Wed04242024

Last updateSun, 19 Apr 2020 8am

ரணிலை திணறவைத்த யாழ்-மக்கள்!!

யாழ்ப்பாணத்திலிருந்து "முன்னணி" வாசகரின் செய்திக்கண்ணோட்டம்!

 "2005ம் ஆண்டு நான் தமிழ் மக்களுக்கான தீர்வுத் திட்டத்தை முன்வைத்த போது பிரபாகரனும், அவருடன் இணைந்த தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்தினரும் அதனை எதிர்த்தனர்" என்றார். யாழ் வந்த ரணில்.

 

சரி போகட்டும்… அடுத்த ஐனாதிபதியானால் எங்களுக்கான தீர்வுத்திட்டம் என்னவென மக்களும், போர்க்குற்றம் பற்றிய உங்கள் கருத்தென்னவென ஊடகவியலாளுர்களும் கேட்க? மௌனமே பதிலாகி…..பின்னர் தன்னைச் சுதாகரித்துக்கொண்டு, நாட்டு மக்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளும்படியான தீர்வொன்றை தருவேன் என்றார்.

இந்தப் பதிலிலும் திருப்தி கொள்ளாத மக்கள் "எதிர்காலத்தில் நீங்கள் என்ன தீர்வை முன்வைப்பீர்கள்? என்பதைச் திட்டவட்டமாக சொல்லுங்கள்" என்று அழுத்தம் கொடுத்தனர். நழுவ முடியாத நிலையில். "நான் கொள்கை அடிப்படையில் பணியாற்றுபவன். என் மீது நம்பிக்கை வையுங்கள்" எனச் சொல்லி நழுவியோடியுள்ளார்.

என்பார்வையில்....

தமிழ் மக்கள் இவர் போன்ற யாரையும் "நம்பும்" நிலையில் இன்று இல்லை! ரணில் போன்று ராணுவத்தின் துணையற்ற நிலையில், மக்களுடன் பேச மகிந்தா வருவாரா? வந்தால், மக்கள் முள்ளிவாய்க்காலின் போர்க்குற்றங்கள் பற்றி எப்படி விசாரிப்பார்கள்! இதை விசாரிக்க அவர்களுக்கு  ஜெனீவாவும்,  சனல் 4-ம் தேவையில்லை! எம்மக்கள் முன்போல் இல்லை. அழிவில் இருந்து சிந்திக்கத் தொடங்கிவிட்டார்கள்.

புலம்பெயர் நண்பர்களுக்கு, ரணிலின் யாழ்-கூட்டம் ஒன்றிற்கு போனபோது நடந்தவைகளையும் என் அபிப்பிராயத்தையும் தந்துள்ளேன். என்போன்றவர்களின் கேள்விக்கான ரணிலின் பதிலே இதில் உள்ளது. இது யாழ் பத்திரிகைகளிலும் வந்துள்ளது. அடுத்து முன்னணி சஞ்சிகை பற்றிய என் அபிப்பிராயங்களையும் விரைவில் தருவேன்.

நட்புடன்...
யாழ்-முன்னணி வாசகன்