Fri04192024

Last updateSun, 19 Apr 2020 8am

கோத்தப்பாயாவின் பினாமி அமைப்பான "பொதுபல சேனா"விற்கு எதிரான கண்டனப் போராட்டம் அரச படைகளால் கலைப்பு!

கொழும்பில் தும்முள்ள சந்தியில் கடும்போக்கு பௌத்த அமைப்பான பொது பல சேனாவின் தலைமை அலுபலகத்துக்கு முன்பாக, அவர்களது கொள்கைகளை கண்டித்து அமைதி எதிர்ப்பு நிகழ்வு ஒன்றை நடத்த முயன்ற ‘’பொதுபல சேனாவை கேள்விக்குள்ளாக்கும் பௌத்தர்களின் அமைப்பு’’ என்னும் ஃபேஸ்புக் குழு ஒன்றின் உறுப்பினர்களை பொலிஸார் கலைத்ததாகவும், பொதுபலசேனா அமைப்பின் உறுப்பினர்கள் என்று நம்பப்படுபவர்கள் அச்சுறுத்தியதாகவும் அந்த நிகழ்வில் கலந்து கொண்டவர்கள் தெரிவித்துள்ளனர்.

இலங்கையில் மிக நீண்ட காலமாக நிகழ்ந்த யுத்தத்தின் காரணமாக நாட்டின் பொருளாதாரம் மிகவும் படு மோசமான நிலையில் உள்ளது. உள்நாட்டு யுத்தத்தினை அரசு வெற்றி கொள்ள முதலாளித்துவ வல்லரசு நாடுகள் பொருளாதார ரீதியாகவும் ஆயுதங்களாகவும் தொழில் நுட்ப உதவியாகவும் பல மில்லியன் பணத்தினை வாரி வழங்கின. இவை எல்லாம் இலவசமாக அல்ல. கடனாகவே கொடுத்தன.

இந்தக் கடன்களை வட்டியுடன் மக்களின் தலைகளில் அரசாங்கம் சுமத்தியுள்ளது. இதன் காரணமாக வாழ்க்கை செலவு விண்ணை நோக்கி உயர்ந்துள்ளது. பெரும்பாலான மக்கள் நாளாந்த வாழ்வுக்காக அல்லப்படுவதுடன் அரசின் மேல் வெறுப்படைந்து இருக்கின்றார்கள்.

முன்பெல்லாம் தமிழ் மக்களுடான யுத்தத்தினை காரணம் காட்டி இனவாத வெறியினை ஊட்டியதன் மூலம் மக்களின் வறுமைக்கான காரணத்தினை தமிழ் மக்களின் நாட்டு பிரிவனையை காரணம் காட்டி வாயடைக்க வைத்தது அரசு. தற்போது யுத்தம் முடிவடைந்து விட்டது. அதனை இனியும் காரணம் கூற முடியாது.

எனவே ஆளும் முதலாளித்துவவாதிகள் புதிய பிரச்சனைகளை தோற்றுவிக்கின்றனர். கடந்த காலத்தில் எப்படி தமிழ்-சிங்கள இன மக்களை இன, மத ரீதியில் பிரித்து வைத்து நாட்டையும் மக்களின் சொத்துக்களையும் கொள்ளையிட்டனரோ, அதே வழியில் இன்று பௌத்த அமைப்பக்களையும், சிங்கள தீவிரவாதம் பேசும் அமைப்புக்களையும் முஸ்லீம் மக்களிற்கு எதிராக ஊக்குவிப்பதுடன் அரச படைகளின் ஆதரவுடன் களத்திலும் இறக்கி விட்டுள்ளனர்.

கோத்தப்பாயவின் முழு ஆதரவும் இந்த அமைப்புக்களிற்கு உண்டு. அண்மையில் பொது பல சேனாவின் (பௌத்த தீவிர மதவாத அமைப்பு) தலைமையகத்தினை கோத்தப்பாய திறந்து வைத்ததன் மூலம். இந்த நாட்டின் முதலாளித்துவ ஆட்சியாளர்கள் நோக்கம் இனவாதம் மற்றும் மதவாதம் கொண்டு மக்களை பிரித்து வைத்து நாட்டை குழப்பத்தில் வைத்திருப்பதாகும்.

{jcomments on}