Fri03292024

Last updateSun, 19 Apr 2020 8am

கொலைக்கார கிழக்கின் வசந்தங்களும், கிழக்குமாகாண தேர்தலும்...

குற்றச் செயல்களில் ஈடுபட்ட நபர்களை தேர்தலில் போட்டியிட அனுமதிக்க வேண்டாம் என நாட்டின் பிரதான அரசியல் கட்சிகளுக்கு தேர்தல் கண்காணிப்பு நிறுவனமான பவ்ரல் அமைப்பு கோரிக்கை விடுத்துள்ளது.

ஊழல் மோசடிகளில் ஈடுபட்டவர்கள், போதைப்பொருள் வர்த்தகம், குற்றச் செயல்களில் ஈடுபட்டவர்களுக்கு வேட்பாளர் பட்டியலில் சந்தர்ப்பம் அளிக்க வேண்டாம் என அமைப்பின் தலைவர் ரோஹண ஹெட்டியாரச்சி கேட்டுக்கொண்டுள்ளார்.

தமது பிரதிநிதிகளைத் தெரிவு செய்வதில் மக்களும் பொறுப்புணர்ச்சியுடன் செயற்பட வேண்டுமெனவும் கல்வித் தகமை, அரசியல் நோக்கம், நன்னடத்தை மற்றும் சமூக அந்தஸ்து ஆகிய காரணிகளை கருத்திற் கொண்டு மக்கள் வாக்களிக்க வேண்டுமெனவும் அவர் அறிவுறுத்தியுள்ளார்.

எல்லா குற்றங்களையும் கூறியுள்ள  பவ்ரல் அமைப்பு தலைவர்  மிக முக்கிய குற்றங்களை மறந்து விட்டார்  போல தெரிகிறது. அவையாவன:  படுகொலை, ஆட்கடத்தல், பாலியல் வன்முறை, சிறுவர்- பெண்கள் மீதான வன்கொடுமை போன்றவை. சிங்கள மக்கள் தமது பகுதில் சந்திக்க போகும் அரசியல்வாதிகள் எப்படியானவர்கள் என்று யாம் அறியோம் .

ஆனால் கிழக்கு  மக்களை (அடக்கி) ஆழ துடிக்கும் கிழக்கின் வசந்தங்கள் (விளக்கு மாத்துக்கு குஞ்சம் கட்டியது போல) பிள்ளையானும், இனியபாரதியும் மேற்படி அனைத்து கிரிமினல் குற்றங்களையும் புரிந்த பஞ்சமா பாதகர்கள். மக்கள்  தமது தலைவர்களை பொறுப்புடன் தெரிவு செய்ய வேண்டுமென்பது உண்மை தான்.

ஆனால் இன்று இரு கொலைக்காரர்கள் அல்லது அரசபாசிசத்தை தலையில்காவும் பொறுக்கி அல்லது தமிழ் குறுந்தேசியத்தை வைத்து வியாபாரம் செய்யும்  மூன்றாம் தர வியாபாரி, இவர்களில் ஒருவரை தேர்வு செய்யும் தெரிவே   மக்கள்  முன் உள்ளது.  ஆகவே மக்கள் தமது நலனில் நின்று போராட விரும்பினால்,அவர்கள் முன்னுள்ள ஒரே தெரிவு, தேர்தலை புறக்கணிப்பதே !