Wed04172024

Last updateSun, 19 Apr 2020 8am

கருணாநிதியும்-ஜெயலலிதாவும் நடிக்கின்றார்கள் என்றால்…. சந்திரிகாவும் அல்லவோ நடிக்கின்றா!

இலங்கை அரசியலில் நாளாந்தம் பாசிசக் குணாம்சங்களுடன் கூடிய பல திருவிளையாடல்களை அரசு அரங்கேற்றுகின்றது. இதில் வட-கிழக்கில் இனச்சுத்திகரிப்பிலான பேரினவாதக்கலவை கொண்ட தனிப்பாசிசத்திலான ராணுவத் திருவிளையாடல்கள் பற்றபல விதங்களில் அரங்கேறுகின்றன!

 

ஜெனீவாவின் 24—15--9 என்ற திருவிளையாடல்களுக்குப் பிறகு, தேசிய சர்வதேசத்தில் தமிழ் மக்கள் பற்றிய பிச்சினைக்கான—தீர்வுக்கான மனங்கள் மனம் விட்டுப் பேசுகின்றன! இதில் உண்மையும், யதார்த்தமும், கொண்டதும், மறுபுறத்தில் சுயநல அரசியலுடன் கூடிய நடிப்பரசிலையும் காணமுடிகின்றது. இது கருணாநிதி, ஜெயலலிதா முதல் சந்திரிகாவரை வியாபித்துள்ளது.

தமிழர்கள் பிரச்சினை பெருபான்மை சிங்கள மக்களுக்கு தெரியாது! தீர்வினை வழங்க அவர்கள் தடையில்லை: சந்திரிக்கா

"தமிழர்கள் பிரச்சினை பெருபான்மை சிங்கள மக்களுக்கு தெரியாது, தமிழர்களுக்கு தீர்வினை வழங்குவது தொடர்பில் பெரும்பான்மையான சிங்கள மக்கள் எதிர்க்கவில்லை. தமிழர்களுக்கு எதிரான நிலைப்பாட்டை சிங்கள மக்கள் கொண்டிருப்பதாக தெரிவிக்கப்படும் கருத்துக்கள் மிகவும் பிழையானவை. அரசியல் லாப நோக்கங்களுக்காக இனப்பிரச்சினையை அரசியல்வாதிகள் தூண்டி
விடுவதாகவும் தமிழ் மக்கள் எதிர்நோக்கி பிரச்சினைகளை தொடர்ச்சியாக சிங்கள
மக்களிடமிருந்து மூடிமறைத்து வந்ததாகக் அவர் குற்றம் சாட்டியுள்ளார்."


"தமிழ் மக்கள் அமைதியானவர்கள் அனைத்து தமிழர்களையும் பயங்கரவாதிகளாக கருத முடியாது! வடக்கு கிழக்கு தமிழ் மக்களுக்கு அரசியல் அதிகாரம் இன்மையே பிரச்சினைகளுக்கான காரணம் என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்".


"தமிழ் மக்களுக்கு அதிகாரம் பகிரப்பட வேண்டும் நாட்டின் அனைத்து இன மக்களுக்கும் சம உரிமை வழங்கப்பட வேண்டுமென கூட்டமொன்றில் தாம் குறிப்பிட்டதாகவும் அவ்வாறு குறிப்பிட்டால் நாம் வாக்குகளை இழக்க நேரிடும் என ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி உறுப்பினர்கள் தம்மிடம் கூறியதாகவும் சந்திரிக்கா பண்டாரநாயக்க குமாரதுங்க தெரிவித்துள்ளார்".

"இனப்பிரச்சினையை அரசியல்வாதிகள் தூண்டிவிடுவதாக, சங்கமித்திரையின் சகோதரியாட்டம் சந்திரிகா அம்மையார் கருத்து சொல்கின்றா.

இலங்கையரசியலின் பேரினவாத்திற்கு தீனி போட்டு வளர்த்தவர்களில், இவரின் குடும்ப இனவாத அரசியலே பிரதான பாத்திரம் வகித்தது. மனித உரிமைகளுக்காக குரல் கொடுத்த மகிந்தாவை, பாசிச சர்வாதிகாரியாக வளர்த்தெடுத்ததற்கு தங்களின் இனவாத குடும்ப அரசியலின் எடுகோள்களே பிரதான காரணியாகும்.

தமிழ் மக்கள் பிரச்சினை சிங்கள மக்களுக்கு தெரியாது என பிதற்றும் அம்மையார் தான் நிறைவேற்று அதிகாரம் கொண்டவராக இருந்தவேளையில் செய்ததெல்லாம் தமிழ்-சிங்கள மக்களைப் பிரித்த பேரினவாத அரசியலைத் தொடர்ந்த…பேரினவாத அரசியல்தானே?

சமஸ்டி அரசியலின் பாற்பாட்டு செய்யப்பட்ட ஒப்பந்தம்தான் (அதற்கான உள்ளடக்கங்கள் சிலதேயுள்ள)  பண்டா-செல்வா ஒப்பந்தம். சமஸ்டி என்பதை பிரிவிiயாக காட்டடி ஜே.ஆர். பாதயாத்திரை செய்தபோது, அதை தடுத்து நிறுத்தி, சமஸ்டி பிரிவினை அல்ல என்பதை சிங்கள மக்களுக்கு எடுத்து சொல்லியிருந்தால், இன்றைய இனங்களுக்கிடையிலான அவல அரசியலே வந்திருக்காது. முள்ளிவாய்க்கால் என்றால் என்னவென்பதே தெரியாமல் போயிருக்கும்.

தவிரவும் தந்தையாரின் தனிச் சிங்களச்சட்டமும், தாயாரின் புதிய அரசியல் சாசன வரைவுமே  இனப்பிரச்சினையை தூண்டி,  இனவதத்தின்  உச்சகட்டத்திற்கு கொண்டு சென்றது. இது "கண்கெட்ட பின்பும் சொல்லும் சூரிய நமஸ்கார"அரசியலாக தெரியவில்லை!?

--அகிலன் 16/04/2012