மானிக்கப்படும். நவதாராளவாத பொருளாதாரவாத்தில் சிக்கி இன்று கிரீஸ் பாரிய வெளிநாட்டுக் கடன் சுமையால் பொருளாதார பிரச்சனையில் சிக்கியுள்ளது.

ஜரோப்பிய நாடு ஒன்றில் இடதுசாரிய கட்சி ஆட்சி அமைத்துள்ளமை ஒரு முக்கிய விடயமாக இன்று உலகெங்கும் பார்க்கப்படுகின்றது. இந்த மாற்றம் எப்படி நிகழ்ந்தது? இது குறித்த ஆய்வினை கீழே உள்ள  வீடியோ இணைப்பினை அழுத்தி பார்க்கவும்.

கிரேக்க இடதுசாரி முன்னணியின் தேர்தல் வெற்றியும் எதிர்காலமும்: அரசியல ஆய்வு