Fri04192024

Last updateSun, 19 Apr 2020 8am

"புத்தத்தில் அராஜகம்" செய்கின்றனர்.

"பிக்குகள் நாடாளுமன்றத்துக்கு செல்வதை அனுமதிக்க முடியாது"  என்கின்றார் அஸ்கிரிய பீடாதிபதி
.
"நாட்டை ஆட்சி செய்வது குறித்து பௌத்த விகாரைகளில் மதத் தொண்டு ஆற்றிக்கொண்டே அரசியல்வாதிகளுக்கு ஆலோசனைகளையும் அறிவுரைகளையும் வழங்க முடியும்".

 

"நாடாளுமன்றில் செயற்பாட்டு அரசியலில் ஈடுபடாமலேயே பௌத்த பிக்குகளினால் நாட்டுக்கு அளப்பரிய சேவைகளை ஆற்ற முடியும் என்கின்றார்!"

இதைச் சொல்பவரும் ஓர் பௌத்த தர்மம் கொண்ட பீடாதிபதிதானே! அரசின் அரவணைப்போடு பௌத்த மதத்தின் வெறிகொண்ட சில பிக்குகளின் இன-மத விரோத கொடுமைகளைக் கண்டே இவர் இப்படிச் சொல்கின்றார்!

"நாட்டை ஆட்சி செய்வது குறித்து பௌத்த விகாரைகளில் மதத் தொண்டு ஆற்றிக்கொண்டே அரசியல்வாதிகளுக்கு ஆலோசனைகளையும் அறிவுரைகளையும் வழங்க முடியும்". இதைத் தான் செய்யா விட்டாலும் பரவாயில்லை. சாதாரண துறவிக்கு உள்ள தர்மத்தின் படியாவது நடக்கின்றார்களா?

இதில் இவர்களைக் குறைகூறிப் பயனில்லை. ஆறில் ஐந்து பெரும்பான்மையுடன், சகல நிறைவேற்றுடன் உள்ளவரே இத்துறவிகளின் கொடுமைகளிற்கு துணை போகின்றார்!

இத்துணையில் இவர்களும் "புத்தத்தில் அராஜகம்"செய்கின்றனர். ஆட்டுவிப்பவரே அராஜகவாதியாகும் போது ஆடுபவர்களுக்கா பஞ்சம்!?