Fri03292024

Last updateSun, 19 Apr 2020 8am

மக்களின் வயிற்றைக்காயப்போட்டாலும் தேர்தலில் வெல்லலாம் -- மகிந்த உறுதி

தமது இருப்பைத் தக்க வைத்துக் கொள்வதற்காய் இனங்களிடையே பகைமையை தூண்டுவதும், மதவெறியை கிண்டிவிடுதுமாய் காலம் காலமாய் காலத்தை ஓட்டியவர்களின் திமிரான நம்பிக்கையைப் பாருங்கள்.

“அத்தியாவசியப் பொருள்களின் விலை உயர்வைப் பற்றி எவரும் அச்சம் கொள்ளத் தேவையில்லை. தேர்தலில் வெற்றி பெறுவது எப்படி என்று எனக்குத் தெரியும். பொருள்களின் விலை உயர்வு தேர்தலைப் பாதிக்கும் என்று நினைக்க வேண்டாம் என ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ  கிழக்கு மாகாணசபை உறுப்பினர்களுடனான சந்திப்பின் போது தெரிவித்துள்ளார்.”


இதைத்தான் சிங்கள தமிழ் முஸ்லிம் மலையக அரசியல் கட்சிகள் செய்து வருகின்றன. மக்கள் தமது வாழ்வாதாரத்திற்குப்படும் இன்னல்கள் மறைக்கப்பட்டு வாக்குகளைப் பெற்று விடுகின்றனர். மறுபுறமாக மக்களின் நலன்சார் அமைப்புகளை அடக்குவதும் குரல்களை நசுக்குவதுமான பாசிசச்சூழலே தொடர்கிறது.


இவையெல்லாம்-- ஒருவேளை கஞ்சிக்குத்திண்டாடும் மக்கள் அணிதிரள்வதற்கான கட்சியொன்றின் வரலாற்றுத்தேவையே இன்றைய காலத்தின் தேவையென உணர்த்தி நிற்கிறது.

--முரளி 10/5/2012