Fri04192024

Last updateSun, 19 Apr 2020 8am

நாட்டு நடப்புகள்.... 20/07/2012


தமிழ்க் கூட்டமைப்பு மீண்டும் பேச்சுக்கு வர வழி ஏற்படுத்தி தருவதாகபசில் ஜனாதிபதிக்கு உறுதி!


தமிழ்த் தேசியக் கூட்டமைப்பை மீண்டும் பேச்சுவார்த்தைக்கு மேசைக்குகொண்டுவந்து அரசாங்கத்துடன் இணக்கப்பாடொன்றைக் காண வழி ஏற்படுத்தித்தருவதாக பசில் ராஜபக்ச ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவிற்கு உறுதிவழங்கியுள்ளார். இதற்கமைய அமைச்சர் பசில் ராஜபக்சவின் தலையீட்டின் கீழ் பிரபல தமிழ் வர்த்தகர் சிலருக்கும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் இரண்டு பிரதிநிதிகளுக்கும் இடையே சில சுற்றுப் பேச்சுவார்த்தைகள் நடத்தப்பட்டுள்ளன.


முஸ்லிம் காங்கிரசுடன் இணைந்து ஆட்சி அமைக்கத் தயார்!


கிழக்கு மாகாணத் தேர்தலில் வெற்றி பெற்று முஸ்லிம் காங்கிரஸுடன் இணைந்துஆட்சி அமைப்பதற்கு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு தயாராக உள்ளது. அவ்வாறு கூட்டு அரசு அமைந்தால் அது தமிழ்  முஸ்லிம் சமூகங்களுக்கு பெரும் விமோசனத்தையும் நன்மையையும் ஏற்படுத்தும் என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினரும் பேச்சாளருமானசுரேஸ்பிரேமச்சந்திரன்  தெரிவித்தார். எனினும் கூட்டமைப்பின் இந்த அழைப்புக் குறித்து ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸினால் இப்போது எந்த முடிவுக்கும் வரமுடியாது எனவும் தேர்தலுக்குப் பின்னர் அது குறித்துத் தீர்மானிக்கப்படும் எனவும் அதன் தலைவரும் நீதியமைச்சருமான ரவூப் ஹக்கீம் தெரிவித்தார்.

 


தேர்தலின் பின் முஸ்லிம் காங்கிரஸ் இணையும்!


எதிர்வரும் கிழக்கு மாகாணசபைத் தேர்தலின் பின்னர் அரசுடன் இணைந்து செயற்படுவது என்ற உடன்படிக்கையின் பிரகாரமே ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் மேற்படி தேர்தலில் தனித்துப் போட்டியிடுவது என்ற தீர்மானத்தை எடுத்துள்ளது என அரசு நேற்று அறிவித்தது. தேர்தல் காலங்களின் போது தங்களது பிரதேசத்தினதும் அந்தப் பிரதேச மக்களினதும் உரிமைகளைப் பாதுகாப்பதற்காக முன்வரும் அரசியல் கட்சிகள் பல்வேறு உடன்படிக்கைகளை மேற்கொண்டு அரசுடன் இணைந்து போட்டியிடுவது வழமை. இருப்பினும் அரசுடன் இணைவதற்கு அந்தக் கட்சிகள் பல்வேறு நிபந்தனைகளை விதிக்கின்ற போதிலும் அரசுடன் இணைய வேண்டும் என்பதே ஸ்ரீலங்கா சுதந்திரகூட்டமைப்பு விதிக்கும் ஒரே நிபந்தனையாகும். அரசியல் கட்சிகளுக்குள் இடம்பெறும் சிக்கலான நிலைமைகளைப் பொறுத்தே அரசியல் தீர்மானங்கள் எடுக்கப்படுகின்றன. ஒன்றிணைந்து மேற்கொள்ளப்படுகின்ற அரசியல் பயணத்தில் பல்வேறு விவாதங்கள் இடம்பெறுவதுவழமை!.


நீதி அமைச்சர் கண்டனம்


மன்னார் நீதிவான் அச்சுறுத்தப்பட்ட சம்பவத்தை வன்மையாகக் கண்டிப்பதாக நீதி அமைச்சர் ரவூப் ஹக்கீம் தெரிவித்துள்ளார். இலங்கை சட்டத்தரணிகள் சங்கத்தின் உறுப்பினர் என்ற வகையிலும் நீதி அமைச்சர் என்ற வகையிலும் குறித்த சம்பவத்தினை தான் வன்மையாக கண்டிப்பதாகவும் அவர் குறிப்பிட்டார்


அமைச்சருக்கு எதிரான எதிர்ப்பு நடவடிக்கை!


மன்னார் நீதிமன்றத்தின் மீதான தாக்குதல் மற்றும் மன்னார் நீதவானை அமைச்சர் ரிசாத் பதியுதீன் அச்சுறுத்திய சம்பவத்திற்கு எதிர்ப்பு தெரிவித்துஇ இன்று யாழ். நீதிமன்ற சட்டத்தரணிகள் ஒன்று திரண்டு அமைச்சர் ரிஷாத்துக்கு எதிராக தமது எதிர்ப்பை வெளியிட்டுள்ளனர்.இன்று காலை 11 மணியளவில் யாழ். நீதிமன்றின் முன்னால் ஒன்று கூடிய சட்டத்தரணிகள்இ அமைச்சர் ரிஷாத்துக்கு எதிராக எழுதப்பட்ட பதாதைகளை தாங்கியும் கோஷங்களை எழுப்பியும் தமது எதிர்ப்பை வெளிப்படுத்தினர்.இதன்போது நீதிமன்றப் பணியாளர்களும் கலந்து கொண்டனர்.!


புலிக்கொடிக்கு விசாரணை!


யாழ். நெல்லியடி பகுதியில் புலிக் கொடியுடன் வந்தவர்கள் குறித்து விசாரணைகள் முன்னெடுக்கப்படுவதாக ஊடக அமைச்சரும் அமைச்சரவையின்பேச்சாளருமான கெஹெலிய ரம்புக்வெல தெரிவித்தார்.


பாராளுமன்றத்திற்கு தீ மூட்டவேண்டும்!


பாராளுமன்றத்துக்கு தீ மூட்ட வேண்டும் என்று சபையில் கூறப்பட்ட கூற்று தொடர்பில் நேற்று வியாழக்கிழமை ஆளும் கட்சி சபையில் தனது கடுமையான எதிர்ப்பினை வெளியிட்டது. இதனையடுத்து எழுந்த எதிர்க்கட்சித் தலைவர் கூறுகையில் பாராளுமன்றத்துக்கு தீ மூட்டுவது எமது நோக்கமல்ல. இந்த அலங்காரக் கட்டிடத்தை தீ மூட்டி நாசப்படுத்துவதற்கான எண்ணம் எம்மிடத்தில் கிடையாது. அதற்கான தேவையும் எமக்கு இல்லை.எனினும் இந்த பாராளுமன்றத்துக்கு கோமாளிகள் சமூகமளிக்காதிருந்தால் சரி என்றார்.