Thu03282024

Last updateSun, 19 Apr 2020 8am

சமூக புற்றுநோய் EPDPயும், கருணாவின் தலித்தியரும், ஜெனிவா தீர்மானமும்

வடபகுதியின் கான்செர் அல்லது சமூக புற்றுநோய் என வர்ணிக்கப்படும் பாசிச மஹிந்தவின் கைக்கூலிகளான EPDP கும்பல், ஜெனீவா தீர்மானத்திற்கு எதிராக யாழ் மாநகர சபையில் தீர்மானம் நிறைவேற்றி உள்ளது .

யாழ் மாநகர சபையின் மாதாந்த பொதுக்கூட்டம் மாநகர முதல்வர் திருமதி யோகேஸ்வரி பற்குணராசா தலைமையில் நேற்று செவ்வாய்கிழமை 28 .03 .2012 மாலை மாநகர முதல்வரின் மாநாட்டு மண்டபத்தில் இடம்பெற்றது.

யாழ்.மாநகர சபை கூடியதும் ஜெனிவாவில் இலங்கைக்கு எதிராக அமெரிக்க கொண்டு வந்த தீர்மானத்தை எதிர்க்கும் பிரேரணை ஆளும் ஈபிடிபி மாநகர சபை உறுப்பினர் கிளாவேடாவேசியரால் கொண்டுவரப்பட்டது

யாழ்.மாநகர சபையின் எதிர்தரப்பினரின் கடும் எதிர்ப்பை அடுத்து வாக்கெடுப்புக்கு விடப்பட்ட நிலையில் 12 இற்கு 8 என்ற வீதத்தில் வாக்கொடுப்பில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது

அப்பிரேரணையில், "அமெரிக்க அழுத்தங்கள் இன்றி, நல்லிணக்க ஆணைக்குழுவின் பரிந்துரைகளை நடைமுறைப்படுத்துவதை வரவேற்போம்!

தமிழ் பேசும் மக்களின் அரசியலுரிமை பிரச்சினைக்கான தீர்வு குறித்து நாம் கொண்டிருக்கும் நடைமுறைச்சாத்தியமான வழிமுறையினையும் உள்ளடக்கியதே நல்லிணக்க ஆணைக்குழுவின் பரிந்துரைகளாகும்.

ஆகவே, எமது மக்களின் அரசியல் அபிலாசைகளை வென்றெடுக்கும் நோக்கில் நல்லிணக்க ஆணைக்குழுவின் பரிந்துரைகளை நடைமுறைப்படுத்துமாறு நாம் வெளிப்படையாகவே கூறிவந்திருக்கின்றோம்.

அமெரிக்கத்தீர்மானம் நிறைவேறுவதற்கு முன்பாகவே நாம் இந்த நிலைப்பாட்டை எடுத்திருந்தோம்" என தெரிவிக்கப்பட்டுள்ளது.

அபிவிருத்தி செய்கிறோம், இணக்க அரசியல் செய்கிறோம் என்ற போர்வையில் இந்த கும்பல் வடபகுதியில் செய்யும் அடவாடித்தனம், இலங்கை அரசபடைகள் இன்று செய்யும் கொடுமைகளை விட கேவலமானவை.

ஆட்கடத்தல், சிறு முதலாளிகளிடம் கப்பம்கோரல், கொலை, அரசியல் மிரட்டல்கள், அபிவிருத்திக்கென அனுப்பப்படும் பணத்தை தமது லஞ்ச லாவண்ய அதிகாரத்தில் மூலம் திருடுதல், பாலியல் வன்முறை போன்ற பெரும்பான்மையான கொடுமைகளுக்கு EPDP கும்பலே நேரடியாகவும், மறைமுகமாகவும் காரணமாயுள்ளது. ஜெனிவா தீர்மானம் இலங்கையில் எந்தவித மாற்றத்தையும் கொண்டு வரப்போவதில்லை என்றாலும், சிலவேளை சர்வதேச விசாரணை வந்தால் தமது பஞ்சமா பாதகங்களுக்கு தண்டனை கிடைக்குமென்ற பயம் EPDP இக்கு வருவது இயல்பானதே!

அதே போன்றே புலம்பெயர் நாடுகளில் தலித்தியம் கதைக்கும் கும்பல் கருணா மற்றும் EPDP யுடன் சேர்ந்து நடத்திய அரசியல் சீத்தகேட்டை மறைக்கவும், தமது பொருளாதார நலனுக்காகவும் இப்போ ஜெனிவா தீர்மானத்துக்கு எதிராக வாய்கிழிய கத்துகிறார்கள் .

--கார்த்திகேசு கலியுகவரதன் 28/03/2012