Tue04162024

Last updateSun, 19 Apr 2020 8am

இனவாதப் போக்கை எதிர்த்து கொழும்பில் பேரணி

கடும்போக்கு பௌத்த அமைப்புகள் இனவாத நடவடிக்கைகளில் ஈடுபடுவதாக பேரணியில் ஈடுபட்டவர்கள் குற்றச்சாட்டு

இலங்கைத் தலைநகர் கொழும்பில் நடந்த இனவாத எதிர்ப்பு பேரணியில் நூற்றுக்கணக்கானவர்கள் கலந்துகொண்டுள்ளனர்.

சிறுபான்மை முஸ்லிம் சமூகத்தை இலக்குவைத்து அண்மைக்காலமாக கடும்போக்கு பௌத்த அமைப்புக்கள் முன்னெடுத்துவரும் இனவாத நடவடிக்கைகளுக்கு எதிராகவே இந்தப் பேரணி நடந்துள்ளது.

இந்த இனவாதத்துக்கு எதிரான ஊர்வலத்தை ''சர்வதேச சதி'' என்று கூறி ஒரு இடத்தில் ஒரு இளைஞர் குழு தடுக்க முற்பட்டது. ஆனால், அவர்கள் பொலிஸாரால் கலைக்கப்பட்டனர்.

கிறிஸ்தவர்களும் அங்கு கடந்த காலங்களில் தாக்குதல்களுக்கு உள்ளாகியிருந்தனர்.

இலங்கையில் உள்நாட்டு யுத்தம் கடந்த 2009-ம் ஆண்டில் முடிவுக்கு வந்தபின்னர், அங்கு இனநல்லுறவை வளர்க்கவும் நல்லிணக்கத்தை ஏற்படுத்தவும் அரசாங்கம் முறையான நடவடிக்கைகளை எடுக்கவில்லை என்று மனித உரிமை ஆர்வலர்கள் குற்றஞ்சாட்டுகின்றனர்.

இலங்கையின் மனித உரிமை விவகாரம் தொடர்பில் சர்வதேச நாடுகளும் அந்நாட்டின்மீது கடுமையான அழுத்தங்களைக் கொடுத்துவருகின்றன.

இலங்கையில் காமன்வெல்த் மாநாட்டை நடத்துவது தொடர்பில் கனடிய வெளியுறவு அமைச்சர் தமது அதிருப்தி தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.