Fri03292024

Last updateSun, 19 Apr 2020 8am

இந்தியர் செய்த இசை திருட்டுக்கு இலங்கை தமிழர்கள் நோர்வேயில் நாறடிக்கப்படுகிறார்கள் .

2003 இல் நடிகர் ஸ்ரீகாந்தின் நடிப்பில், கரு.பழனியப்பனின் இயக்கத்தில், வித்தியாசாகர் இசையமைக்க வெளி வந்த திரைப்படம் பார்த்திபன் கனவு. இதன் சில பகுதிகள் இலங்கையில் படமாக்கபட்டுள்ளது.

தற்போது இப்படத்தில் உள்ள பாடல் ஒன்றின் இசை நோர்வேயின் ஆதி குடிகளான சாமி மக்களின் இசையை திருடி இசை அமைக்கபட்டுள்ளதாகவும், தமது பாரம்பரிய இசை தவறாக பாவிக்கபட்டுள்ளதாகவும் சர்சையை கிளப்பி உள்ளது  நோர்வே தேசிய ஒளிபரப்பு  நிருவனமான NRK (sapmi). இந்த சர்ச்சையில் முன்வைக்கப்படும் விவாதங்கள் சரியாக இருந்தாலும் , விவாதத்தின் அடிபடையில் உள்ள தகவல்கள்  தவறானது ஆகும்.    (இந்தியர்களின்) இசை திருட்டு சம்பந்தமான சேதியை ஒலி/ ஒளி பரப்பிய நோர்வே தேசிய ஒளிபரப்பு  நிருவனமான NRK sapmi இந்த இசை திருட்டை இலங்கை தமிழர்கள் செய்ததாக தனது ஒலி/ ஒளி செய்தியில் கூறுகிறது .



மேலும் அந்த செய்தின் படி திருடப்பட்ட ஜொய்க் எனப்படும் சாமி மக்களின் பாரம்பரிய இசையை / பாடலை பாடியவர் "Normo Jovnna" Jon Normo  என்பவராவார்.   இந்த  திருட்டை பற்றி கருத்து சொல்லும் சாமி பாடகர் மற்றும் கலைஞர் Biret Risten Sara  ....அருவருப்பான முறையில் தமது  இசை பாவிக்கபட்டுள்ளதாக கூறுகிறார்.

 உலகத்தில் இப்போ தமிழர் என்றால், அவர்கள் இலங்கை சேர்ந்தவர்கள் என நினைகிறார்கள் பலர். மகிழ்ச்சியான விடயம்தான். அதற்காக இந்திய மூன்றாம்  தர சினிமாக்காரர்கள் செய்யும் இசை திருட்டும் எமது தலையில் விழுவது நியாயம் அல்ல.

இலங்கை தமிழர் பற்றிய  தவறான  தகவலை பரப்ப வேண்டாமென சில தமிழர்கள் நோர்வே தேசிய ஒளிபரப்பு  நிருவனமான NRK sapmi இக்கு வேண்டுகோள் விடுத்துள்ளனர்.   NRK SPMI செய்தி :   http://nrk.no/kanal/nrk_sapmi/1.8148015

முழு பாடல் தமிழில் http://www.raaga.com/player4/?id=9107&mode=100&rand=0.24980569453614299

--மணலை மைந்தன் 23/05/2012