Sat04202024

Last updateSun, 19 Apr 2020 8am

பாடசாலைகளின் இணைப்பை எதிர்த்து பெற்றோர்கள் ஆர்ப்பாட்டம்!!

கட்டுகஸ்தோட்டை - நுகவெல பிரதேச மூன்று பாடசாலைகளின் இணைப்பை எதிர்த்து பெற்றோர்கள் ஆர்ப்பாட்டம்:

கட்டுகஸ்தோட்டை - நுகவெல பிரதேசத்தின் மூன்று பாடசாலைகளை இணைக்கும் நடவடிக்கைக்கு எதிர்ப்புத் தெரிவித்து பெற்றோர்கள் இன்று ஆர்ப்பாட்டமொன்றில் ஈடுபட்டனர். நுகவெல பெண்கள் பாடசாலைக்கு முன்பாக இன்று முற்பகல் இந்த ஆர்ப்பாட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளது.

நுகவெல கனிஷ்ட வித்தியாலயம் - நுகவெல மத்தியமகா வித்தியாலயம் ஆகிய இரண்டையும் நுகவெல பெண்கள் பாடசாலையுடன் ஒன்றாக இணைக்க அரச கல்வித் திணைக்களம் முடிவெடுத்திருந்தது. ஆயினும் பெற்றோருக்குப் பிடிக்காத இந்த இணைப்புத் திட்டத்தினை முழுமையாக எதிர்த்து நுகவெல பெண்கள் பாடசாலையில் கல்வி கற்றுவரும் மாணவியரின் பெற்றோர்கள் இப்போராட்டத்தை தாமாகவே முன்வந்து நடாத்திவருகின்றனர்.

மாணவரின் எண்ணிக்கைக் குறைவும் பொருளாதார நெருக்கடியும் நிர்வகிப்புச் சிக்கலும் இந்த பாடசாலைகளின் இணைப்புக்கு காரணங்களாக இருக்கலாம். ஆயினும் பொதுவாகவே வலதுசாரி அதிகார மட்டங்கள் எப்போதுமே மக்களின் முழுமையான நலன் கருதி எதனையும் செய்வதில்லை. வலதுசாரிகளுக்கு சுரண்டல் நோக்கமே அதிகமாக இருக்கும்.

பிரதேச வாரியாக - இனங்களின் ரீதியாக மக்களைப் பிரித்த இந்த ஆட்சியாளர்கள் மூன்று பாடசாலைகளை இணைக்கிறார்கள் என்பதும் இதுவரை ஆண் பெண் என கல்வி கற்கும் இடங்களாகப் பிரித்து வைத்திருந்தவர்கள், மாணவரை மாணவியரின் பாடசாலைக்குள் திடீரென புகுத்துதல் என்பதும் பல வகையான பிரச்சினைகளை பெற்றோரிடத்திலும் பாடசலையிலும் உருவாக்கும் என்பதை இந்த அரச நிர்வாகங்கள் கண்டும் காணாதது மாதிரி பாடசாலைகளை இணைக்க முற்படுவதில் தமக்குப் புதிய புதிய பிரச்சினைகளை அரசே உருவாக்குகின்றதாக போராட்டத்தில் இணைந்த பெற்ரோரில் தமது பெயர் குறிப்பிட விரும்பாதவர் கூறினார்.

-கட்டுகஸ்தோட்டையில் இருந்து முன்னணியின் தோழர்.