Sat04202024

Last updateSun, 19 Apr 2020 8am

யார் தான் பொய் சொல்கின்றார்கள்?......

தம்பி இப்பவும் உளார்….நெடுமாறன்!

இந்தியன் ஆமி கொடுமையே செய்யவில்லை….ஜெயமோகன்!

நாட்டில் இன்று அதியுயர் பாதுகாப்பு வலயங்கள் இல்லை!.

வீதிச் சோதனை சாவடிகள் இல்லை!.. சிலர் கூறுகின்ற கதைகளை கேட்டு ராணுவத்தை அப்புறப்படுத்த முடியாது!



வடக்குகிழக்கில் சிவில் நிர்வாகம் நடைபெறுகிறது பொலிஸாரே சிவில் நிர்வாகத்துக்கு பாதுகாப்பாக உள்ளனர்!

எனினும் சிலர் சிவில் நிர்வாகத்தில் இராணுவத் தலையீடுகள் உள்ளதாக குற்றம் சுமத்துகின்றனர். ஆனால் நாட்டு மக்கள் அமைதியாகவும், ஒற்றுமையாகவும் தானே உள்ளார்கள்!...ஜனாதிபதி

மகிந்தா, ஜெகமோகன் ஈறாக கலைஞர், நெடுமாறன் போன்ற உணர்வாளர்கள் வரை, யார்தான் பொய் சொல்கின்றார்கள்?.. இவர்கள் சொல்வதெல்லாம் உண்மையே! உண்மை தவிர வேறொன்றும் இல்லை!

இம்முறை மே 18- "ஜெயமோக எதிர்ப்"பாகியுள்ளது! கடந்த சில தினங்களாக புலம்-புலம் பெயர்வின் "பென்னாம் பெரிய "பெரும் பெரும் புரட்சித் தமிழ் இன உணர்வாளாகள்" எல்லாம் ஜெயமோகன் என்றால்; ஏதோ நாடு கடந்த தமிழ்ஈழ போஷகர், செயற்பாட்டாளர் போலவும், இப்போ சட்டென்று சறுக்கிவிட்டார் எனும் பாவனையில் எதிர்க்கின்றார்கள்! ஜெயமோகனை கண்டிக்காதவர்கள் "சுத்த தமிழனே" இல்லையென ஏறி விழுகின்றார்கள்.

இதில் இந்தியன் ஆமியுடன் கூடிக் குலாவி அரசியல் செய்த ஈ.பி.ஆர்.எல்.வினர் கூட வசை பாடி, ஜெயமோகன் எதிர்ப்புக் கூத்து அடிக்கின்றார்கள்! இதுதான் உலகமயமதலின் உன்னத எதிர்ப்பரசியல்!

ஜெயமோகன் தான் தேர்ந்தெடுத்த தத்துவார்த்த கட்டமைப்பு அரசியலில், கலை இலக்கியக் கோட்பாட்டில்  சரியாகத்தான் இருக்கின்றார். அது கொண்டுதான் மகிந்தாபோல்,  தன் சிந்தனையையும் சொல்கின்றார்! இவற்றை புரியாமல், கேள்விக்கு உள்ளாக்காமல் தடுமாறும், இலவு காக்கும் கிளிகள்தான் அதிர்ச்சி அடைகின்றன!

--அகிலன் 19/05/2012