Tue04232024

Last updateSun, 19 Apr 2020 8am

கிளிநொச்சியிலிருந்து கடத்தி வரப்பட்ட வெள்ளைவானின் இரகசியங்கள்!

அண்மையில் கொலன்னாவை பிரதேச மக்களினால் சுற்றி வளைக்கப் பட்ட WP 8649 இலக்கமுடைய வெள்ளை வான், இராணுவ அதிகாரி யொருவரால் கிளிநொச்சி பிரதேசத்திலிருந்து கடத்திவரப்பட்டது என்றும், இந்த வெள்ளை வான் 2011ஆம் ஆண்டு யூலை 20ஆம் திகதி முதல்முறையாக மோட்டார் வாகனப் பதிவு திணைக்களத்தல் பதிவுசெய்யப்பட்டதாகவும் தெரியவந்துள்ளது.


இந்தப் பதிவுக்கமைய, இந்த வாகனத்தின் உரிமையாளர் கிளிநொச்சி பிரதேசத்தில் 1139 இலக்கத்தில் வசித்துவரும் அருள்நாயகம் எனத் தெரியவந்துள்ளது. ஆனால் கிளிநொச்சியில் இந்த விலாசத்தில் அருள்நாயகம் என்று ஒரு நபர் இல்லை என்றும் இந்த பெயரும், விலாசமும் போலியானது எனத் தெரியவந்துள்ளது.


இராணுவ அதிகாரி ஒருவரே தமிழர் ஒருவரின் பெயரில் இந்த வெள்ளைவானை பதிவு செய்து கடத்தலுக்கு பயன்படுத்தி வந்ததாக தெரிவிக்கப்படுகிறது. இந்த வாகனத்தின் அடிச்சட்ட இலக்கம்   LAJRSKF 16 A 000 2174.

இராணுவ அதிகாரி இராணுவ புலனாய்வுப்பிரிவுக்கு இந்த வாகனத்தை மாதாந்தம் 55ஆயிரம் ரூபாவுக்கு வாடகைக்கு விட்டிருந்தார் என்றும் தெரிவிக்கப்படுகிறது.  பாதுகாப்பு செயலாளர் கோதபாயாவின் நேரடி கண்காணிப்பிலேயே இந்த வெள்ளைவான் கடத்தல்கள் இடம்பெற்று வருவதாகவும் தெரியவந்துள்ளது.

http://www.thinakkathir.com