Thu03282024

Last updateSun, 19 Apr 2020 8am

அப்பாவி தமிழ் மக்களிடம் எரிக் சொல்ஹெய்ம் மன்னிப்பு கோர வேண்டும்

அப்பாவி தமிழ் மக்களிடம் எரிக் சொல்ஹெய்ம் மன்னிப்பு கோர வேண்டும் ‐ கொமின் தயாசிறி !

இவர்மாத்திரம்தான் மன்னிப்புக் கோரவேண்டுமா?

பிரபாகரனை 300-மீற்றருக்குள் வரவைத்து சாகடித்தவர்கள், தமிழ்மக்கள் விடுதலையை குத்தகை எடுத்தவர்கள், கொடுத்தவர்கள், இவர்கள் எல்லாம் மன்னிப்பு கேட்டுள்ளார்களோ?

நோர்வேயின் சர்வதேச அபிவிருத்தி அமைச்சர் எரிக் சொல்ஹெய்ம்இ அப்பாவி தமிழ் மக்களிடம் மன்னிப்பு கோர வேண்டுமென பிரபல சட்டத்தரணி கொமின் தயாசிறி தெரிவித்துள்ளார். உண்மையைக் கண்டறியும் ஆணைக்குழுவிடம் சாட்சியமளித்த போது அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.

 

எரிக் சொல்ஹெய்ம் தமிழீழ விடுதலைப் புலிகளுக்கு ஆதரவான முறையில் செயற்பட்டு வந்தாகவும்இ அரசாங்கத்தைச் சேர்ந்த சிலர் அதற்கு ஒத்துழைப்பு வழங்கியதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார். புலிகளுடன் சொல்ஹெய்ம் நட்புறவினைப் பேணியதாகவும், சமாதான ஏற்பாட்டாளராக செயற்படவில்லை எனவும் அவர் குற்றம் சுமத்தியுள்ளார்.

விடுதலைப் புலிகளுடனான சமாதான முனைப்புக்களின் போது நோர்வேயை சமாதான ஏற்பாட்டாளராக தெரிவு செய்தமை பாரிய தவறாகும் என அவர் தெரிவித்துள்ளார்.

ஆசிய கலாச்சாரத்தையோ, நாகரீகங்களையோ நோர்வே சமூகம் அறிந்திருப்பதற்காக நியாயம் கிடையாது எனவும், இதனால் சமாதான ஏற்பாட்டாளராக மேற்குலக நாடொன்றை தெரிவு செய்தமை பொருத்தமற்றதென அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

யுத்த நிறுத்த உடன்படிக்கை வீழ்ச்சியடைந்தமைக்கான ஏதுக்களை விளக்கிய போது அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.

தமிழ், சிங்கள மக்களின் மனநிலையை நோர்வே அரசாங்கமோ அல்லது எரிக் சொல்ஹெய்மோ அறிந்திருக்க வாய்ப்பில்லை என

சட்டத்தரணியார், இலங்கையின் 60-ஆண்டுகாலத்திற்கு மேலான தேசிய இனப்பிரச்சியின் தலை-வால்களை விட்டுவிட்டு வெறும் முண்டத்தை வைத்து, உந்த "உண்மையைக் கண்டறிவோருக்கு" சாட்சியம் அளிக்கின்றார்!.  நீண்டகாலத்தை விடுவோம்!.  மே 18-ற்கு முந்தைய 1-வருடத்தையாவது பார்ப்போம்!. புலியை மெளனமாக தோற்கடித்த தமிழ்மக்கள் அபிலாஸைகளை கண்க்கில் எடுத்து, அவர்கள் பிரச்சினையைத் தீர்க்காது படுகொலைகள் செய்த மகிந்தப் பேரினவாதம். இதற்கு துணை போன தேசிய-சர்வதேசியக் கூட்டாளிகள்தான் முதலில் மன்னிப்பு கோரவேண்டும்!

அத்தோடு 300-மீற்றருக்குள் வெள்ளைக் கொடியுடன் வந்தவர்களை, ஏன் பிரபாகரனைக் கூட வரச்செய்து அவரையும் குடும்பத்தையும் தரை-கடல்-ஆகாய மார்க்கமாக காப்பாற்றுவோம் என் காப்பாற்றாமல் சாகடித்தவர்கள் மன்னிப்பு கேட்டுவிட்டார்களா? ஏன் "தலைவரின்" மறைவிற்கு ஓர் நேர்மையான அஞ்சலி செய்யாத நாடு கடந்தவர்கள் அதன் ஐனாதிபதி-பிரதமர்-மந்திரிகள்தானாவது மன்னிப்பு கேட்டார்களா ?