Sat04202024

Last updateSun, 19 Apr 2020 8am

இந்திய மேலாதிக்க அரசியலின் கபடநாடகம்!

தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்துக்கு இந்தியாவில் தடை விதிக்கப்பட்டுள்ளமையும், அந்தத் தடை இந்திய மத்திய அரசாங்கத்தினால் நீடிக்கப்படுவதும் சரியானது என இந்திய தீர்ப்பாயம் தீர்ப்பு வழங்கியுள்ளது.

புலிகள் மீதான தடை சரியானதா? இல்லையா? என்பது தொடர்பில் இந்தியாவின் சட்டவிரோத நடவடிக்கைகள் தடுப்பு தீர்ப்பாயமானது விசாரணைகளை நடத்தி வந்தது. இந்நிலையிலேயே, தனது விசாரணைகளை முடித்துக்கொண்ட தீர்ப்பாயம், தனது தீர்ப்பினை இந்திய வர்த்தமானி மூலம் அறிவித்துள்ளது என இந்திய செய்திகள் தெரிவிக்கின்றன.

இந்தியாவின் முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி, கடந்த 1991ஆம் ஆண்டு படுகொலை செய்யப்பட்டதை அடுத்து தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்துக்கு இந்தியாவில் தடை விதிக்கப்பட்டது. இந்த தடை இரண்டு ஆண்டுகளுக்கு ஒருமுறை நீடிக்கப்பட்டு வருகிறது.

 

இறுதியாக, கடந்த 2012ஆம் ஆண்டு மே மாதம் 14ஆம் திகதி விடுதலைப் புலிகள் மீதான தடையை இந்தியாவின் மத்திய உள்விவகார அமைச்சு நீடித்தது. இந்நிலையில், புலிகள் மீதான தடை நீடிப்பு சரியானதா? இல்லையா? என்பது தொடர்பில் நீதிபதி வி.கே.ஜெய் தலைமையில் கடந்த சில மாதங்களாக விசாரணைகள் நடத்தப்பட்டு வருகின்றன.

 

இதனையடுத்து, விடுதலைப் புலிகள் மீதான தடையை நீடித்து மத்திய உள்விவகார அமைச்சு வெளியிட்ட அறிவிப்பு சரியானதே என்று நீதிபதி எம்.கே.ஜெய் தலைமையிலான தீர்ப்பாயம் உறுதிப்படுத்தியுள்ளது.இது குறித்த அறிவிப்பு தமிழக அரசின் வர்த்தமானியில் வெளியிடப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

புலிகளை தடைசெய்தது சரியா பிழையா என வாதம் நடத்திக் கொண்டு, தனது மேலாத்திக்க நேக்கத்திற்காக புலம்பெயர் நாடுகளில் புலிகளின் அமைப்புக்களுடன் நேரடியாகவும் மறைமுகமாகவும் இந்தியா தொடர்புகளை ஏற்படுத்துகின்றது.

 

மேலாதிக்க அரசியலை தனது உளவு நிறுவனம் பார்த்துக் கொண்டிருக்க மக்களை ஏமாற்றவே இந்த நீதிமன்ற நாடகம். இந்த நீதிமன்ற நாடத்தின் மூலம் புலிகளுக்கு எவ்வித இடையூறு ஏற்படும் பட்டசத்தில் ஆதிக்க நலன்கருதி புலிகளுக்கு உதவிபுரியும்.இப்போ பிரபாகரன் இல்லை ஆனால் அந்த இடத்திற்கு யாரை நியமிக்கலாம் என்றும் உளவுத்துறை ஆலோசித்து வருகின்றது.