Mon06142021

Last updateSun, 19 Apr 2020 8am

சுப்பிரமணியசுவாமி என்னும் பார்ப்பன பயங்கரவாதி

குண்டுவீச்சுகள், கூக்குரல்கள், சரிந்து கிடக்கும் உடல்கள், வலி தாளாமல் முனகியபடி கடைசி மூச்சை விடும் மனிதர்கள், பயத்திலும் பசியிலும் பார்வை மங்கிப்போன சிறுவர்கள், குடிக்க தண்ணீர் கூட இல்லாமல் உயிர் வரண்டு போன குஞ்சுகள். ஒரு குழந்தை இவைகளைப் பார்த்து எப்படிப் பயந்த்திருக்கும், எனினும் வேறு வழியின்றி தனது பாதுகாவலர்களுடன் எதிரிகளிடம், மனிதத்தின் விரோதிகளிடத்தில் சரணடைய போகிறது. ஒரு குழந்தையை, ஒரு சிறுகுஞ்சை யார் காயப்படுத்துவார்கள், யார் கொல்லப்போகிறார்கள் என்று அதனது தாய், தந்தையர்கள் நினைத்திருக்கலாம். எல்லாமே முடிந்தது, எல்லாமே முடிந்தது என்று ஏங்கும் போது கடைசியில் இந்த சின்னஞ்சிறு குஞ்சையாவது காப்பாற்றுவோம் என்று ஒரு நினைப்பு அந்த தாய்க்கு ஆபத்துகளை மறந்து கொலைகாரக் கூட்டத்திடம் அனுப்பி வைக்க செய்திருக்கும்.

நெஞ்சை தடவு

முதுகை நிமிர்த்தாதே

கொஞ்சம் சுடுநீர் கொடுப்போமா

என்றிவைகள்

சொல்லி

மகனை என் மீது போட்டுலாவி

மெல்ல அவன் துயிலும் போது

மெத்தையில் சேர்த்து

விளக்கை தணித்தபின்

சத்தம் எழாமல் கதவினையும் சாத்தி விட்டு

என்று நோயால் வருந்தும் ஒரு மகனிற்காக உயிர்துடிக்கும் பெற்றோரின் உள்ளத்தவிப்பை சண்முகம் சிவலிங்கம் வெளிப்படுத்துவார். நோயிற்கே இப்படித் தவிக்கையில் சாவை நோக்கி தம் உயிரின் உயிரை தனியே அனுப்பிய தாய், தந்தை எப்படித் துடித்திருப்பர்.

இந்த குழந்தையின் கொலையை சுப்பிரமணியசுவாமி என்னும் பார்ப்பனப்பன்றி தனது ஊத்தைவாயால், பார்ப்பனத்திமிரில். இந்திய மேலாதிக்க வெறியில், ஏகாதிபத்திய விசுவாசத்தில், சிங்கள பேரினவாத கொலைகாரர்களை காப்பாற்றுவதற்காக நியாயப்படுத்துகிறது. பன்னிரண்டு வயது பச்சைக்குழந்தை பாலச்சந்திரனை இந்த பார்ப்பன பரதேசி தீவிரவாதி என்கிறது. பக்கத்தில் மரணம் காத்திருக்க எந்த ஒரு குழந்தையையும் போல அந்த நேரத்திலும் கையில் இருந்த தின்பண்டத்தை வாயில் வைத்து மெல்லும் அந்த குழந்தையை, குண்டுவிழிகளால் மிரண்டு போய் விழிக்கும் சின்னவனை தீவிரவாதி என்று இந்த இரத்தம் குடிக்கும் காட்டேரி சொல்கிறது.

பிறப்பிலிருந்து இறப்பு வரை மனிதர்களை சாதி என்னும் சதியால் பிரித்து வைத்திருக்கும் பார்பனிய குலக்கொழுந்துகள் இப்படித்தான் பேசும். அதுகளிற்கு இன்னொரு பார்ப்பான் செத்தால் தான் கண்ணீர் வரும். அதுகளைப் பொறுத்த வரை மற்றவர்கள் மனிதர்கள் அல்ல. அதிலும் இது போன்ற ஏகாதிபத்திய விசுவாச சாக்கடைப்பன்றிகளிற்கு பணமும், அதிகாரமும் மட்டும் தான் வாழ்வின் குறிக்கோள். அதற்காக யாரையும் கொலை செய்யும். எதையும் நியாயப்படுத்தும். இன்னொரு பார்ப்பான் கொலைகாரனாக இருந்தாலும் ஒத்துக் கொள்ள மறுக்கும். எதிர்வழக்கு போடும். அந்த மாதிரியான விசயங்களிற்கு அகில உலக வாத்தியாரான சங்கராச்சாரி கொலைகாரன் இல்லை, பொம்பிளை பொறுக்கி இல்லை என்று இந்த கடுவன் பூனை நீதிமன்றத்தில் வாதிட்டது.

சிதம்பரம் நடராசர் கோவிலில் தமிழில் தேவாரம் பாடக்கூடாது என்று ஊளையிட்ட தீட்சிதர்கள் என்னும் பார்ப்பனிய தமிழ் விரோதிகளை எதித்து ம.க.இ.க நடாத்திய போரட்டத்திற்கு எதிராகவும் இவன் வழக்கு தொடர்ந்தான். எத்தனை பேர் செத்தாலும் பரவாயில்லை கூடங்குளம் அணு ஆலையை கட்டியே தீருவோம் என்று குரைக்கும் கூட்டத்தில் இதுவும் ஒன்று. இந்த மனித விரோத கூட்டத்தை பெரியார் போன்றவர்கள் போராடிய மண்ணில் இருந்து விரட்டி அடிப்பதே பாலச்சந்திரன் போன்ற குழந்தைகளிற்கு நாம் செய்யும் அஞ்சலியாக இருக்கும்.