Thu04252024

Last updateSun, 19 Apr 2020 8am

இவரை நம்பலாமா? யாரை பொன்சேகவையா?....

இவரை நம்பலாமா? யாரை பொன்சேகவையா?.... நம்ப நடக்கலாம்!.....

வடக்கில் சிவில் நிர்வாகத்தில் இராணுவத்தினரின் தலையீடு இருக்கிறது என்பதை நான் முழுமையாக ஏற்றுக் கொள்கிறேன். சிவில் நிர்வாகத்தில் இராணுவத்தினர் தலையிடக் கூடாது. அது முழுமையாக நிறுத்தப்பட வேண்டும். இராணுவம் இராணுவத்தின் வேலையை மட்டும்தான் செய்ய வேண்டும்.

கடந்த மூன்று வருடங்களில் இராணுவத்தை இவர்கள் சிவில் நிர்வாகத்திலிருந்து விலக்கியிருக்கலாம். இப்போது இவர்களால் போடப்பட்டிருக்கும் அதிகாரிகள் கூட தகுதிவாய்ந்தவர்கள் அல்லர். அரசியல் அடிவருடிகளைத்தான் இவர்கள் நியமித்துள்ளனர். யாழ்ப்பாணத்தைப் பாருங்கள். இதுதான் நிலைமை. கொள்கை இல்லாமல் போனால் இப்படித்தான் இருக்கும் என்றார்

தளபதியாரே! விடுதலைக்குப் பின்னான தங்களின் நடவடிக்கைகள், பரபரப்பாகவும் திரிலாகவும்தான் உள்ளது. இது தங்கள் ஆட்டுவிப்பாளர்களின் நாடகத்துடனான சுயமோ? அல்லது முற்றிலும் அதிகாரத்திற்கெதிரானதின், மக்கள் நலம் கொண்ட "நர்ச்சூரல்"தானோ?

எதுவானாலும் சிங்கள மக்களுக்கு ஓ.கே.! ஆனால் முள்ளிவாய்க்காலிலான உங்களின் பிதற்றல்தான் என்னவோ? தங்கள் தலைமையில் நடந்தது படுகொலை அல்ல?, சிறுகொலை கூடக் கிடையாது என்கின்றீர்களே?  

இங்கே தான், தமிழ்மக்கள் முன் முழு நிர்வாணமாகிய, அசல் அம்மணியாகியுள்ளீர்கள்!

இதுவொன்று போதுமே தங்களை உரைத்துப் பார்க்க….தாங்களும், தங்களை விடுவித்த வரும், தமிழ் மக்கள் விரோதத்தில்-பாசிஸ சர்வாதிகாரத்தில் ஒரு நாணயத்தின் இரு பக்கங்களே! இப்போ உங்கள் ஓதல் எல்லாம் சாத்தானின் வேதம் தான்! தங்களை நம்ப நடக்கலாம். ஆனால்….

--அகிலன் 25/05/1963