Fri04192024

Last updateSun, 19 Apr 2020 8am

சட்டத்தின் ஆட்சி மோசமடைந்துள்ளதாக புலம்பும் நீதி மந்திரி!

தமிழ் முஸ்லிம் தேசிய கூட்டமைப்பின் தலைவராகிய அசாத் சாலி அவர்கள் கைது செய்யப்பட்டு, பயங்கரவாதத் தடைச் சட்டத்தின் கீழ் விசாரணக்கு உட்படுத்தப்பட்டிருப்பதன் மூலம், இலங்கையில் சட்டத்தின் ஆட்சி மோசமாகியிருப்பதாக அரசாங்கத்தில் நீதியமைச்சராகிய ரவூப் ஹக்கீம் தெரிவித்திருக்கின்றார்.

நீதி மந்திரியே தனக்கு கீழ் உள்ள சட்டத்துறையில் என்ன நடந்து கொண்டிருக்கின்றது என அறியமுடியாத நிலையில் உள்ளார். இலங்கையில் அனைத்தையும் தீர்மானிப்பது மகாராஜா ராஜபக்சா குடும்பத்தினர் தான். தாங்கள் ஜனநாயக ஆட்சி புரிகின்றோம் என மக்களை ஏமாற்ற ஒரு மந்திரி சபை. இந்த மந்திரிகள் வெறும் டம்மி டப்பாக்கள்.

சொந்த பிழைப்புக்காகவும், சொகுசு வாழ்வுக்காகவும் மகிந்த சர்வாதிகாரியுடன் ஒட்டிக் கொண்டு இருக்கும் இவர்கள், மக்கள் நலன் சார்ந்து செயற்படுவார்கள் என நம்புவது மக்களின் முட்டாள்தனமே. விரைவில் வர இருக்கின்ற தேர்தலில் ஓட்டு வாங்க இந்தப் புதுக்கதை, மகிந்தாவிடம் பதவி சுகங்களிற்க்காக குறுகி கைகட்டி வாய் பொத்தி நின்று, "மன்னா நீ என் மதத்தை, மக்களை என்ன கொடுமைப்படுத்தினாலும் நான் ஒன்றுமே கேட்க மாட்டேன் என் மந்திரி பதவியே எனக்கு முக்கியம்"  என பதவிக்காக இரங்குவது தான் இந்த மந்திரியின் உண்மையான முகம்!