Fri04192024

Last updateSun, 19 Apr 2020 8am

கடத்தல்களுக்கு எதிராக நடவடிக்கை எடுக்க அரசியல் கட்சிகள் முயற்சி

நாட்டில் இடம்பெற்று வரும் கடத்தல் சம்பவங்களை தடுக்கும் நோக்கில் அரசியல் கட்சிகள் இணைந்து செயற்படத் திட்டமிட்டுள்ளன.

எதிர்க்கட்சி, ஆளும் கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்கள், சிவில் அமைப்புக்களின் பிரதிநிதிகள் உள்ளிட்ட பலரின் பங்களிப்புடன் இந்த பொதுவான அமைப்பு உருவாக்கப்பட உள்ளது.

அரசியல் கட்சிகள் மற்றும் சிவில் அமைப்புக்களைச் சேர்ந்த 40அமைப்புக்கள் ஏற்கனவே இந்தத் திட்டத்திற்கு இணக்கம் தெரிவித்துள்ளன.

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு மற்றும் ஜே.வி.பி ஆகிய கட்சிகள் இதுவரை இந்தத் திட்டத்தில் இணைந்து கொள்ளவில்லை.

கடத்தல்கள் மற்றும் காணாமல் போதல் சம்பவங்கள் இலங்கையின் அன்றாட வாழ்வியல் சம்பவங்களில் ஒன்றாக மாற்றமடைந்துள்ளது என நாம் இலங்கையர் அமைப்பின் அமைப்பாளர் உதுல் பிரேமரட்ன தெரிவித்துள்ளார்.

கடத்தல்களை தடுக்க, சட்டத்தரணிகள், ஊடகவியலளார்கள், சிவில் அமைப்பு பிரதிநிதிகள், அரசியல்வாதிகள், புத்திஜீவிகள் உள்ளிட்ட சகல தரப்பினரையும் ஒன்றிணைக்க திட்டமிட்டுள்ளோம்.

மக்களின் வாழும் உரிமையை உறுதிப்படுத்த கட்சி பேதமின்றி அனைவரும் இணைந்து கொள்ள வேண்டும்.

ஆளும் கூட்டமைப்பில் அங்கம் வகிக்கும் சில கட்சிகளும் கடத்தல்களுக்கு எதிராக குரல் கொடுக்க இணக்கம் தெரிவித்துள்ளன. நாட்டில் ஏற்பட்டுள்ள சூழ்நிலைமை குறித்து வெளிநாட்டு இராஜதந்திரிகளுக்கு தெளிவுபடுத்தப்பட உள்ளது என உந்துல் பிரேமரட்ன தெரிவித்துள்ளார்.

source: lankaviews.com