Thu03282024

Last updateSun, 19 Apr 2020 8am

பௌத்த பேரினவாதத்தினை கையிலெடுத்து மக்களை பிளக்கும் மகிந்த பாசிசம்

இலங்கையில் முஸ்லீம் மக்களுக்கு எதிராக ஆரம்பித்துள்ள இனவாதப் போர் நாளுக்கு நாள் வளர்ந்த வண்ணமே உள்ளது. தம்புள்ளையில் மசூதியை அகற்ற அரசே உத்தரவிட்டது. அதையடுத்து காத்தான் குடியில் முஸ்லீம் காரியாலையம் எரிப்பு போன்றவற்றின் ஊடாக, அரசு இதை திட்டமிட்டு கட்டவிழ்த்து விடுகின்றது என்பது தெட்டத் தெளிவாகிறது. இலங்கை அரசு தனது இனவாத கோர முகத்தை தற்போது முஸ்லீம் மக்களின் மீது திருப்பியுள்ளது.

 

இலங்கை பாசிச அரசின் இச் செயற்பாட்டிற்கு பின்னணியில் முஸ்லீம் விரோத நாடுகளின் ஆதரவும் இருந்து வருகின்றது. அத்தோடு தமிழர்கள் பிரச்சனைக்கு தீர்வை முன்வைக்கும் படி அழுத்தங்கள் உருவாகியுள்ள நிலையில், ஒரு புதிய பிரச்சனையை உருவாக்குவதன் மூலம் தமிழர்களின் இனப்பிரச்சனைக்கான தீர்வினைப்பற்றி போசாது, தற்போது உருவாகியுள்ள புதிய பிரச்சனை பற்றி பேச முடியும் என்ற கள்ள நோக்கமும் அரசிற்கு உண்டு.


அன்று தமிழர்களின் பகுதியில் இருந்த ஆலையங்கள், தேவாலையங்கள் குண்டுத்தாக்குதலால் நாசமாக்கப்படும் போது தெற்கில் மக்கள் அதைப் பார்த்து அமைதியாக இருந்தார்கள். இதனாலேயே இன்று மீண்டும் அரசு அவ்வாறான செயற்பாட்டில் இறங்கியுள்ளது.


இதற்கு எதிராக இன மத பேதம் அற்று மக்கள் ஒன்றிணைந்து போராடுவதன் மூலமே வருங்காலத்தில் மீண்டும் இவ்வாறான செயற்பாடுகளை அரசு செய்யாது தடுத்து நிறுத்த முடியும்.

--சீலன் 27/04/2012