Thu04182024

Last updateSun, 19 Apr 2020 8am

"போர்க்குற்ற விசாரணை தேவை" -மக்களை ஏமாற்றும் செயல்!

"போர்க்குற்ற விசாரணை தேவை" உலகத் தமிழர் பேரவை மாநாடு பிரிட்டனின் நாடாளுமன்றக்கட்டிட வளாகத்தில், நேற்றைய தினம் பிரித்தானிய பாராளுமன்ற அரசியல் கட்சிகளை சேர்ந்த தலைவர்களையும் பிரமுகர்களையும் கூட்டி இடம்பெற்றது.

அன்று யுத்தம் நடந்த பொழுது, மக்களை விட்டு விட்டு யுத்தத்தினை தொடரும்படி கோராது மக்களை முள்ளிவாய்கால் கொலைக்களத்திற்கு அனுப்பி கொல்லக் கொடுத்து யுத்தத்துக்கு துணையாக இருந்த தமிழ் குறுந்தேசியவாதிகளும், அந்நிய அரசுகளிற்கு போராட்டத்தை காட்டிக்கொடுத்த புலிபினாமிகளும், "மக்களை கொல்ல விடமாட்டோம் காப்பாற்றுவோமென" பொய் வாக்குறுதி கொடுத்து மறுபுறத்தில் இந்த நூற்றாண்டின் பாரிய இனவழிப்புக்கு சகல ராணுவ, பொருளாதார உதவிகளையும் வழங்கிய பிரித்தானிய அரசியல்வாதிகள் வரை கூடி கும்மியடித்து மக்களை ஏமாற்ற போட்ட கூட்டமே இது. அன்று மக்கள் கொத்துக் கொத்தாக  படுகொலைக்குள்ளானதனை தடுக்க திராணி இல்லாதவர்கள். போர்க்குற்ற விசாரணை தேவை என்பது வெறும் கண்துடைப்பு.

போர்க்குற்ற விசாரணை என்பது அமெரிக்கா மற்றும் அதன் கூட்டாளிகள் இலங்கையில் தமது பொருளாதார முயற்சிகளை நிறுவுவதற்கு, இலங்கை அரசினை நெருக்கடிக்கு உள்ளாக்க பாவிக்கப்படும் ஒரு தந்திரம். இந்த “போர்க்குற்ற விசாரணை” எனும் நாடகத்தின் மறுபுறம், முறையான விசாரணை நடத்தப்பட்டால் ஐ.நா.சபை உட்படப் பல முக்கிய நாடுகள் கூட இத்தகைய விசாரணையிலிருந்து தப்பமுடியாது. நாடகம் இது வெறும் தமிழ் மக்களை ஏமாற்றும் செயல்.

இலங்கையில் ஒரு பாரிய இனவழிப்பு இடம்பெற்றுள்ளதனை எவருமே மறுதலிக்க முடியாது. அதற்க்கான நீதி விசாரணை தேவை என்பதிலும் எந்தவிதமான கேள்விக்கும் இடம் கிடையாது. ஆனால் யார் அதனை செய்வது என்பதில் தான் கேள்வியுள்ளது.