Wed04242024

Last updateSun, 19 Apr 2020 8am

சீமானும்-நெடுமாறனும் தமிழ் ஈழ குத்தகையாளர்களோ?

"சிறிலங்காவில் உள்ள தமிழர்கள் தமிழீழம் கேட்கவில்லை!..."

தமிழக அரசியல் கட்சியினரிடம் இப்போது ஒரு கேள்வி கேட்க வேண்டிய தேவை உள்ளது. இலங்கையிலுள்ள தமிழர்கள் தமிழ் கட்சியினர் அனைவரும் உரிமைகளுடன் கூடிய ஒன்றுபட்ட  இலங்கை தேவை என்று கூறும் போது நீங்கள் மட்டும் ஏன் தனி ஈழம் தேவை என்கிறீர்கள்? என, இந்திய நாடாளுமன்ற எதிர்க்கட்சித் தலைவி சுஸ்மா சுவராஜ் கேட்டுள்ளார்.

இதற்கு சுஷ்மா ஸ்வராஜ் இலங்கைத் தமிழர்களை அவமானப்படுத்துகிறார் -என நெடுமாறனும்;  யார் இந்த சுஸ்மா,  இப்படிச் சொல்ல இவருக்கு என்ன அதிகாரமென, "தமிழ்ஈழ குத்தகையாளர்கள்" போல் சீமானும் குமுறுகின்றனர்.


சர்வஜன வாக்கெடுப்பு நடாத்திப் பாருங்கள் என சவால் விடுக்கின்றார்கள்!

பிரபாகரன் இப்போதும் இருக்கின்றார், "ஜீவிக்கின்றார்" என பிரபாகரனை இவ்வுலகில் அவமானப்படுத்தும் முதல் மனிதன் நெடுமாறன்தான்! தமிழ்மக்கள் அல்ல!

சென்ற மேதினத்தில் புலிக்கொடியைப் பிடித்து, பிரபாகரன்கள் இன்னும் இருக்கின்றார்கள் என காட்ட முற்படுகின்றது, மகிந்தப் பேயரசு.!

இப்பவும் தமிழர் தாயகததை; "புலிகள் பிரதேசமாகவே" பாவனை செய்கின்றது!

இந்நிலையில், தனி ஈழத்திற்காக தமிழ் மக்கள் ஏகப்பெருமபான்மையாக வாக்களித்தால்,  இனவெறி கொண்ட இவ் அரசிற்கு தமிழ் மக்கள் எல்லோரும் புலிள் தான்.

சமகால தமிழர் தாயகம்,  கருணாநிதி-சீமானின்களின் "தமிழ் ஈழ சினிமாப் பிரவேசங்கள்" அல்ல! வசனம் எழுதி, டைரக்க்ஷன் செய்து தமிழ் ஈழச் சினிமா காட்டுவதற்கு! கிட்லரின் பாஸிசப் பிரதேசங்களாகவே உள்ளது!

இதைப் புரியா உங்களின் கடதாசிப் புலி அரசியலை என்னே என்பது!

இப்பாவப்பட்டதுகளின் பகுத்தறிவு அரசியலை தமிழக மக்கள் தான் காப்பாற்ற வேண்டும்!

"தமிழ்ஈழக் குத்தகையில்" இருந்து எங்களையும் விடுவிக்க வேண்டும்!

-அகிலன் 12/05/2012