Thu03282024

Last updateSun, 19 Apr 2020 8am

இந்த மண்ணில் சொர்க்கத்தைப் படைப்போம் 13

ஸ்டாலின் தூற்றப்படுவது ஏன்?: பகுதி 13

1932 இல்ஸ்டாலினை பலாத்காரமாக தூக்கியெறியமுனைந்தாக 4ம் அகிலத்தின் வாக்குமூலம்

மார்க்சியத்துக்கு விரோதமான டிராட்ஸ்கியத்தின் அடிப்படைக் கோட்பாடுகள், லெனின் தலைமையிலான சோசலிச புரட்சி மீதே இருந்து வந்ததுதான். இதை லெனின் போதுமான அளவு பண்பாடு வளர்ந்திராத ஒரு நாட்டில் சோசலிசத்தை நிலைநாட்டுவதை மேற்கொள்வதில் நாம் மிகவும் அவசரப்பட்டு விட்டோம் என்று நமது எதிர்ப்பாளர்கள் திரும்பத் திரும்ப நம்மிடம் கூறியிருக்கிறார்கள். தத்துவத்தில்எல்லாவகைப் பண்டிதர்களின் தத்துவத்திலும்குறிப்பிடப்பட்டுள்ள முடிவுகளுக்கு நேர்மாறான முடிவிலிருந்து நாம் தொடங்கியதால் அவர்கள் இந்த தவறான கருத்துக்கு வருகிறார்கள். நமது நாட்டில் அரசியல் மற்றும் சமூகப்புரட்சி, பண்பாட்டுப் புரட்சியை முந்தி விட்டது. ஆயினும் அதே பண்பாட்டுப் புரட்சி இப்போது நம்மை எதிர்கொள்கின்றது என்றார். இதைத் தான் பின்னால் தனிநாட்டு சோசலிசம் என்று கூறி டிராட்ஸ்கியம் எதிர்த்தது. கோட்பாட்டு ரீதியாகவே டிராட்ஸ்கியம் சோசலிச கட்டுமானங்கள் அனைத்தையும் எதிர்த்தது. சோசலிச நிர்மாணம் ஒரு தனிமைப்படுத்தப்பட்ட தேசிய அரசின் கட்டுமானத்தினுள், எல்லாவற்றுக்கும் மேலாக பின்தாங்கிய ரஷ்யாவில் முடியாது என்று கூறி டிராட்ஸ்கி சோசலிச கட்டுமானங்களை எதிர்த்தான். இதை நான்காம் அகிலம் ஸ்டாலினுக்கு எதிராக முன்வைக்கின்றது. சோவியத்யூனியனில் நீடித்த முதலாளித்துவ உற்பத்தி சார்ந்த இடைகால பொருளாதாரத்தை முடிவுக்கு கொண்டு வருதல், தனியார் விவசாயம் என்பதற்கு பதில் கூட்டுடைமையாக்கலை உருவாக்கல் என்ற தொடர்ச்சியான இடைவிடாத வர்க்கப் போரட்டத்தினூடான சோசலிச கட்டுமானங்களை டிராட்ஸ்கி எதிர்த்தான். இதற்கு எதிராக பல சதிகளை தொடர்ச்சியாக செய்தான். தனிநாட்டில் சோசலிசம் சாத்தியமில்லை, எனவே ஸ்டாலின் சோசலிச கட்டுமானங்களை நடைமுறைப்படுத்துவது அனுமதிக்க முடியாது என்றான்.

 

 

இதற்கு மாறாக ஸ்டாலின் 1931 இல் நாம் வளர்ச்சியடைந்த நாடுகளில்; இருந்து ஐம்பது அல்லது ஒரு நூறாண்டுகள் பின்தாங்கியுள்ளோம். இந்த இடைவெளியை நாம் பத்தாண்டுகளில் நிரப்ப வேண்டும். ஒன்று நாம் இதைச் செய்தாக வேண்டும் அல்லது நாம் வீழ்ந்தாக வேண்டும் என்றார். இதைச் செய்யாமல் வீழ்ந்தாக வேண்டும் என்பதை, டிராட்ஸ்கி மற்றைய எதிர்ப்புரட்சிக் கும்பல்களும் மனமாற விரும்பினார். அதற்கான சதிகளையே தன்னுடைய‌ சொந்த அரசியலாக கொண்டான். ஸ்டாலின் இதற்கு மாறாக இதன் முக்கியத்துவத்தை விளக்கும் போது “…சோசலிசம் எவ்வளவுக் கெவ்வளவு கூடுதலான செழுமையாக முதலாவது வெற்றியடைந்த நாட்டில் கெட்டிப் படுத்தப்படுகிறதோ, இந்த நாடு ஏகாதிபத்தியத்தை மேலும் சிதைவுறச் செய்வதற்கு ஒரு நெம்புகோலாக, உலகப் புரட்சியை மேலும் அருகில் கொண்டு வருவதற்கு ஒரு தளப்பிரதேசமாக எவ்வளவுக் கெவ்வளவு வேகமாக மாற்றப்படுகின்றதோ, அந்த அளவுக்கு உலகப் புரட்சியின் வளர்ச்சி, பல்வேறு புதிய நாடுகள் எகாதிபத்தியத்திடமிருந்து அறுத்துக் கொண்டு போகும் நிகழ்ச்சிப் போக்கு மிகவும் துரிதமாகவும் செழுமையாகவும் இருக்கும் என்பதில் சிறிதும் ஐயமில்லை என்றார். 1917ம் ஆண்டு சோவியத்தில் நடந்த புரட்சி, உலகை எந்த அளவுக்கு உலுக்கி ஏகதிபத்தியத்தையே நிலைகுலைய வைத்ததோ, அந்தளவுக்கு சோசலிச கட்டுமானங்களும் உலகை உலுக்குவதை டிராட்ஸ்கி மறுத்தான். சோசலிச கட்டுமானமே தவறு என்றான். மாறாக முதலாளித்துவத்துக்கு திரும்பி போக விரும்பினான். அதனடிப்படையில் டிராட்ஸ்கியம் சோவியத்தில் அரசிலும் கட்சியிலும் கிடைத்த உயர் பதவிகளையும், அதிகராத்தையும் முழுமையாக பயன்படுத்தி, சோசலிச கட்டுமானத்தை எதிர்த்து பல்வேறு வழிகளில் செயல்பட்டது.

 

ஸ்டாலின் கோட்பாட்டு ரீதியாக இதை எதிர் கொண்டு அம்பலப்படுத்தும் போது சோசலிசப் புரட்சியும், சோசலிச நிர்மாணமும் இடைத்தட்டு சக்திகளை குட்டி முதலாளித்துவ வர்க்கத்தினரை படிப்படியாக இல்லாதொழிக்கிறது. பாட்டாளி வர்க்கத்தினராக மாறும்படி நிர்ப்பந்திக்கிறது. எனவே பாட்டாளி வர்க்க சர்வதிகாரத்தின்ஆட்சியைஅதனால் சகித்துக் கொள்ள முடியவில்லை. அவர்கள் தமது அழிவைத் தவிர்த்துக் கொள்வதற்காக ஒரே தாண்டில் சோசலிசத்திற்குள் குதித்து விடவோ அல்லது அது சாத்தியப்படவில்லை என்றால் சிந்தனைக்குப் படுகிற ஒவ்வொரு சலுகையையும் முதலாளித்துவ வர்க்கத்துக்கு வழங்கவோ இவ் வர்க்கம் சரணாகதிக் கொள்கையை உருவாக்குகிறது என்பதை தெளிவாகவே ப்படுத்தி, ஸ்டாலின் சோசலிசத்தை நிர்மாணம் செய்தார். சோசலிசம் என்பது பொருளாதார கட்டுமானத்தை மட்டும் பிரதிபலிப்பது அல்ல. மாறாக, பிரதானமாக வர்க்கப் போராட்டத்தை தொடர்வதையே குறிக்கின்றது. சமுதாயத்தை மேல் நோக்கி நகர்த்தும் பணியிலான முன்னேற்றம் என்பது, சமுதாயத்தில் நடக்கும் தொடர்ச்சியான வர்க்க போராட்டங்களையே குறிக்கின்றது. இங்கு பழையது அழிகின்ற போது, புதியது படைக்கப்படுகின்றது. இது தொடாச்சியாக தொடர்கின்ற நிகழ்வாக இருக்கும் போதே, சோசலிசமாக முன்னேறுகிறது. வர்க்கங்களை ஒழிக்கும் நிகழ்ச்சி போக்கை உள்ளடக்கிய நீடித்த நிகழ்ச்சியே சோசலிசமாக உள்ளது. இது நிலையான ஒன்றை தொடாச்சியாக பாதுகாப்பது அல்ல. இதை மறுத்து, தனிநாட்டில் மாற்றம் செய்யக் கூடாது எனும் டிராட்ஸ்கியத்தின் கோட்பாட்டு அடிப்படையில் வர்க்கப் போராட்டம் தொடர்வதை எதிர்த்து, அது சதிகளில் இறங்கியது.

 

இந்த சதியில் முரண்பாடுகளை களைவதற்காக இரகசிய சதிக் கூட்டங்களை நடத்தினர். இதை நான்காம் அகிலம் வாக்கு முலமாக முன்வைத்து பெருமையாக பீற்றுவதைப் பார்ப்போம். “…..தனது இடது வலது எதிர்ப்புக் குழுக்களுடனான அரசியல் சித்தாந்த முரண்பாடுகளை தீர்த்துக் கொள்வதற்காக… 1932ம் ஆண்டளவில் இடது வலது எதிர்ப்பாளர்களிடம் இருந்த முரண்பாடுகள் விலக்கப்பட்டிருந்தன அல்லது ஒரளவு சுமூகமாயிருந்தன. முக்கிய புரட்சிகர எழுத்தாளரான வீக்டர் சேர்ஜி நாடு கடத்தப்பட்டு ஐரோப்பாவிற்கு வந்த பின்னர் தான், பல முன்னாள் வலது எதிர்ப்பாளர்களை சந்தித்ததாகவும் புக்காரின் ஆதரவாளர்கள் அப்போது அவர்கள் லியோன் டிராட்ஸ்கி தொடர்பாயும் இடது எதிர்ப்பாளர்கள் தொடர்பானதுமான அவர்களது அணுகுமுறை கணிசமான அளவு மாறியுள்ளதாக கூறியதாகவும் குறிப்பிடுகின்றனர் 4ம் அகிலம் முன்னாளைய வலதுகளுடன் கூடி நடத்திய சதியை உள்ளடக்கிய வாக்கு மூலத்தை இப்படி முன்வைக்கின்றனர். ஸ்டாலின் பிரயோகித்த சில நடவடிக்கையே வலதையும் இடதையும்,  1932 இல் ஒன்றினைத்தது என 4ம் அகிலம் குறிப்பிடுகின்றது. 1932லும், 32க்கு முன்பும் கட்சியில் இருந்த குழுக்கள் இரகசியமாகவும், பகிரங்கமாகவும் சதி செய்த போதும், ஸ்டாலின் அதை பகை முரண்பாடாக மாறாத எல்லைவரை கடுமையான தத்துவார்த்த போராட்டங்களையே நடத்தினார். மார்க்சிய தத்துவத்தை சோசலிச நிர்மாணம் மீது வளர்த்த போது, இவர்களால் ஸ்டாலினை எதிர்த்து நிற்க முடியவில்லை. மாறாக‌, இவர்கள் இந்த பிரச்சனையை எதிர்கொள்ள‌, சதிகள் மூலம் ஆட்சியை கைப்பற்ற முனைந்தனர்.

 

இவர்கள் கட்சியின் பல பிரிவுகளில் முன்னணிப் பொறுப்புக்களில் இருந்து இதைச் செய்தனர். இந் நிலையில் சதிகள் அம்பலமான போது அவர்களின் பதவிகளில் இருந்து விலக்கப்பட்டனர். தவறை உணர்ந்து திருந்தியவர்கள், தமது தவறை ஒத்துக்கொண்டவர்கள் மீள கட்சியில் சேர்க்கப்பட்டனர். அதைவிட தொடர்ந்து அப்பட்டமான எதிர்ப்புரட்சியைச் செய்தவர்களுக்கு குறைந்த பட்ச தண்டனையும் வழங்கப்பட்டது. ஆனால் 4ம் அகிலம் தனது அரசியல் சதிகளையும் அதன் அடிப்படையையும் நியாயப்படுத்த, ஸ்டாலின் பூச்சாண்டி தேவையாக இருப்பதால் தான், தமது நடத்தைகளை மூடிமறைக்கின்றனர். தமது கொள்கைகளை பகிரங்கமாக வைப்பதை மறுக்கின்றனர். வலது, இடது இணைப்பிற்கிடையில் என்ன அரசியல் உண்டு எனப்பார்ப்பின், தொடரும் வர்க்கப் போராட்டத்தின் பாட்டாளி வர்க்க சர்வதேசியத்தை புறந்தள்ளுவது மட்டுமே ஒரு பொது வேலைத்திட்டமாக இருந்தது. ஸ்டாலின் காலத்தில் கட்சி முன்னெடுத்த பொதுவான பாட்டாளி வர்க்க திசைமார்க்கத்தை மறுத்தது நிங்கலாக‌இவர்கள் முன் இருந்தது முதலாளித்துவ மீட்சி நோக்கிய பாதை ஒன்று மட்டுமேயாகும்.

 

4ம் அகிலம் தனது கட்டுரையில் புரட்சிகர எழுத்தாளர்வீக்டர் சேர்ஜி பல முன்னாள் வலது எதிர்ப்பாளர்களை சந்தித்து இடதுடன் ஒன்றிணைத்தார் என்கின்றனர். ஒரு புரட்சிகர எழுத்தாளர் முன்னாள் வலதுகளைச் சந்தித்து, ஒன்றிணைக்கும் அந்தப் புரட்சிகரத் திட்டம் தான் என்ன? எல்லாம் முதலாளித்துவ மீட்சிக்கான திட்டமேயாகும். இங்கு புரட்சிகரம் என்பது எதிர் புரட்சிகரமே. அவரின் எழுத்து என்ன என்பதை, அவரின்  முன்னாள் வலதுகளின் கூட்டு அத்தாட்சிப்படுத்துகிறது. மேலும் எப்படி சதியைத் திட்டமிட்டனர் என்பதை, 4ம் அகில வாக்கு மூலத்தில் இருந்தே ஆராய்வோம்.

 

“1932ம் ஆண்டு இலையுதிர் காலத்தில் புகாரின் ஆதரவாளர்கள் மாஸ்கோவில் ஒரு மாநாடு கூட்டி ஸ்டாலினை எவ்வாறு எதிர்ப்பது என்பது தொடர்பாக ஆராய்ந்தார்கள். மூன்று வருடங்களுக்கு முன்னர் இளமையான மிகப் பிரபல்யம் அற்ற புகாரின் ஆதரவாளரான இப்போது 95 வயதுடைய வலன்ரீன் அஸ்ரோவ்வினை (2000ம் ஆண்டில் உயிருடன் இருந்தார்) சந்திக்கக் கூடியதாக இருந்தது. முதலாவது இளம் வயது எதிர்ப்பாளர்களின் கூட்டம் இவரது வீட்டில் நடந்தது. அத்துடன் அவர்கள் ஸ்டாலினை பலாத்காரமாக துக்கியெறிய வேண்டியது தொடர்பாக பகிரங்கமாக கலந்துரையாடிதை மிகவும் ஞபகத்தில் வைத்திருந்தார். அவர் தனது தோழர்களுக்கு ஸ்டாலினுக்கு எதிரான போராட்டத்தில் கலந்து கொள்ள விரும்பவில்லை எனக் கூறியதால், அடுத்த கூட்டம் வேறு ஒரு இடத்தில் அவர் கலந்து கொள்ளாமலேயே நடந்தது. பின்னர் வலன்ரீன் அஸ்ரோவ் சோவியத் உளவுத்துறையால் கைது செய்யப்பட்ட போது, இந்த இடங்களில் அவ்வப்போது நடந்த கூட்டங்களில் என்ன விவாதிக்கப்பட்டது என விசாரனையாளர்கள் கேட்ட போது, வலன்ரீன் அஸ்ரோவ் தனக்கு இப்படியான கூட்டங்கள் தொடர்பாக எதுவும் தெரியாது என பதிலளித்தார் அன்றைய சதிகளில் நேரடியாக ஈடுபட்ட ஒருவரின் வாக்கு மூலத்தை, இன்று பெருமையாக நியாயப்படுத்தி டிராட்ஸ்கியம் எடுத்து வைக்கின்றது. ஸ்டாலினை பலாக்காரமாக அகற்றல் என்பது திட்டமிட்ட படுகொலைகளை நடத்துவதன் மூலம் தான் என்பதை, அவர்களின் தொடர்ச்சியான வாக்குமூலமும் சதிகளும் எடுத்துக் காட்டின. இதற்கு எதிராக ஸ்டாலின் நடவடிக்கை எடுத்தையே, இன்று எடுத்துக் காட்டி தூற்றுகின்றனர். கட்சி மற்றும் அரசின் உயர் பதவிகளில் இருந்தபடி, பாட்டாளி வர்க்க சர்வாதிகாரத்தையும் ஸ்டாலினை அகற்றுவதைப் பற்றி சதிகார இரகசிய கூட்டம் நடத்துவதை, ஜனநாயக மத்தியத்துவம் என அங்கிகாரிக்க கோருவது மார்க்சியத்தை கொச்சைப் படுத்துவதற்காகத்தான். ஸ்டாலினின் பாட்டாளி வர்க்க சர்வாதிகார அரசுக்கு எதிராக, சதிகளை மேல் இருந்து நடத்தியவர்கள் தோற்ற போது, அவர்கள் ஸ்டாலினை தூற்றுவது இன்று வரை தொடர்கிறது. அன்றைய சதிகளை எப்படி தொடர்ந்து செய்தனர் என்பதற்கு அவர்கள் இன்று பெருமையாக பீற்றும்  சொந்த வாக்கு மூலத்தில் இருந்து மேலும் பார்ப்போம்.

இந்நூலின் முந்தைய பகுதிகள்

1. ஸ்டாலின்துற்றப்படுவதுஏன்? :பகுதி – 1

2. ஸ்டாலின்துற்றப்படுவதுஏன்? :பகுதி – 2

3. ஸ்டாலின்துற்றப்படுவதுஏன்? :பகுதி – 3

4. ஸ்டாலின்துற்றப்படுவதுஏன்? :பகுதி – 4

5. ஸ்டாலின்துற்றப்படுவதுஏன்? :பகுதி – 5

6. ஸ்டாலின்துற்றப்படுவதுஏன்? :பகுதி – 6

7. ஸ்டாலின்துற்றப்படுவதுஏன்? :பகுதி – 7

8. ஸ்டாலின்துற்றப்படுவதுஏன்? :பகுதி – 8

9. ஸ்டாலின்துற்றப்படுவதுஏன்? :பகுதி – 9

10. ஸ்டாலின்துற்றப்படுவதுஏன்? :பகுதி – 10

11. ஸ்டாலின்துற்றப்படுவதுஏன்? :பகுதி – 11

12. ஸ்டாலின்துற்றப்படுவதுஏன்? :பகுதி – 12