Fri04192024

Last updateSun, 19 Apr 2020 8am

இறையாண்மையுள்ள அரசு மனிதப்படுகொலை செய்தால் ஜ.நா என்ன செய்ய முடியும்!!

இலங்கையில் ஆட்சி மாற்றம் ஏற்பட்டால் தான் போர்க்காலத்தில் நடந்த்தாக  கூறப்படும்  போர்க்குற்றங்கள்  மற்றும்  மனித  உரிமை  மீறல்கள்  குறித்த விஷயங்களில் பொறுப்பு  கூறுவது  குறித்த பிரச்சினையில் முன்னேற்றம்  காண 

முடியும் என்று  ஐ.நா  மன்றத்தின்  மனிதநேய  விவகாரங்களுக்கான முன்னாள்  துணைத் தலைமைச்  செயலர்  சர் ஜான் ஹோம்ஸ்  கூறியிருக்கிறார்.

"போரின்  இறுதிக்கட்டத்தில், ஆயிரக்கணக்கான  அப்பாவி  மக்கள்  கொல்லப்ட்ட போது, சர்வதேச சமூகம் குறிப்பாக ஐ.நா  மன்றம் சரியாகத்  தலையிடவில்லை,  நடவடிக்கை  எடுக்கவில்லை" என்ற விமர்சனம் இருக்கிறதே  என்று அவரிடம்  பிபிசி  கேட்ட போது, ஒரு இறையாண்மை  பெற்ற அரசை,  ஐ.நா  மன்றம், அந்த  அரசின்  விருப்பத்துக்கு எதிராக  நடவடிக்கை  எடுக்குமாறு  வற்புறுத்த  முடியாது  என்றும் ஐ.நா மன்றம்  பொதுமக்கள்  உயிர்ச்சேதங்களைத்  தவிர்க்கும்  நோக்கத்தில்  இலங்கை  அரசை,  அந்த யுத்தப்பகுதியில் கனரகபோர் ஆயுதங்களை  பயன்படுத்துவதை  தவிர்க்குமாறு வற்புறுத்திக் கொண்டிருந்ததாக  கூறிய  ஜான் ஹோம்ஸ்,  இலங்கை  அரசோ  அந்த பகுதியில்  சாதாரண பொதுமக்கள் கொல்லப்படவில்லை என்றே கூறிக்கொண்டிருந்ததாகவும்,  ஆனால் அது உண்மையல்ல என்றும்  கூறினார்.


இதைத்தான் பேராசிரியர் சிவசேகரம் “சமாதானம் பற்றிய அநீதிக்கதை”கவிதையில்


“சமாதான விரும்பிகள்
நீண்டநேரம் தம்முள் விவாதித்து
மீண்டும் ஏகமனதாக
ஓநாய்களைக்கண்டித்துத்
தீர்மானம் நிறைவேற்றினார்கள்
ஓநாய்களும்
விடாது ஆட்டுக்குட்டிகளைக் கவர்ந்து வந்தன
சமாதான விரும்பிகளும்
தளராது
தீர்மானங்களை நிறைவேற்றினார்கள்”  எனச் சொல்கிறார்.

-முரளி 16/03/2012