Thu03282024

Last updateSun, 19 Apr 2020 8am

ஸ்டாலின் நினைவு நாள் (5.3.1953)

குறிப்பு:- ஸ்டாலின் பேட்டிகள் என்னும் நூலில் இருந்த பல கேள்விகளில் சிலதை அந்த மாபெரும் புரட்சியாளனின் நினைவு நாளில!

தொகுப்பு: தோழர் திலக்

---------------------------------------------------------------------------------------------------------

ஒரு மக்கள் புரட்சியாளனின் தத்துவமும் நடைமுறையும் ஒன்று கலந்த பதில்கள்…..¨!

லுட்விக் கேள்வி- தேசிய சிறுபான்மையினர் குறித்த கொள்கை தொடர்பாக முதலாளிய அரசுகளுக்கும் ருஸ்சிய அரசிற்கும் இடையேயான பிரதான தனித்த அம்சங்கள் யாவை?

ஸ்டாலின் பதில்:- முன்பு ஜாராட்சியாலும் ருஸ்சியச் சுரண்டும் வர்கங்களாலும் ஒடுக்கப்பட்ட தமக்கென அரசு அந்தஸ்த்து பெறாமல் ருஸ்சியாவிலிருந்த தேசிய இனங்களை இது தெளிவாகக் குறிப்பிடுகிறது.

பிரதான வேறுபாடு: முதலாளிய அரசுகளில் தேசிய ஒடுக்குமுறையும் தேசிய அடிமைத்தனமும் இருக்க, சோவியத்யூனியனிலோ அவை இரண்;டும் முற்றிலிமாக ஒழிக்கப்பட்டிருக்கும்.

முதலாளிய அரசுகளில் முதல்தரமான உரிமைகொண்ட அரசு தேசங்களுடன் இரண்டாந்தரமான அரசல்லாத பலவித உரிமைகள் இழந்த பிரஜா உரிமையில்லாத சமத்துமற்ற தேசங்களும் உண்டு, எங்களது நாடான சோவியத்யூனியனில் தேசிய ஒடுக்குமுறையின் எல்லாக் காரணிகளும் ஒழிக்கப்பட்டுவிட்டன. எங்களது நாட்டில், எல்லா தேசிய இனங்களுக்கும் சமவுரிமையுண்டு. அனைத்தும் இறையாண்மை பெற்றவை. ஏனெனில் முன்னர் ஆதிக்கமிக்க மாபெரும் ருஸ்சிய தேசத்தால் மட்டும் அனுபவிக்கப்பட்டு வந்த தேசிய மற்றும் அரச உரிமைகள் ஒழிக்கப்பட்டு விட்டன.

நிச்சயமாகவே இது தேசிய இனங்களின் சமஉரிமை குறித்த பிரகடணங்கள் தொடர்பான பிரச்சனையல்ல, எல்லாவகையான பூர்சுவா மற்றும் சமுகனநாயககட்சிகளும் உரிமைகளின் தேசிய சமத்துவம் குறித்து எண்ணற்ற பிரகடனங்களை வெளியிட்டு உள்ளன.அவை அமூல் செய்யப்படாவிடில் என்ன பயன்?

தேசிய ஒடுக்குமுறையின் வாகனங்களாகவும் ஆசிரியர்களாகவும் மற்றும் இயக்குவோராகவும் உள்ள வர்க்கங்களை ஒழிப்பது குறித்த பிரச்சனையாகும். எங்கள் நாட்டில் அவ்வர்க்கங்கள் நிலபிரபுக்குகளும் முதலாளிகளும் ஆவர். நாங்கள் அவ்வர்க்கங்களை தூக்கி எறிந்து விட்டதால் அதன் வாயிலாக தேசிய ஒடுக்குமுறையின் சாத்தியத்தையும் ஒழித்துவிட்டோம். நாங்கள் அவ்வர்க்கங்களை ஒழித்துவிட்ட காரணத்தாலேயே உண்மையான தேச சமத்துவ உரிமைகள் எங்கள் நாட்டில் சாத்தியமாகிறது.

அதையே தேசங்களின் சுயநிர்ணய உரிமை நிறைவேற்றமாக நாங்கள் கருதுகிறோம். தேசங்களின் சுயநிர்ணய உரிமையை நிறைவேற்றிய காரணத்தாலேயே சோவியத்யூனியன் பல்வேறுதேசங்களைச் சேர்ந்த உழைக்கும் மக்களிடையான பரஸ்பர அவநம்பிக்கையை ஒழிப்பதிலும் அந்நாடுகளை தாமாகவே ஒரு யூனியன்அரசில் ஒன்றிணைப்பதிலும் நாங்கள் வெற்றி பெறமுடிந்தது. இன்றுள்ள சோவியத் சோசலிச குடியரசுகளின் ஒன்றியம் எங்களது தேசியக் கொள்கை மற்றும் சோவியத் யூனியனிலுள்ள தேசங்கள் தாமாகவே ஒன்றிணைந்து ஒர்அரசாகும் விருப்பத்தாலும் உருவானதாகும்.

முதலாளிய நாடுகளில் தேசிய பிரச்சினை குறித்து இத்தகைய கொள்கையானது நினைத்து பார்க்க இயலாததாகும் என்பதற்கு சான்றுகள் தேவையில்லை. ஏனெனில் அங்கே தேசிய ஒடுக்குமுறையை உருவாக்கிச் செயற்படுத்தம் முதலாளித்துவவாதிகளே இன்னும் அதிகாரத்தில் உள்ளனர்.

சோவியத்யூனியனில் அதிகாரத்தின் உச்ச உறுப்பான சோவியத்துகளின் மைய செயற்குழுவானது ருஸ்சிய பெரும் தலைவரால் தலைமை தாங்கப்படாமல், சோவியத்யூனியனில் ஒன்றுபட்டுள்ள குடியேற்றங்களின் எண்ணிக்கைக்கு ஏற்றவகையில், ஆறு பெருந்தலைவர்களால் தலைமை தாங்கப்படுகிறது என்பதை உதாரணமாக குறிப்பிடாமல் இருக்க இயலாது. இவர்களில் ஒருவர் ருஸ்சியர்(காலினின்) இரண்டாமவர் ஒரு உக்கிரேனியர்(பெட்ரோஸ்வ்கி) மூன்றாமவர் ஒரு பைலோ ருஸ்சியர் (செர்வியாக்கோவ்) நான்காமவர் ஒரு அர்பைஜானியர் (முசாபிகோஸ்வவ்) ஐந்தாமவர்ஒரு டுர்க்மேனியர்(அய்டாகோவ்) ஆறாமவவர் ஒரு உபெஸ்க் (பயசில்லாகோயயேவ்), இது எங்களது தேசியக் கொள்கைக்கு சிறந்த எடுத்துக்காட்டாகும்.

ஒரு பூர்சுவா குடியரசு கூட எவ்வளவுதான் ஜனநாயகம்மிக்கதாயினும் இத்தகைய அடியெடுத்து வைக்க இயலாது. எனினும் எங்கள் நாட்டில் உரிமைகளின் தேசசமத்துவம் குறித்த எங்கள் கொள்கையின் தர்க்கரீதியான தொடர்ச்சியாகவே எடுத்துக் கொள்ளப் படுகிறது.

லுட்விக் கேள்வி:- சட்டவிரோத பணியில் உங்களுக்கு பல்லாண்டுகால அனுபவமுண்டு. சட்டவிரோதமாக ஆயுதங்கள், நூல்களை இன்னும் பலவற்றை எடுத்துச் செல்ல வேண்டியிருந்தது. சோவியத் யூனியனின் எதிரிகள் உங்களது அனுபவத்திலிருந்து கற்றுக்கொண்டு, அதேமுறைகளால் சோவியத் ஆட்சியை எதிர்த்துப் போராடுவார்கள் என நீங்கள் கருதிப்பார்கவில்லையா?

ஸ்டாலின் பதில்:- நிச்சயம் அது சாத்தியமே.

லுட்விக் கேள்வி:- எதிரிகளை எதிர்த்த போராட்டத்தில் உங்களது அரசாங்கம் காட்டும் கடுமைக்கும் ஈவிரக்கமற்ற தன்மைக்கும் அதுதான் காரணமல்லவா?

ஸ்டாலின் பதில்:- அல்ல, அது பிரதான காரணமல்ல. வரலாற்றிலருந்து சில உதாரணங்களைக் கூறலாம். போல்ஸ்விக்குகள் அதிகாரத்திற்கு வந்தபோது அவர்கள் முதலில் எதிரிகளை சற்று மென்மையாகவே நடத்தினர். மென்ஸ்விக்குகள் சட்டரீதியாக நீடித்தனர். மற்றும் தங்களது செய்தித்தாளை வெளியிட்டனர். சோசலிச புரட்சியாளர்களும் சட்டரீதியாக நீடித்தனர். தங்களது செய்தித்தாளை கொண்டிருந்தனர். கேடட்டுகள் கூட தமது செய்தித்தாளை வெளியிட்டனர்.

லெனின் கிராட்டிற்கு எதிராக ஜெனரல் கிராஸ்நோவ் எதிர்புரட்சி இயக்கம் நடத்தி எங்களிடம் சிக்கிய போது, போர்விதிகளின்படி குறைந்தபட்சம் அவரை கைகதியாக நாங்கள் வைத்திருக்கலாம். ஆனால்,அவரது வார்தையை மதித்து அவரை விடுவித்தோம். என்ன நடந்தது இத்தகைய கடுமையின்மை சோவியத் அரசாங்கத்தின் வலிமையைத் தகர்க்கவே துணைபோனது என்பது விரைவிலே தெளிவாயிற்று. தொழிலாளர் வர்க்க எதிரிகளிடம் இத்தகைய கடுமையின்மையை காட்டியதில் நாங்கள் தவறு இழைத்தோம், அத்தவறை நீடித்திருந்தால் அது உழைக்கும்வர்கத்திற்கு எதிரான அநீதியாகவும் மற்றும் அதன் நலன்களைக் காட்டிக்கொடுத்ததாகவும் ஆகியிருக்கும். அது சீக்கிரமே புலப்பட்டது. எதிரிகளின்பாலன எங்களது போக்கு எவ்வளவு கடுமையின்றி இருக்கிறதோ, அவ்வளவிற்கு அவர்களது எதிர்ப்பும் அதிகமாக இருக்கும் என்பது விரைவிலேயே தெளிவாகிவிட்டது. கோட்ஸ்சும் பிறரும் வலதுசாரி மென்ஸ்விக்குகளும் சேர்ந்து கொண்டு இராணுவ அணிகளை வைத்து லெனின் கிராட்டில் நடத்திய எதிர்புரட்சியால் எங்களது புரட்சி மாலுமிகள் பலர் மடிய நேர்ந்தது. வார்த்தையை மதித்து நாங்கள் விடுவித்த இதே கிராஸ்நோவ் கோஸ்சாக்குகளின் படையை அமைத்தார். மாமண்டோவுடன் அணிசேர்ந்து கொண்டு பல ஆண்டுகளாக சோவியத் அரசாங்கத்திற்கெதிராக ஆயுதப்போராட்டம் நடத்தினர்.

கோஸ்சாக்குகளின் படைக்குப் பின்னே மேற்கின் முதலாளிய அரசுகளின் ஏஜண்டுகள் -பிரான்ஸ், பிரிட்டன், அமெரிக்கா, ஜப்பான் நின்றனர் என்பது சீக்கிரமே புலனாகியது. கடுமை குறைவாக நடந்து கொண்டது தவறு என்பது நிருபணமாகிற்று. அனுபவத்திலிருந்து அறிந்து கொண்டோம்.

லுட்விக் கேள்வி:- (அமெரிக்க தொழிலாளர் தூதுக்குழுவின் ஒரு பிரதிநிதியால் முன்வைக்ப்பட்டது) கடவுள் நம்பிக்கை கொண்டதற்காக உறப்பினர்கள் கட்சியிலிருந்து வெளியேற்றப்படுவதாக அடிக்கடி நான் படிக்கிறேன்.

ஸ்டாலின் பதில்:- எங்கள் கட்சியின் உறுப்பினராவதற்கான நிபந்தனைகளாக ஏற்கனவே நான் கூறியிருப்பதை திரும்பவும் கூற இயலும் (நாத்திகராக இருந்தே தீரவேண்டும் என்னும் நிபந்தனை எதுவும் இல்லை என்பது குறிப்பிடத்தக்கது. கட்சியின் வேலைத்திட்டத்தையும் விதிகளையும் ஏற்றல், கட்சி மற்றும் அதன் உறுப்பினர்களின் முடிவுகளுக்கு நிபந்தனையின்றி பணிந்து போதல், உறுப்பினர் கட்டணத்தை செலுத்துதல், கட்சியின் அமைப்புக்ளொன்றில் உறுப்பினராதல்)

இதனால் கட்சி மதத்தின்பால் நடுநிலைமை வகிக்கும் என்று அர்த்தமாகுமா? இல்லை ஆகாது. மத தப்பபிப்பிராயங்களுக்கு எதிராக நாங்கள் பிரச்சாரம் செய்கிறோம். தொடர்ந்தும் செய்வோம். நாட்டின் சட்டங்கள் ஒவ்வொரு பிரஜையும் எந்த மதத்தினராகவும் இருக்கும் உரிமையை அங்கிகரிக்கின்றன. அது ஒவ்வொரு தனிநபரின் மனசாட்சி சம்மந்தப்பட்ட விடயம். அதன்காரணமாக நாங்கள் மாதா கோயிலை அரசிடமிருந்து பிரித்து வைத்துள்ளோம். ஆனால் மாதா கோயிலை பிரித்து மனச்சாட்சியின் சுததந்திரத்தை பிரகடணம் செய்யும் அதே வேளையில் விவாதம், பிரச்சாரம் மற்றும் போராட்டதின் மூலம் எல்லா மதங்களையும் எதிர்ப்பதற்கான ஒவ்வொரு பிரஜையின் உரிமையையும் பாதுகாத்து வைத்துள்ளோம். கட்சியானது மத விசயத்தில் நடுநிலைமை வகிக்க இயலாது. எல்லா மத தப்பபிப்பிராயங்களுக்கு கெதிராகவும் மத எதிர்பு பிரச்சாரம் செய்கிறது. ஏனெனில் அது அறிவியலை ஏற்கிறது. எல்லாமத தப்பபிப்பிராயங்களும் அறிவியலுக்கு எதிராக உள்ளன.ஏனெனில் எல்லா மதங்களும் அறிவியலின் மறுப்பாகும். அண்மையில் டார்வின்வாதிகள் மீது வழக்கு தொடரப்பட்டு தண்டிக்கப்பட்டதைப் போன்ற அமெரிக்காவில் நிகழும் சம்பவங்கள் இங்கே நடக்கவியலாது, ஏனெனில் எல்லாவகையிலும் அறிவியலைப் பாதுகாக்கும் கொள்கையைக் கட்சி கடைப்பிடிக்கிறது.

மத தப்பபிப்பிராயங்களின்பால் கட்சி நடுநிலைமை வகிக்க முடியாது. அத்தப்பபிப்பிராயங்களுக்கு எதிராக அது தொடந்;து பிரச்சாரம் செய்யும். ஏனெனில் சுரண்டும் வர்கங்ககளை ஆதரித்து அவ்வர்க்கங்களுக்குப் பணிந்து போகுமாறு போதிக்கம் பிற்போக்கு மதத்தலைமையின் செல்வாக்கை தகர்க்க அது நல்ல வழியாகும்.

மத தப்பபிப்பிராயங்களின் பரவலின் பாலும் தொழிலாளர் வர்கத்தின் மனங்களை விசமூட்டுவதான பிற்போக்குவாத மதத்தலைமையின்பாலும் கட்சி நடு நிலைமை வகிக்க இயலாது.

நாங்கள் பிற்போக்குவாத மதத்தலைமையை அடக்கி விட்டோமா? ஆம் மத எதிர்ப்புப் பிரச்சாரத்தினூடாக பிற்போக்கு மத தலைமையை வெளியேற்றுவது முழுமையாக நிறைவேற்றப்படும். கட்சியின் சில உறுப்பினர்கள் மத எதிர்ப் பிரச்சாரத்தின் முழு வளர்ச்சினை தடுத்திடும் சம்பவங்கள் சிலசமயங்களில் நிகழ்வதுண்டு. அதற்காக உறுப்பினர்கள் வெளியேற்றப்பட்டால் அது நல்ல விடயமே, ஏனெனில் எங்களின் கட்சியின் அணிகளில் அத்தகைய கம்யூனிஸ்டுகளுக்கு இடமில்லை.

லுட்விக் கேள்வி:- என் கேள்வி பின்வருமாறு, நீங்கள் அடிக்கடி ஆபத்துக்களையும் இடர்களையும் சந்தித்து இருக்கிறீர்கள். சண்டைகளில் பங்கு கொண்டிருக்கிறீர்கள். உங்களது நெருங்கிய நண்பர்களில் பலர் மடிந்து இருக்கின்றனர். நீங்கள் எஞ்சியிருக்கிறீர்கள். அதனை எப்படி விளக்குவீர்கள்? விதியை நம்புகிறீர்களா?

ஸ்டாலின் பதில்:- இல்லை. நம்புவதில்லை. போல்ஸ்விக்குகளும் மார்க்ஸ்சியர்களும் "விதி"யை நம்புவதில்லை. விதி என்னும் கருத்தாக்கமே ஒரு தப்பான அபிப்பிராயம். ஒரு முட்டாள் தனம் தொல்கதையின், ஒரு எச்சம், பழங்காலத்து கிரேக்கரது புராணங்கள் போன்றது. அவர்களைப் பொறுத்தவரை விதி தேவதை எல்லோரது எதிர் காலத்தையும் கட்டுப்படுத்துகிறது.

லுட்விக் கேள்வி:- அப்படிக் கூறுவதின் அர்த்தம் நீங்கள் மடியவில்லையென்பது தற்செயலானதா?

ஸ்டாலின் பதில்:-அக மற்றும் புற வயக் காரணிகளின் கூட்டு விளைவினால்தான் நான் இறக்கவில்லை. ஆனால்! அதனுடன் தொடர்பற்ற வகையில் என்னுடைய இடத்தில் வேறொருவர் இருந்திருக்கக் கூடும். ஏனெனில் யாராவது ஒருவர் இருந்திருக்க வேண்டும். "விதி" என்பது இயற்கைச்சட்டத்தினால் நிர்வகிக்ககப்படாதது. மர்மமானது அதில் நான் நம்பிக்கை கொள்வதில்லை. அபாயங்கள் ஏன் என்னைத் தொடவில்லை. என்பதற்கு நிச்சயமாக காரணங்கள் உண்டு. ஆனால் எதிரான விளைவைத் தந்திருக்கக் கூடியதான தற்செயலான சந்தர்பங்களும் காரணங்களும் நிறைய இருந்திருக்க முடியும். அதற்கும் "விதி“ தொடர்பில்லை.

கேள்விகளை கேட்டவர்கள்:- அமெரிக்க தொழிளிலாளர் தூதுக்குழு, 9.9.1927, ஜெர்மனிய எழுத்தாளர்எமில் லுட்விக் 13.12.1931.{jcomments on}